ஸ்க்ரப்பர், ஸ்டீல் நார், இனி எதுவும் தேவைப்படாது. செம்பு பாத்திரத்தை 1 நிமிடத்தில் தங்கம் போல ஜொலிக்க வைக்க இந்த 1 பொருள் போதும்.

copper
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் எல்லோர் வீட்டிலும் பியூரிஃபையர் உள்ளது. இருப்பினும் செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதை பருகினால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. இது நம்மில் நிறைய பேருக்கு தெரியும். குடிக்கிற தண்ணீரை ஊற்றி வைத்து இருக்கும் செம்பு பாத்திரம் சீக்கிரமே கறுத்துப் போய்விடும் அல்லவா. தினமும் இந்த பாத்திரத்தை சுத்தம் செய்யவில்லை என்றாலும் வாரத்தில் ஒரு நாளாவது கட்டாயமாக இதை தேய்த்து சுத்தம் செய்வோம். அதிலும் குறிப்பாக பின் சொல்லக் கூடிய பொருட்களை போட்டு செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்தால் 10 நாட்கள் வரை அந்த செம்பு பாத்திரம் அப்படியே பளபளப்பாக கருத்துப் போகாமல் இருக்கும்.

செம்பு பாத்திரத்தை பளபளப்பாக மாற்ற சிரமப்பட்டு, நார் போட்டு தேய்த்து தேய்த்து கழுவ வேண்டும். ஆனால் அந்த சிரமம் இனி கிடையாது. இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. ஸ்கிரப்பர் இல்லாமல் இல்லாமல், பாத்திரத்தில் கீறல் விழாமல் உங்கள் கையை கொண்டு தேய்த்தாலே செம்பு பாத்திரம் பளபளப்பாக மாறும். நேரத்தைக் கடத்தாமல் டிப்ஸை பார்த்துவிடுவோம்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கோலமாவு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – 1 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு – 2 டேபிள் ஸ்பூன், இந்த 3 பொருட்களை போட்டு உங்கள் கையைக் கொண்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த மூன்று பொருட்களும் ஒன்றாக சேரும் போது அப்படியே நுரை பொங்கி வரும். இந்த கலவையை வைத்துதான் செம்பு பாத்திரத்தை தேய்க்கப் போகின்றோம்.

அரிசி மாவு சேர்க்காத கடையிலிருந்து வாங்கிய கோலப் பொடியை அப்படியே இந்தக் குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு முழு எலுமிச்சம் பழத்தில் இருந்து எடுக்கப்படும் சாறை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த கலவையை அப்படியே உங்களுடைய கைகளால் எடுத்து, கருத்து இருக்கும் செம்பு பாத்திரத்தின் மேல் வைத்து கையை கொண்டு லேசாக தேய்த்தாலே அப்படியே அந்த இடம் பளபளப்பாக மாறிவிடும். அழுத்தி கூட தேய்க்க வேண்டாம். உங்களுடைய கையிலேயே இந்த கலவையை தொட்டு தேயுங்கள். கைக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ, என்று பயப்படவேண்டாம். இதில் நாம் வினிகர், சோடா உப்பு எதுவுமே சேர்க்கவில்லை. ஆகவே உங்களுடைய கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

செம்பு பாத்திரத்தின் உள் பக்கமும் இந்த கலவையை தொட்டு சுத்தம் செய்து விட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை கொண்டு செம்பு பாத்திரத்தை சுத்தமாக கழுவி விடுங்கள். ஒரு காட்டன் துணியை போட்டு செம்பு பாத்திரத்தை உடனடியாக துடைத்துவிட வேண்டும். இப்படி செய்தால் 10 நாளைக்கு உங்களுடைய செம்பு பாத்திரம் எப்போதும் பளபளப்பாக தான் இருக்கும். பூஜை அறையில் இருக்கக்கூடிய செம்பு பாத்திரம், செம்பு வாட்டர் பாட்டில், இப்படி எல்லா செம்பு பொருட்களையும் இந்த மெத்தடில் சுத்தம் செய்து பாருங்க. நிச்சயமாக உங்களுக்கு கை வலிகாது. அதேசமயம் உங்கள் வீட்டு செம்பு பாத்திரம் எப்போதும் தங்கம் போல ஜொலிக்க கொண்டே இருக்கும். 100% கேரண்டீ.

- Advertisement -