காப்பர் வாட்டர் கேன் சுத்தம் செய்யும் முறை

copper-watercan
- Advertisement -

காப்பர் பாத்திரங்களை எளிமையாக சுத்தம் செய்ய அந்த காலத்தில் இருந்தே பெரியவர்கள் நமக்கு பல வழிமுறைகளை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்று காப்பரில், அதாவது செம்பு உலோகத்தில் வாட்டர் கேன்களும் நமக்கு கிடைக்கிறது. வாட்டர் கேனுக்கு மேல் பக்கம் சுலபமாக தேய்த்து பளபளப்பாக மாற்றி விடலாம்.

ஆனால் வாட்டர் கேனுக்கு உள்பக்கம், கைவிட்டு சுத்தம் செய்ய முடியாத இடத்தில் படிந்திருக்கும் கருத்து போன காப்பரை சுத்தம் செய்வது அவ்வளவு சுலபமல்ல. கருப்பு நிறத்தோடு பாசி படிந்திருக்கும் இருக்கும், காப்பர் வாட்டர் கேனில், தண்ணீரை ஊற்றி வைத்து குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமும் அல்ல. இந்த காப்பர் வாட்டர் கேன் உள்ளே இருக்கும் அந்த கருப்பு நிறத்தை நீக்க சூப்பரான ஒரு வீட்டு குறிப்பு இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

காப்பர் வாட்டர் கேன் சுத்தம் செய்யும் முறை

இந்த முறைப்படி காப்பர் வாட்டர் கேனை சுத்தம் செய்வதற்கு உங்களுக்கு ஒன்றிலிருந்து இரண்டு எலுமிச்சம் பழங்கள் இருந்தால் போதும். எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அந்த எலுமிச்சம் பழத்தை வைத்து வாட்டர் கேன் முழுவதும் தேய்த்துக் கொடுங்கள். மிச்சம் அந்த தோல் இருக்கும், அதை தூக்கி குப்பையில் போடாதீங்க.

நான்கிலிருந்து ஐந்து எலுமிச்சம் பழ தோல்கள் சேகரித்து வச்சுக்கோங்க. (எலுமிச்சம் பழச்சாறை சமையலுக்கு பயன்படுத்திவிட்டு வெறும் தோல் இருந்தால் கூட இந்த குறிப்புக்கு பயன்படும்.) எலுமிச்சம் பழ தோல்களை, அந்த காப்பர் வாட்டர் கேனுக்கு உள்ளே போட்டு, குடிக்கின்ற நல்ல தண்ணீரை வாட்டர் கேன் முழுவதும் ஊற்றி மூடி போட்டு இரவு அப்படியே வைத்து விடுங்கள். 8 மணி நேரம் இந்த தண்ணீர் அப்படியே வாட்டர் கேனுக்கு உள்ள இருக்கட்டும்.

- Advertisement -

மறுநாள் காலை இந்த தண்ணீர் நல்ல ரியாக்ட் பண்ணி இருக்கும் பாருங்க. காப்பர் வாட்டர் கேனுக்கு உள்பக்கமாக எந்த ஒரு அழுகும் தங்கி இருக்காது. காப்பர் வாட்டர் கேனுக்கு மேல் பக்கம் எந்த அளவுக்கு சுத்தம் ஆச்சோ, அதே அளவுக்கு உள்பக்கமும் சுத்தமாகி பள பளன்னு மாறி இருக்கும்.

இது தவிர நீங்க இந்த காப்பர் வாட்டர் கேனை மேல் பக்கம் சுத்தம் செய்ய சபீனா பயன்படுத்தலாம். புளி, உப்பு பயன்படுத்தலாம் எலுமிச்சம்பழம் உப்பு சேர்த்த கலவையும் பயன்படுத்தலாம். அது உங்களுடைய விருப்பம் தான். நல்லா புரிஞ்சுக்கோங்க. மேல் பக்கம் சுத்தம் செய்வதில்லை பிரச்சனையே கிடையாது. கை போகாத இடத்தில் சுத்தம் செய்வது தான் பெரிய டாஸ்கா இருந்திருக்கும். இந்த குறிப்பை ட்ரை பண்ணி பாருங்க. நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

இதையும் படிக்கலாமே: உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்யும் முறை

காப்பரில் தண்ணீர் நிரப்பி குடிப்பது நல்லது தான். ஆனா சுத்தம் செய்யப்படாத காப்பரில் தண்ணீர் ஊற்றி குடிப்பது ஆரோக்கியத்திற்கு கேடு. காப்பர் வாட்டர் கேன் பயன்படுத்துறவங்க இதை ஞாபகம் வச்சுக்கோங்க. மேல் சொன்ன பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -