உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்யும் முறை

bath room tiles tablet
- Advertisement -

வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் நேர்த்தியாக பராமரிப்பதும் நல்ல விஷயம் தான் என்றாலும் தினம் தினம் இதை செய்யும் போது கட்டாயமாக அதில் ஒரு சலிப்பு ஏற்படத் தான் செய்யும். அதிலும் இந்த பாத்ரூம் டைல்ஸ் போன்றவற்றை சுத்தம் செய்வது நிச்சயம் அலுப்பை தரக் கூடிய வேலை தான். குறிப்பாக உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸ்சை சுத்தம் செய்வதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது.

இதற்கு வேறு வழியும் கிடையாது ஏனென்றால் இப்போதெல்லாம் பெரும்பாலான இடங்களில் உப்பு தண்ணீர் தான். குடிப்பதற்கே நல்ல தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் இது போன்ற காரியத்திற்கெல்லாம் நல்ல தண்ணீரை எதிர்பார்க்கவே முடியாது. அப்படியானால் கறை படிந்த பாத்ரூமை அப்படியே பயன்படுத்த வேண்டுமா என்றால் தேவை இல்லை. இந்த வீட்டு குறிப்பு குறித்த பதிவில் பாத்ரூமை எளிமையாக சுத்தப்படுத்தக் கூடிய அருமையான குறிப்பு உள்ளது. வாங்க அதை தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்யும் முறை

இந்த முறையில் பாத்ரூமில் சுத்தம் செய்வதற்கு முதலில் காலாவதியான மாத்திரைகள் 4 எடுத்துக் கொள்ளுங்கள். அது எந்த மாதிரியாக இருந்தாலும் பரவாயில்லை அதை பவுடராக நுணுக்கி எடுத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அந்த பவுலில் நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் சோடா உப்பு ஒரு ஸ்பூன், ஷாம்பு ஒரு ஸ்பூன் இதையும் சேர்த்த பிறகு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதோ பாத்ரூமை சுத்தப்படுத்த தேவையான லிக்விட் தயாராகி விட்டது.

- Advertisement -

இந்த லிக்வீட்டை கறைப் படிந்த பாத்ரூம் டைல்ஸ் அனைத்திலும் தெளித்து பத்து நிமிடம் வரை அப்படியே ஊற விடுங்கள். ஒரு வேளை உங்கள் பாத்ரூம் அதிக கறை பிடித்து இருந்தால் இன்னும் ஒரு பத்து நிமிடம் கூடுதலாக ஊற விடுங்கள். பத்து நிமிடம் ஊறிய பிறகு ஸ்டீல் நார் பாட்டில் அல்லது பிரஷ் போன்றவற்றை பயன்படுத்தி தேய்த்து விடுங்கள்.

இப்படி தேய்க்கும் போது கைகளில் களவுஸ் போட மறக்காதீர்கள். பாத்ரூமின் உட்புறம் தேய்க்க பிரஷை பயன்படுத்துங்கள். பாத்ரூம், டைல்ஸ் சுத்தப்படுத்த பயன்படுத்தக் கூடிய இந்த லிக்விட் தயாரிப்பு முறையில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் இது போல செய்து வைத்துக் கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்ட அளவுகள் எல்லாம் ஒரு முறை செய்வதற்கு சரியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பூஜை பொருட்களை சுத்தம் செய்யும் முறை

உங்களுக்கு அதிகமாக வேண்டுமெனில் இதே போல தயாரித்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த முறையில் ஒரு முறை பாத்ரூமை சுத்தம் செய்து பாருங்கள் இதுவரை இல்லாத அளவு உங்கள் பாத்ரூம் டைல்ஸ் பளிச்சென்று இருக்கும். அதே நேரத்தில் துர்நாற்றமும் இருக்காது முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -