கொத்து கொத்தாக முடி கொட்டுவதை உடனடியாக நிறுத்த கொத்தமல்லித்தழை போதும். 15 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய முடி வளரத் தொடங்கும்.

hair12
- Advertisement -

ஒரு குதிரைவால் கட்டும் அளவிற்கு கூட முடி அடர்த்தி இல்லை. தலையை தொட்டாலே முடி வேரோடு கையில் உதிர்கின்றது. வீட்டில் எங்கு பார்த்தாலும் தரையில் முடி தான். முடி கொட்டுவதை தடுத்து நிறுத்த என்ன செய்வது என்றே தெரியவில்லை என்பவர்கள், இந்த பேக் ட்ரை பண்ணி பாருங்க. முதல் முறை இந்த பேக்கை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களுடைய முடி உதிர்வில் நன்றாக வித்தியாசம் தெரியும். இரண்டு வாரம் தொடர்ந்து இந்த பேக்கை பயன்படுத்த வேண்டும். அதாவது வாரத்தில் 3 நாட்கள் இந்த பேக்கை போட்டு வர, 15 நாட்களில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத வித்தியாசத்தை உங்களுடைய முடியில் உணர்வீர்கள்.

இந்த பேக் தயார் செய்ய நமக்கு தேவையான பொருட்கள் நான்கு. வெந்தயம், கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை, தயிர். முந்தைய நாள் இரவே 1 டேபிள்ஸ்பூன் அளவு வெந்தயத்தை கழுவிவிட்டு அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி ஊறவைத்து விடுங்கள். இரவு முழுவதும் வெந்தயம் தண்ணீரில் நன்றாக ஊறடும்.

- Advertisement -

காலை விடிந்தவுடன் பேக்கை தயார் செய்ய வேண்டும். ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஊறவைத்த வெந்தயத்தை தண்ணீரை வடித்து போட்டு கொள்ள வேண்டும். இந்த வெந்தயத்துடன், 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை, போட்டு முதலில் அரைத்து விடுங்கள். அதன்பின்பு வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை ஊற்றி விழுது போல இதை அரைத்துக் கொள்ள வேண்டும். அதாவது ரொம்பவும் கெட்டியாக அரைக்க வேண்டாம். கொஞ்சம் தளதளவென அரைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் சுலபமாக வடிகட்டி எடுக்க முடியும். (கருவேப்பிலையை காம்பில் இருந்து உருவி கழுவி போடவேண்டும். கொத்தமல்லி தழைகளை நன்றாக கழுவி விட்டு பொடியாக வெட்டி அந்த தண்டுகளுடன் சேர்க்கவேண்டும்.)

ஒரு காட்டன் துணியில் அரைத்த இந்த விழுதை ஊற்றி நன்றாகப் பிழிந்து எடுத்தால் கொழகொழவென ஒரு பேக் நமக்கு கிடைத்திருக்கும். வீட்டில் பெண்கள் பயன்படுத்தும் மெல்லிசான துப்பட்டாவில் கூட வடிகட்டிக் கொள்ளலாம். வடிகட்டிய இந்த பேக்குடன் 2 டேபிள்ஸ்பூன் தயிரை ஊற்றி நன்றாக கலந்து இதை அப்படியே உங்களுடைய தலையில் பேக் போட்டு 20 நிமிடங்கள் வைத்து அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலை குளித்து விட்டு, அதன் பின்பு மெதுவாக தலையை துவட்டி, சிக்கு எடுத்துப் பாருங்கள். தலைமுடி உதிர்வில் நிச்சயம் வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

இந்தப் பேக்கை வடிகட்டாமலும் பயன்படுத்தலாம். ஆனால் அந்த திப்பிகள் தலையில் ஒட்டிக்கொள்ளும். அலசுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும். பேக் நன்றாக ஸ்கால்ப்பில் படும்படி போடவேண்டும். மயிர்கால்களில் இந்த பேக் ஊறும் போது உங்களுடைய வேர்க்கால்களை வலுபடுத்தும். குறிப்பாக க்ரிப்பாக வேர்க்கால்கள் நம்முடைய தலையை பிடித்துக்கொள்ளும். முடியை தலையிலிருந்து சீக்கிரத்தில் உதிரச் செய்யாது.

ஏற்கனவே உங்களுடைய தலையில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளராமல் இருந்தால் பதினைந்தே நாட்களில் குட்டி குட்டி பேபி ஹேர் வளர்வதை கண்கூடாக பார்க்கலாம். முன்நெற்றியில் நிறைய வழுக்கை இருந்தால் கூட அந்த இடத்திலும் இந்த பேக்கை போட்டு பாருங்கள். நிறைய செலவு செய்யாமல் முடியை அடர்த்தியாக வளர செய்ய இது ஒரு சுலபமான பேக்.

- Advertisement -