முடி கொட்டுவதை முற்றிலும் நிறுத்த முத்திய முருங்கைக்காய் விதை போதுமா? இது என்ன புது ஐடியாவா இருக்குமோ? முடி உதிர்வை தடுக்க சூப்பர் ஹேர் டானிக் ரெசிபி இதோ உங்களுக்காக.

hair23
- Advertisement -

முடி கொட்டும் பிரச்சனை. இது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. எத்தனையோ விதமான அழகு குறிப்புகள் முடி வளர்ச்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று நாம் பார்க்க போகும் அழகு குறிப்பு ரொம்ப ரொம்ப வித்தியாசமானது. முத்திய முருங்கைக்காய் விதை. இது ஒன்று போதும் உங்களுடைய முடி உதிர்வை அப்படியே நிறுத்தும். ஒரே ஒரு முறை இந்த ஹேர் டானிக்கை தயார் செய்து உங்களுடைய தலைமுடியில் போட்டுப் பாருங்கள். பிறகு ஆச்சரியப்படும் அளவிற்கு ரிசல்ட் கிடைக்கும். வாங்க அந்த ஹேர் டானிக் எப்படி தயார் செய்வது என்று விரிவாக பதிவுக்குள் சென்று பார்ப்போம்.

முருங்கைக்காய் விதை ஹேர் டானிக் செய்முறை:
இந்த குறிப்புக்கு நமக்கு ஹீரோவாக இருக்கப்போவது முருங்கைக்காய் விதை. முத்திய முருங்கை காயாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். 1 அடி நீளத்தில் முருங்கைக்காய் இருந்தால், அதை பாதியாக வெட்டி இன்று நாம் பயன்படுத்த போகின்றோம். 500ml தேங்காய் எண்ணெய்க்கு இந்த முருங்கைக்காய் விதை போதும்.

- Advertisement -

முத்திய முருங்கைக்காயை பாதியாக வெட்டி உள்ளே இருக்கும் விதை, அந்த பல்ப், சதை என்று சொல்லுவார்கள் அல்லவா அதையும் சீவி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். (முத்திய முருங்கைக்காய் விதை ரொம்ப ரொம்ப முக்கியம். மிஸ் பண்ணாதீங்க)

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள போறீங்க. அதில் செம்பருத்தி பூ – 5, செம்பருத்தி இலை – 10, கருஞ்சீரகம் – 1 ஸ்பூன், ஆவாரம்பூ – 10 அல்லது (ஆவாரம் பொடி 1 ஸ்பூன்), பாதாம் – 10, எடுத்து வைத்திருக்கும் முருங்கைக்காய் விதை, சதை. எல்லாவற்றையும் போட்டு தண்ணீர் ஊற்றாமல் இதை அப்படியே அரைக்க வேண்டும். (ஆவாரம் பூவாக கிடைக்கவில்லை என்றால் பொடி பயன்படுத்தலாம்.)

- Advertisement -

கொஞ்சம் நரநரப்பாகத்தான் அரைபட்டு கிடைக்கும். பரவாயில்லை, அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து 500ml, மரச்செக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் 2 ஸ்பூன் – விளக்கெண்ணெய், மூன்றிலிருந்து நான்கு சொட்டு – வேப்ப எண்ணெய், 1 ஸ்பூன் – கற்றாழை ஜெல், அடுத்து நாம் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை போட்டு, நன்றாக காய்ச்ச வேண்டும். எல்லா சத்தும் அந்த எண்ணெயில் இறங்கி சடசிடப்பு அடங்கும்.

இதையும் படிக்கலாமே: எந்த எண்ணெய் தேய்த்தாலும் தலைமுடி கொட்டுவது நிற்கவில்லையா? கொத்து கொத்தாக கொட்டும் தலைமுடி உதிர்வை தடுத்து நிறுத்த தினமும் 1 டம்ளர் இதை பருகுங்கள்!

அடுப்பை மிதமான தீயில் வைத்து இந்த எண்ணெயை காய்ச்சுங்கள். இறுதியாக ஒரு கைப்பிடி கருவாப்பிலையை போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எண்ணெய் நன்றாக சூடு ஆறிய பின்பு வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும். நேரம் கிடைத்தால் இந்த எண்ணெயை அப்படியே சிறிது நேரம் வெயிலில் காயவைத்து எடுங்கள். (கூடுமானவரை ஒரு மாதத்திற்கு தேவையான எண்ணெயை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.)  இந்த எண்ணெயை தினமும் தலையில் மசாஜ் செய்து தடவி வந்தாலே போதும். உங்களுடைய முடி உதிர்வு முற்றிலும் நிற்கும். அது மட்டுமில்லாமல் கரு கரு முடி வளர்ச்சி சூப்பராக கிடைக்கும். அழகு குறிப்பு பிடித்தவர்கள் ட்ரை பண்ணி பாருங்க. மூன்று மாதத்தில் சூப்பரான ரிசல்ட்டை பெறுவீர்கள்.

- Advertisement -