கவரிங் நகை வாங்கியவுடன் இதை மட்டும் செஞ்சிடுங்க‌. 1 வருடம் ஆனாலும் நீங்கள் வாங்கிய கவரிங் நகை, கருகாமல் தங்க நகை போலவே பள பளன்னு அப்படியே புதுசா இருக்கும்.

chain
- Advertisement -

பெரும்பாலும் நாம் வாங்கி பயன்படுத்தும் கவரிங் நகை தண்ணீர் பட்டாலும் வியர்வை பட்டாலோ சீக்கிரத்தில் கருத்துப் போகும். நீங்கள் தினமும் அணிந்து கொண்டிருக்க கூடிய கவரிங் செயின் வளையலுக்கும் இந்த குறிப்பை ட்ரை பண்ணி பார்க்கலாம். வெளியில் போயிட்டு வரும் போது, அதாவது விசேஷங்களுக்கு செல்லும்போது அணிந்து கொள்ளும் நெக்லஸ், ஆரம், கம்பல், வளையல், இவைகளுக்கும் இந்த குறிப்பை பின்பற்றி பார்க்கலாம். மிக மிக சுலபமான குறிப்பு இது. இந்த குறிப்பை பின்பற்றி வந்தாலே உங்களுடைய கவரிங் நகைகள் நீண்ட நாட்களுக்கு புதுசு போல நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். வாங்க நேரத்தை கலக்காமல் அந்த குறிப்பை பார்க்கலாம்.

கவரிங் நகைகள் வாங்கி வந்ததும் உடனடியாக என்ன செய்யணும். ஒரு வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய நெயில் பாலிஷ் வாங்கிக் கொள்ளுங்கள். சாதாரணமாக இருக்கும் நெயில் பாலிஷை விட இதனுடைய விலை கொஞ்சம் கூடுதலாக தான் இருக்கும். ஆனால் 30 லிருந்து 40 ரூபாய்க்குள் உங்களுக்கு இந்த நெயில் பாலிஷ் கிடைத்துவிடும். எல்லா பேன்சிஸ் ஸ்டோரிலும் சுலபமாக கிடைக்கும். வாட்டர் கலர் நெயில் பாலிஷ் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் வாங்கிய எந்த கவரிங் நகையாக இருந்தாலும் சரி, அதை ஒரு துணியின் மேல் வைத்துவிட்டு இந்த வாட்டர் கலர் நெயில் பாலிஷை அந்த நகையின் மேல் தடவி விட வேண்டும். நெயில் பாலிஷை எடுத்து அந்த பிரஷ்லேயே கவரிங் நகையின் மேல் ஒரு கோட்டிங் போட்டு விடுங்கள். நன்றாக ஆரிய பின்பு நகையின் பின்பக்கமும் இதேபோல போட வேண்டும். நகையின் ஓரங்களிலும் இதே போல போட வேண்டும். நகையின் ஒரு மூளை முடுக்கை கூட விடாதிங்க. கவரிங் நகையை சுற்றி இந்த வாட்டர் கலர் நெயில் பாலிஷ் போட்டு விடுங்கள்.

கீழே ஒரு விரிப்பு வைத்து விரித்து அதன் மேலே நகையை வைத்து தான் இந்த நெயில் பாலிஷ் அப்ளை செய்ய வேண்டும். நெயில் பாலிஷ் போட்டுவிட்டு அது காய்வதற்கு முன்பு உங்கள் கையை வைத்து தொட்டுவிட்டால், உங்கள் கை பட்ட இடத்தில் நெயில் பாலிஷ் போய்விடும். பிறகு அந்த இடத்தில் மட்டும் நகைகள் கருக்கத் தொடங்கும். இப்படி நெயில் பாலிஷ் போட்ட நகையை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தினால் கூட சீக்கிரம் கருத்துப் போகாது. (நெயில் பாலிஷ் போட்ட பின்பும் நகை நன்றாக காய்ந்ததும் உங்கள் கையில் எடுக்க வேண்டும். கல் வைத்த நகைகளுக்கும் இதை அப்ளை செய்யலாம். கற்களும் சீக்கிரம் கீழே விழாமல் இருக்கும். தலையில் வைக்க கல் வைத்த கிளிப் வாங்குவோம் அல்லவா. அதற்கு கூட இந்த டிப்ஸ் யூஸ் ஆகும்.)

- Advertisement -

நகையை அணிந்து இருக்கும்போது அந்த நகையில் உங்கள் உடம்பில் இருக்கும் வியர்வை துளிகள் பட்டிருக்கும் அல்லவா. ஆகவே நகையை கழட்டியவுடன் அதை சிறிது நேரம் பேன் காற்றில் நன்றாக ஆற வைத்து விடுங்கள். அதன் பின்பு ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் அடியில் டிஷ்யூ பேப்பர் போட்டு இந்த நகைகளை வைக்கவும். நகைக்கு மேலே இன்னொரு டிஷ்யூ பேப்பரை போட்டு மூடி மேலே டப்பாவின் மோடியை காற்று போகாமல் மூடி வைக்க வேண்டும்.

இப்படி பராமரித்து வந்தால் உங்களுடைய கவரிங் நகை சீக்கிரத்தில் கருத்து போவதற்கு வாய்ப்பே கிடையாது. ஒரு வருடமானாலும் அந்த நகைகள் தங்க நகைகள் போலவே ஜொலி ஜொலிப்பாக இருக்கும். கவரிங் நகையை அணிபவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்.

- Advertisement -