பச்சையாக பாசி படிந்து இருக்கும் கவரிங் செயினை கூட வெறும் 5 நிமிடத்தில் பளபளவென ஜொலிக்க வைக்க, சமையலறையில் இருக்கும் இந்த 2 பொருளே போதும்.

chain
- Advertisement -

நாம் பயன்படுத்தும் கவரிங் செயின் சில சமயம் எல்லா இடங்களிலும் பளபளப்பாக தான் இருக்கும். ஒரு சில இடங்களில் மட்டும் பச்சை நிறத்தில் பாசி பிடித்த மாதிரி மாறிவிடும். குறிப்பாக கொக்கி மாட்டும் இடம், டாலர் போட்டு இருக்கக்கூடிய இடத்தில் இருக்கும் சின்ன வளையம் கருத்துப்போய் இருக்கும். சில செயின் முழுமையாகவே கறுத்துப் போய்விடும். இப்படிப்பட்ட செயினை உடனடியாக பளபளப்பாக புதியது போல மாற்றுவது எப்படி என்பதைப் பற்றிய ஒரு சிறிய குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு முழு எலுமிச்சை பழத்தில் இருக்கும் சாரை பிழிந்து விடுங்கள். எலுமிச்சை பழச்சாறுடன் 1 ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அப்படியே இந்த கலவை நுரை பொங்கி வரும். நுரை பொங்கி வரும் போது இந்த கலவையை ஸ்பூன் வைத்து நன்றாக கலந்து கவரிங் செயினை இந்த கலவையில் போட்டு 10 நிமிடங்கள் ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் பித்தளை பாத்திரம் தேய்க்கும் பீதாம்பரி பவுடரை போட்டு, கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பிதாம்பரி கலவையோடு, கிண்ணத்தில் ஏற்கனவே ஊறிக் கொண்டிருக்கும் கவரிங் நகைகளை அந்த எலுமிச்சை பழச்சாறுடன் ஊற்றி கலந்து விட்டு அடுப்பை பற்றவைத்து 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

அதன்பின்பு அந்த தண்ணீரின் சூடு ஆறும் வரை நகை அந்த தண்ணீரிலேயே இருக்கட்டும். சூடு ஆறிய பின்பு நகையை கையில் எடுத்தாலே நமக்கு தெரியும். அதிலிருந்த பாசி கருப்பு நிறம் எல்லாம் அந்த தண்ணீரில் இறங்கியிருக்கும். அந்த நகையை நல்ல தண்ணீரில் கழுவி விட்டு நன்றாக துடைத்துவிட்டு பாருங்கள். உங்களுடைய கவரிங் செயின் புதுசு போல இருக்கும்.

- Advertisement -

இந்த கவரிங் செயின் தங்கம் போல பள பளப்பாக மின்ன வேண்டும் மென்றால் மஞ்சள் தண்ணீரில் இந்த நகையை முக்கி எடுத்தால் இந்த கவரிங் நகை, தங்க நகை போலவே மஞ்சள் நிறத்தில் இருக்கும். உங்க வீட்ல கவரிங் நகை கறுத்துப்போயிருந்தால் ஒருமுறை இந்த மெதட் ட்ரை பண்ணி சுத்தம் செய்து பாருங்கள். கவரிங் கம்மல் வளையல் எல்லா நகைகளுக்கும் இந்த மெத்தை ட்ரை பண்ணலாம்.

பின்குறிப்பு: பிதாம்பரி பவுடர் தான் இந்த குறிப்புக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை. பித்தளை பாத்திரம் தேய்க்க, செப்புப் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் வேறு எந்த பிராண்ட் பவுடரை வேண்டுமென்றாலும் இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பிரஷ் எதுவும் போட்டு தேய்க்காமலேயே கவரிங் நகையை சுத்தம் செய்ய இந்த குறிப்பு ரொம்ப ரொம்ப ஈசியாக இருக்கும்.

- Advertisement -