கறுத்து போன பழைய கவரிங் நகைகள் கூட, புதிய தங்க நகைகள் போல ஜொலிக்க இதோ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. இதுக்கு அப்புறம் உங்க கிட்ட இருக்க பழைய கவரிங் நகை கருக்கவே கருக்காது.

Rusted Gold chain
- Advertisement -

தங்க நகைகளை அணிய விருப்பப்படாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம் ஆனால் என்ன எல்லோராலும் தங்கம் அணிய முடியாது. இது போன்று சமயங்களில் நமக்கு கை கொடுப்பது கவரிங் நகைகள் தான். அது மட்டும் இன்றி இன்றைய காலக்கட்டத்தில் தங்க நகையை காட்டிலும் கவரிங் நகை தான் பாதுகாப்பானதும் கூட. இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் கவரிங் நகையை எப்படி புதுசு போல பாதுகாப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கவரிங் நகையை பொருத்த வரையில் வாங்கும் பொழுது குறிப்பிட்ட காலம் வரை அதற்கு உத்திரவாதம் தருவார்கள். அதன் பிறகு நகை கருத்துப் போய் விடும். அதை பாலிஷ் செய்வதற்கு புது நகையே வாங் கிவிடலாம் அந்த அளவிற்கு அதிக பணம் செலவாகும். இல்லையென்றால் சில நகைகள் வாங்கி போட்ட சில நாட்களுக்குள்ளே கறுத்து விடும். அதை மறுபடியும் பாலீஷ் போடவும் முடியாது. இப்படியான நகைகளை புதுசு போல மாற்ற ஒரு அருமையான குறிப்பை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பழைய கவரிங் நகைகளை புதிது போல மாற்ற:
இதற்கு ஒரு சின்ன அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கம்ப்யூட்டர் சாம்பிராணியை வைத்து அதன் மேல் ஒரு கற்பூரத்தையும் வைத்து ஏற்றி விடுங்கள். அது நன்றாக எரிந்து அந்த சாம்பல் அகல் விளக்கிலே சேர்ந்து விடும்.

அதன் பிறகு நன்றாக புளித்த தயிர் இரண்டு ஸ்பூன் எடுத்து இந்த சாம்பலில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள். இப்போது கறுத்துப் போன உங்கள் கவரிங் நகைகளின் மீது இந்த பேஸ்ட்டை தடவி சிறிது நேரம் தேய்த்த பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவி காட்டன் துணி வைத்து துடைத்து விடுங்கள். புதிதாக வாங்கிய நகை போல மின்னும்.

- Advertisement -

இப்படி பாலிஷ் போட்ட நகையை அப்படியே எடுத்து வைக்காமல் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் முகத்திற்கு போடும் பவுடரை சேர்த்து அதில் சுத்தம் செய்த நகையை போட்ட பிறகு ஒரு நாப்தலின் பாலையும் அதில் சேர்த்து மூடி வைத்து விட்டால் நகைகள் நீண்ட காலம் வரை கருகாமல் அப்படியே இருக்கும்.

கவரிங் நகைகள் கறுத்துப் போகாமலும், கறுத்துப் போன நகையை புதிதாக வாங்கியது போல மாற்றவும் இந்த ஒரு எளிமையான குறிப்பு உங்களுக்கு தெரிந்தால் போதும். இனி இதற்காக அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. இந்த எளிய குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் நிச்சயம் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -