ரோஜா செடி மற்றும் மற்ற பூச்செடிகளில் புதிய தளிர் சரியாக வரவில்லையா? இந்த 2 பொருட்கள் இருந்தால் மொட்டுக்கள் கொத்துக்கொத்தாகப் பூக்கும்!

rose-plant-leaf
- Advertisement -

நாம் வளர்க்கும் ரோஜா செடிகளில் நோய் பாதிப்பு இருந்தால் புதிதாக வரும் தளிர் மிகவும் சிறியதாகவும், வேறு மாதிரியான நிறத்திலும் துளிர் விட ஆரம்பிக்கும். இதை வைத்தே உங்களுடைய செடி நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம். இப்படி இருந்தால் ரோஜா செடியில் பூக்கள் பூக்காமல் போய்விடும் ஆபத்து உண்டு. ரோஜா செடி மட்டுமல்ல, எல்லா வகையான பூச்செடிகளுக்கும் இலை தாக்குதல் இருந்தால், அதில் பூக்கள் பூப்பது தடைபடும். இதனை சரிசெய்ய எளிதாக கிடைக்கக்கூடிய இந்த 2 பொருட்கள் மட்டும் போதும்! அது என்ன பொருள்? எப்படி பயன்பெறுவது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நம் வீட்டுத் தோட்டத்தில் பலவகையான பூச்செடிகள் இருந்தாலும், அதில் எல்லா செடி வகைகளும் செழிப்பாக வளர்வதில்லை. ஒரு சில செடிகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகி, பூக்கள் பூப்பதில்லை. இலைகள் எல்லாம் உதிரவும் ஆரம்பித்துவிடும். நாம் நட்டு வைத்த குச்சியை தவிர அதில் எதுவுமே வராமல் போய்விடும். இப்படியான தீவிரமான செடி பிரச்சனைகளுக்கு நாம் என்ன தான் செய்தாலும் அதற்கு தீர்வு மட்டும் கிடைப்பதில்லை.

- Advertisement -

நோய் தாக்குதலுக்கு உண்டான செடிகளை வேப்ப எண்ணை தெளித்தாலும், அந்த அளவிற்கு பயனும் இருக்காது. பூச்சி தாக்குதலுக்கு ஆளான செடிகளை வேப்ப எண்ணெய் கொண்டு சரி செய்து விடலாம். ஆனால் தளிர் விடும் புதிய இலைகளில் பிரச்சினைகள் இருந்தால் வேப்ப இலை அந்த அளவிற்கு பலன் தருவதில்லை. இதற்கு அற்புதமான கிருமி நாசினியாக விளங்கும் இரண்டு பொருட்கள் நமக்கு எளிதாக கிடைக்கும் படியாக இருக்கிறது.

cow dung

ஒன்று மாட்டு சாணம். இது செடிகளின் வளர்ச்சிக்கு தகுந்த ஆற்றல்களை பெற்றுள்ளது. சிறந்த கிருமி நாசினியாகவும் விளங்குகிறது. அது போல் மஞ்சள் நாம் வீட்டிலேயே அரைத்து வைத்து இருந்தால் மிகவும் நல்லது. மஞ்சள் இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை பெற்றுள்ளதால் செடி வகைகளுக்கும் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்துகிறது. இந்த இரண்டு பொருட்களை வைத்து தான் நோயுற்ற நம்முடைய செடிகளை பாதுகாக்க இருக்கிறோம்.

- Advertisement -

மாட்டுச்சாணம் சிறிதளவு எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சுத்தமான மஞ்சளால் அரைக்கப்பட்ட மஞ்சள் தூளை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை உங்களுடைய நோய் தாக்குதலுக்கு உட்பட்ட செடி வகைகளுக்கு அடிக்கடி தெளித்து வந்தால் செடிகள் செழிப்பாக வளரும். ரோஜா செடி புதிய தளிர் விடும் பொழுது வழக்கத்திற்கு மாறான நிறம் பெற்று இருந்தால் உடனே அதனை கவனித்து சரி செய்து விட வேண்டும். இல்லை என்றால் அதில் இருக்கும் இலைகள் பாதிப்படைந்து மொட்டுக்கள் விடுவதில் பிரச்சனை வந்துவிடும்.

cow-dung-liquid

வாரம் இரு முறை இந்த தண்ணீரை உங்களுடைய எல்லா வகையான பூச்செடிகளுக்கும் லேசாக தெளித்து வந்தால் போதும்! சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு செடி மற்றும் இலையில் இருக்கும் நோய் தாக்குதல் நீங்க பெற்று விடும். கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் அதிலிருந்து பெரிது பெரிதாக பூக்கள் பூக்க ஆரம்பித்துவிடும். மல்லி, முல்லை, நந்தியாவட்டை, சாமந்தி, டிசம்பர், ரோஜா போன்ற செடி வகைகளுக்கு மாட்டு சாணம் மற்றும் மஞ்சள் கலந்த இந்த கலவை தகுந்த சிறந்த தேர்வாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
பல் தேய்க்கும் டூத் பிரஷ்ஷால் இவ்வளவு ஆபத்து இருக்கிறதா? இது தெரிந்தால் இனி அந்த தவறை செய்யவே மாட்டீர்கள்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -