இப்படியும் கூட போண்டா சுடலாமா? மொறு மொறுன்னு இந்த ஸ்டைலில் இப்படி ஒரு போண்டாவை இதுவரைக்கும் நீங்க டேஸ்ட் பண்ணி கூட இருக்க முடியாது.

mini-mysore-bonda
- Advertisement -

முற்றிலும் வித்தியாசமான ஒரு போண்டா ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி ஒரு போன்றவை இந்த சுவையில் இதுவரைக்கும் நீங்கள் எங்கேயுமே டேஸ்ட் பண்ணி இருக்க மாட்டீங்க. அட்டகாசமான சுவையில் இந்த போண்டாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக மிக விருப்பமாக சாப்பிடுவார்கள். சாயங்கால நேரத்தில் டீ காபி குடிக்கும் போது இது ஒரு புது விதமான ஸ்நாக்ஸாக கொடுத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் உங்களை பாராட்டி தள்ளிவிடுவார்கள். சரி வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்ப்போம்.

முதலில் 1 கப் அளவு பச்சரிசியை நன்றாக கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊறிய இந்த பச்சரிசியை மிக்ஸியில் போட்டு 1/4 கப் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (நிறைய தண்ணீர் ஊற்றி அரைக்கக்கூடாது.)

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு பெரிய சைஸ் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்த உருளைக்கிழங்கு முற்றிலுமாக மசிந்து விட வேண்டும். (சிறிய உருளைக்கிழங்கு ஆக இருந்தால் இரண்டு உருளைக்கிழங்கு எடுத்துக்கொள்ளலாம்.)

அடுத்தபடியாக அகலமான ஒரு பவுல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 5 டேபிள்ஸ்பூன் அளவு, பொடியாக நறுக்கிய வரமிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் இதில் போட்டு ஒரு கரண்டியை வைத்து அழுத்தி நன்றாக கலந்து கொடுக்கவேண்டும். அடுத்தபடியாகத் தான் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவை இந்த மசாலா பொருட்களோடு ஊற்றி ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து கொடுங்க‌. மாவு போண்டா மாவு பக்குவத்தில் நமக்கு கிடைக்க வேண்டும். அதற்கு தகுந்தார்போல் பச்சரிசி மாவை பக்குவமாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக இதில் இரண்டு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொடுத்தால் போண்டாவுக்கு மாவு தயார். அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் சிறிய சிறிய போண்டாக்களாக இந்த மாவை எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். தொட்டுக்கொள்ள காரசட்னி அல்லது தேங்காய் சட்னி போதும் அட்டகாசமான சுவையில் அருமையான மொறுமொறு போண்டா தயார்.

- Advertisement -