ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ரவை தோசை வீட்டிலேயே ரொம்ப ஈசியாக மொறுமொறுன்னு கிரிஸ்பியாக சிவக்க தயார் செய்வது எப்படி? இப்படி செஞ்சா யாருக்கு தான் ரவை தோசை பிடிக்காது!

instant-ravai-dosai
- Advertisement -

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ரவை தோசை செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அனைவரும் விரும்பும் இந்த ரவை தோசை மொறுமொறுன்னு கிரிஸ்பியாக நம் வீட்டிலேயே எளிதாக தயார் செய்வது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – ஒரு கப், ரவை – கால் கப், மைதா மாவு – கால் கப், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு இன்ச், கருவேப்பிலை – ஒரு கொத்து, மல்லி தழை – சிறிதளவு, சீரகம் – அரை டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், கெட்டி தயிர் – இரண்டு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

ரவை தோசை செய்வதற்கு முதலில் அரிசி மாவு ஒரு கப் அளவிற்கு முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி மாவு எந்த மாவாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் கடையில் வாங்கி இருந்தாலும் சரி தான். பின்னர் இதனுடன் கால் கப் அளவிற்கு ரவை சேர்த்துக் கொள்ளுங்கள். வறுத்த ரவை அல்லது வறுக்காத ரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

பின்னர் அதே அளவிற்கு மைதா மாவு சேர்க்க வேண்டும். இதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பெருங்காயத்தூள் சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை உதிர்த்து சேருங்கள். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு மிளகை ஒன்றிரண்டாக பொடித்து சேருங்கள். மிளகுடன் அரை டீஸ்பூன் சீரகத்தையும் பொடித்து சேருங்கள். ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோல் நீக்கி குட்டி குட்டியாக நறுக்கி சேருங்கள். இவற்றுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை பிரஷ் ஆக எடுத்து உருவி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

சிறிதளவு மல்லி தழையையும் பொடியாக நறுக்கி சேருங்கள். பின்னர் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கெட்டியான தயிர் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விடுங்கள். எல்லாவற்றையும் ஒன்று சேர நன்கு கலந்து விட்ட பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கரைக்க வேண்டும்.

இந்த தோசை செய்வதற்கு மாவு கெட்டியான மோர் போல நீர்க்க இருக்க வேண்டும். தோசை மாவை விட சற்று நீர்க்க இருந்தால் தான் தோசை வார்க்க வரும். எனவே ஒரேடியாக தண்ணீரை சேர்க்காமல் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை சேர்த்து ரவை தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் 30 நிமிடம் அப்படியே மூடி போட்டு ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு நாம் ரவை தோசைக்கு எப்படி சுற்றிலும் ஊற்றி நடுப்புறம் பரப்பி விடுவோமோ, அதே போல சுற்றிலும் ஊற்றி இடையே இருக்கக்கூடிய இடைவெளிகளை அடைக்க வேண்டும். பின்னர் எண்ணெய் விட்டு ஒரு புறம் நன்கு சிவக்க வெந்து வரும் வரை காத்திருங்கள். மறுபிறம் திரும்பி போட வேண்டிய அவசியம் இல்லை, மொறு மொறுன்னு வந்ததும் அப்படியே மடித்து எடுத்து சுடச்சுட பரிமாற வேண்டியது தான்.

- Advertisement -