இந்த தோசை செய்ய 5 நிமிடமே ரொம்ப ரொம்ப அதிகம் தான். வீட்டில் சாப்பிட எதுவும் இல்லை என்றால் டக்குனு ஒரு அவசர தோசை ரெசிபி.

dosai4
- Advertisement -

சாப்பிட தயாராக எந்த பொருட்களும் இல்லை. ஃப்ரிட்ஜில் இட்லி தோசை மாவும் இல்லை. ஆனால் நாக்குக்கு ருசியாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்று இருக்குது. சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு சில பொருட்களை வைத்தே சூப்பரான ஒரு தோசை செய்வது எப்படி. பெரும்பாலும் இந்த தோசை மாவை தயார் செய்ய போடக்கூடிய பொருட்கள் எல்லோர் வீட்டிலும் எப்போதும் இருக்கக்கூடிய பொருட்கள் தான். இன்ட்ரஸ்டிங்கான இந்த ரெசிபியை உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா. வாங்க பார்க்கலாம்.

முதலில் மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை வெட்டி போட்டு விழுதாக அரைத்து கொள்ளவேண்டும். இந்த விழுதை அகலமான ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள். தக்காளி விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1/4 கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை சிறிதளவு, உப்பு தேவையான அளவு, சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு 2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி எல்லா பொருட்களையும் நன்றாக நீர்க்க கரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதோடு அரிசி மாவு – 1/2 கப், ரவை – 1/2 கப், கோதுமை மாவு – 1/4 கப், இந்த பொருட்களை சேர்த்து மீண்டும் கரைக்க தொடங்குங்கள். மாவு கொஞ்சம் கெட்டியாக தொடங்கும்‌ இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மாவை ரவா தோசை மாவு பக்குவத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். தோசை மாவு தயார்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நன்றாக சூடு செய்து கொள்ளவேண்டும். இந்த தோசை மாவை கரண்டியில் எடுத்து தோசைக்கல்லில் அப்படியே பரவலாக ஊற்றினால் ஓட்டை ஓட்டையாக தோசை வரும். ரவை தோசை போலவே இதையும் ஓட்டை ஓட்டையாக ஊற்றி மேலே நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சிவக்க வைத்து திருப்பி கூட போட வேண்டாம். அப்படியே சாப்பிட்டு பாருங்கள் அத்தனை ருசியாக இருக்கும். (தோசை பொன்முருவலாக சிவந்து வருவது நமக்கே தெரியும். அப்போது கல்லிலிருந்து தோசையை எடுத்து விடுங்கள்.)

- Advertisement -

ஈவினிங் டைமில் இதை ஸ்நாக்ஸாக கூட குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. காரசாரமாக டொமேட்டோ தோசை என்று கொடுங்கள். விருப்பமாக சாப்பிடுவார்கள். அவசரத்திற்கு எதுவுமே இல்லை என்றால் இது ஒரு அவசர தோசை. ட்ரை பண்ணித்தான் பாருங்களேன். எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

இந்த ரெசிபியை படிக்கவே ரெண்டு நிமிஷம் ஆயிருக்காது. தோசை செய்ய எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்திருந்தா, எண்ணி ஐந்தாவது நிமிடம் தோசைக்கல்லில் தோசையை வார்த்து இருக்கலாம். அடுத்த ஐந்து நிமிடத்தில் தட்டில் மொறு மொறு தோசை தயாராக இருக்கும்.

- Advertisement -