1 கப் கோதுமை மாவு இருந்தா போதும் காரசாரமான கிரிஸ்பியான அடை தோசை இப்படிக் கூட செய்யலாமே! காலையில் உணவை ஆரோக்கியமாக்கும் இந்த தோசை செய்வதெப்படி?

wheat-godhumai-adai
- Advertisement -

ஒரு கப் கோதுமை மாவு இருந்தா போதும் கிரிஸ்பியான காரசாரமான கோதுமை அடை தோசையை வீட்டிலேயே செய்து அசத்தலாம். சாதாரண தோசையை விட தாளிப்பு கொடுத்து அடை போல சுட்டு எடுக்கும் இந்த தோசை ரொம்பவே வித்தியாசமான சுவையை உங்களுக்கு கொடுக்கும். கோதுமை மாவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பதால் இந்த தோசையை அடிக்கடி செய்து சாப்பிடலாம். காலை நேர உணவை அற்புதம் ஆக்கிக் கொடுக்கக்கூடிய இந்த கோதுமை அடை தோசை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

wheat

கோதுமை மாவு அடை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், ரவை – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் 2 – டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உளுந்து – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு துண்டு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – ஒன்று, தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

கோதுமை மாவு அடை தோசை செய்முறை விளக்கம்:
அடை தோசை செய்வதற்கு முதலில் கோதுமை மாவு ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். ரேஷன் கடையில் கொடுக்கும் கோதுமையில் இருந்து அரைக்கப்பட்ட மாவிலும் இந்த அடை சூப்பராக இருக்கும். கோதுமை மாவு கிரிஸ்பியாக இருப்பதற்கு 2 ஸ்பூன் அளவிற்கு ரவையைக் கலந்து கொள்ள வேண்டும். இப்போது அடை மாவிற்கு தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். ரொம்பவும் கெட்டியாக இல்லாமல், நீர்க்கவும் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அப்படியே 15 லிருந்து 20 நிமிடம் ஊற வைத்து விடுங்கள்.

Wheat-rava-adai

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு ஒரு ஸ்பூன் போட்டு பொரிய விடுங்கள். கடுகுடன் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். பின்னர் உளுந்து சேர்த்து தாளிக்க வேண்டும். உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும், பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் இஞ்சி ஆகியவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்குங்கள். பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அவ்வளவு பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். கண்ணாடி பதம் வரும் வரை வெங்காயத்தை நன்கு வதக்குங்கள். வெங்காயம் வறுபட்டதும் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேங்காயை துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காய் நன்கு எண்ணெயில் வதக்க வேண்டும்.

wheat-dosai0

பின்னர் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து ஒரு முறை கலந்து அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் நன்கு ஊறிய மாவுடன் இந்த தாளிப்பையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் தோசைக் கல்லை சுட வைத்துக் கொள்ளுங்கள். கல் சூடாக மாறியதும் அடை தோசை போல கெட்டியாக ஊற்றுங்கள். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேக விடுங்கள். நன்கு வெந்ததும் அடுத்த புறமும் திருப்பி வேகவிட்டு எடுத்தால் சுவை மிகுந்த கோதுமை அடை தோசை நொடியில் தயாராகிவிடும். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த கோதுமை அடை தோசையை நீங்களும் வீட்டில் இதேபோல செய்து அசத்துங்கள்.

- Advertisement -