கோதுமை தோசை ஒட்டாமல் மொறுமொறுன்னு கிரிஸ்பியாக வருவதற்கு இந்த 2 ரகசிய பொருளை சேர்த்து பாருங்கள்!

wheat-dosa

தோசை வகையில் மிகவும் ஆரோக்கியமான தோசை கோதுமை தோசை. கோதுமையில் செய்யப்படும் சப்பாத்தியை போன்று தோசையும் ரொம்பவே சுவையானதாக இருக்கும். ஆனால் அதை பலருக்கும் பக்குவமான முறையில் மொறு மொறுவென்று ருசியாக கிரிஸ்பியாக செய்ய தெரியவில்லை என்று விட்டு விடுகிறார்கள். வெறும் கோதுமையை வைத்து தோசை சுட்டால் தோசை நன்றாக வராது. அதை எப்படி பக்குவமான பதத்தில் மாற்றுவது? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

wheat-flour

அடிக்கடி அரிசி உளுந்து சேர்த்த தோசையை சுட்டு சாப்பிடுவதை விட கோதுமையில் செய்த தோசையை சேர்த்துக் கொண்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். தேவையற்ற சதைகள் குறைந்து ஃபிட்டாகவும் இருக்க உதவும். கோதுமை மாவுடன் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து இனிப்பாகவும் ஒரு சிலர் தோசை சுடுவார்கள். வெறும் கோதுமை மாவை கரைத்து ஊற்றினால் தோசை ஜவ்வு போன்று இருக்கக்கூடிய தன்மையில் இருக்கும். இதனை சாப்பிடுவதற்கும் நமக்கு பிடிக்காமல் போய்விடும்.

இவ்வாறு தோசை சுடுவதற்கு சிலருக்கு நன்றாக வராது. கல்லில் ஒட்டிக் கொண்டு பிய்ந்து போய்விடும். இதை ரவா தோசை போல் மொறுமொறுவென்று சுடுவதற்கு கூடுதலாக இரண்டு பொருட்களை நாம் சேர்க்கப் போகிறோம். ஒரு நபருக்கு 100 கிராம் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு ரவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ravai

ரவை வறுத்த ரவையாக இருந்தால் மீண்டும் வறுக்க தேவையில்லை. அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி மாவை சேர்ப்பதால் கோதுமை தோசை சாதாரண தோசை போல் அழகாக வார்க்க வரும்.

- Advertisement -

கோதுமை தோசையை பொறுத்தவரை சரியான அளவில் உப்பு சேர்க்க வேண்டும். கூடுதலாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் சுவை போய்விடும். எனவே அதில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அனைத்தும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் கோதுமையை எந்த கப்பில் அளந்து கொண்டீர்களோ! அதே கப்பில் இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளுங்கள். கோதுமை மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றினால் கட்டிகள் சேர்ந்துவிடும். தண்ணீரை தேவையான அளவிற்கு மொத்தமாக ஊற்றி பின்னர் கலந்து விட்டால் கட்டிகள் இல்லாமல் சீராக கரைந்து விடும்.

jeeragam

இதனுடன் சிறிதளவு சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள் சுவையாக இருக்கும். அதே போல் சாதாரண தோசை சுடுவது போல் இல்லாமல், ரவா தோசை ஊற்றுவது போல் ஊற்ற வேண்டும். அதாவது முதலில் கல்லுக்கு நடுவில் ஊற்றாமல் ஓரத்தில் ஊற்றி அப்படியே நடுப்பகுதிவரை ஊற்றி வர வேண்டும். பின்னர் ஓரங்களில் எண்ணெய் ஊற்றி வேக வைத்தால் மொறுமொறுவென்று வெந்துவிடும்.

wheat-dosa3

பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டும் சுவையான கோதுமை தோசை நொடி நேரத்தில் தயார் செய்து விடலாம். இனி யாரும் உங்கள் வீட்டில் கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள். இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு சரியான பக்குவத்தில் கோதுமை தோசை ரெடி ஆகி இருக்கும். காலையில் எழுந்ததும் மாவு பாக்கெட்டை தேடாமல் ஆரோக்கியமான கோதுமையை கொண்டு செய்யப்படும் தோசையை சுட்டு அசத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
தோசை மாவு உங்கள் வீட்டில் இல்லை என்றாலும் கூட பரவாயில்லை. மாவு ஆட்ட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இந்த மொறு மொறு தோசையை 5 நிமிடத்தில் சுட்டு விடலாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.