தோசை மாவு உங்கள் வீட்டில் இல்லை என்றாலும் கூட பரவாயில்லை. மாவு ஆட்ட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இந்த மொறு மொறு தோசையை 5 நிமிடத்தில் சுட்டு விடலாம்.

hotel-dosa

தோசை மாவு இல்லை என்றாலும் கூட பரவாயில்லை, நம்முடைய வீட்டில் மொறு மொறு தோசை காண மாவை, 10 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த வகையில் மொறு மொறு தோசை ரெசிப்பியையும் அந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள காரசாரமான ஒரு சட்னியையும், தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தோசை மாவு இல்லை என்ற கவலை இனி வேண்டாம். தோசை மாவை 2 நிமிடத்தில் தயார் செய்து விடலாமா?

dosa-mavu

Step 1:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 கப் அளவு ரவையை போட்டுக் கொள்ளவும் (200 கிராம் ரவை), 2 டேபிள் ஸ்பூன் அளவு கோதுமை மாவும் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வறுக்காத ரவையை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். (ரவையையும் கோதுமையும் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.)

Step 2:
அதன் பின்பு இந்த கலவையை ஒரு பவுலில் மாற்றி, தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். ரவை அளந்த அதே கப்பில், 1/2 கப் அளவு தயிரை மாவில் ஊற்றி, கரைக்க வேண்டும். அதன் பின்பு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, மாவை தோசை மாவு பதத்திற்கு கலக்கி 5 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து விடுங்கள். தேவையான அளவு உப்பையும் மறக்காமல் போட்டு விடுங்கள்.

dosai-maavu

தயிரின் வாசம் பிடிக்காதவர்கள், தயிர் வீட்டில் இல்லை என்றால் கூட, பரவாயில்லை. வெறும் தண்ணீரை ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். தயிர் ஊற்ற வில்லை என்றால், மாவை 20 நிமிடங்கள் வரை கொஞ்சம் லேசாக புளிக்க் வைக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

Step 3:
அதன் பின்பு எப்போதும் போல தோசைக்கல்லில் தோசை வார்ப்பது போல், ஊற்றினால் போதும். ஹோட்டல் தோசை போல மொறு மொறு தோசை தயார். அரிசி மாவு தோசை கெட்டது. அந்த அளவிற்கு இது மொறுமொறு வென்று இருக்கும். சுவையும் சூப்பராக வரும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

onion-chutni

இந்த தோசைக்கு வதக்காமல், கஷ்டப்படாமல் ஒரு வெங்காய சட்னியையும் பார்த்துவிடுவோமா. ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பெரிய வெங்காயம் – 2(துண்டுகளாக நறுக்கியது), காஷ்மீரி சில்லி 4, சாதாரண வரமிளகாய் – 2, ஒரு சிறிய துண்டு – வெல்லம்(சின்ன எலுமிச்சம்பழம் அளவு), தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு இந்த பொருட்களை போட்டு வெறுமனே தண்ணீர் ஊற்றி அரைத்து, எப்போதும் சட்னியைத் தாளிப்பது போல், தாளித்து சாப்பிட்டால் சூப்பர் வெங்காய சட்னி தயாராகி இருக்கும். இந்த தோசைக்கு இந்த சட்னி நல்ல காம்பினேஷன் கொடுக்கும்.

chilli

காஷ்மீரி சில்லி போடும்போது வெங்காய சட்னி யின் நிறம் சிவப்பு நிறமாக வரும். (தக்காளி சேர்க்க வில்லை அல்லவா?) காஷ்மீரி சில்லி வீட்டில் இல்லாதவர்கள் வரமிளகாயை கொஞ்சம் அதிகமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால், கலர் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 10 நிமிடத்தில் காலை உணவை தயார் செய்வதற்கு தேவையான ரெசிபியை இன்னைக்கு நீங்க தெரிஞ்சுகிடீங்க! நாளைக்கு காலைல, உங்க வீட்ல இந்த பிரேக்பாஸ்ட் செஞ்சு பாருங்க. கட்டாயம் எல்லோருக்கும் பிடிக்கும்.