பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர, திருமண பாக்கியம் கிடைக்க இங்கு வழிபடுங்கள்

amman-temple

நமது நாட்டில் கிராம தெய்வ வழிபாடு என்பது மிக தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் தமிழ்நாட்டில் கிராமபுறங்களில் அம்மனை காவல் தெய்வமாக வழிபடுவது பரவலாக காணப்படும் ஒரு வழக்கமாகும். அனைத்து செயல்களுமே தெய்வத்தின் அருள்படி தான் நடக்கிறது என்பது அனைவருமே அறிந்திருந்தாலும் தங்களின் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு தெய்வத்திடம் மக்கள் அனுமதி கேட்கும் ஒரு கோயிலாக எழுமேடு அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில் இருக்கிறது. இக்கோயிலின் சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அருள்மிகு பச்சைவாழியம்மன் கோயில் வரலாறு

சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இந்த பச்சைவாழி அம்மன் கோயில் இருக்கிறது இக்கோயிலின் பிரதான தெய்வமான அம்மன் பச்சைவாழியம்மன் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். தல புராணங்களின்படி பச்சைபசேல் என வயல் வெளிகள் சூழ்ந்திருந்த இந்த ஊரையும், அதில் வசித்த மக்களையும் காப்பதற்கு அம்மன் ஒரு பச்சை பச்சை மரத்தில் குடி அமர்ந்தாள். இந்த தகவலை ஊர் பெரியவர் ஒருவர் கனவில் வந்து அம்மன் உரைக்க, விடிந்ததும் அப்பெரியவர் ஊர் மக்களிடம் இந்த கனவை பற்றி கூறிய போது அனைவரும் மெய்சிலிர்த்தனர். பிறகு ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பச்சைவாழி அம்மனுக்கு இங்கு கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.

அருள்மிகு பச்சைவாழியம்மன் கோயில் சிறப்புகள்

பழமையான இக்கோயில் பிரகாரத்தில் கருப்பண்ணசாமி சந்நிதி, கொடிமரம் மற்றும் குதிரை வாகனம் இருக்கின்றன. கடலூர், பண்ருட்டி, எழுமேடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் சுப காரியத்திற்கு முன்பாக இக்கோயிலுக்கு வந்து அம்மனிடம் உத்தரவைக் கேட்டு அக்காரியத்தை மேற்கொள்கின்றனர். அம்மன் விக்கிரத்தின் தோளின் மீது எலுமிச்சைப் பழத்தை வைத்து, செய்யப்போகும் காரியம் குறித்து மனதில் வேண்டிக்கொள்வார்கள். பழம் கீழே விழுந்தால் அக்காரியம் வெற்றி பெரும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கையாகும்.

Meenatchi amman

- Advertisement -

பச்சைவாழியம்மன் காவல் தெய்வமாக இருப்பதால் அம்மனுக்கு பூஜை செய்யும்போது, அந்த தெய்வத்திற்கு மிகவும் பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்வது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். திருமண பாக்கியம் கிடைக்கவும், பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பச்சை புடவை சாத்தி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ஆடி மாதங்களில் வரும் ஆடி வெள்ளி ஆடி அமாவாசை தினங்கள் அம்மனுக்கு விழா கொண்டாடப்படுகிறது.

கோயில் அமைவிடம்

அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில் கடலூர் மாவட்டத்தில் எழுமேடு என்கிற ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில்
எழுமேடு
கடலூர் மாவட்டம் – 607104

இதையும் படிக்கலாமே:
கல்வியில் சிறந்து விளங்க இங்கு சென்று வழிபடுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Cuddalore pachai vazhi amman temple in Tamil. It is also called as Sri pachai vazhi amman kovil in Tamil or Amman kovilgal in Tamil or Pachaivazhi amman in Tamil or Cuddalore mavatta kovilgal.