ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்! இவரா ?

aus

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 2 போட்டிகளை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் வென்றுள்ளது. இதனால் இந்திய அணி (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

labus-1

தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற உள்ளது. அந்த அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் லீமன் பீடி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பெயின் நன்றாக செயல்பட்டாலும் அவரால் வெற்றியை ஈட்ட முடியவில்லை. எனவே, புதிய கேப்டனாக இளம் வீரரான பேட் கம்ம்மின்ஸ் நியமிக்கப்பட்டால் அது அணிக்கு நல்ல உத்வேகம் தரும் என்று தெரிவித்துள்ளார்.

cummins

மேலும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டையும் சிறப்பாக செய்து வரும் கம்மின்ஸ் கண்டிப்பாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்வார் என்றும் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி சமீபமாக நல்ல கேப்டன் இல்லாமல் தவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே :

சிட்னி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – இத்தனை மாற்றங்களா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்