தயிரில் காரச்சட்னி வித்தியாசமா இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! 4 நாள் ஆனாலும் கெட்டுப் போகாது! சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கும்.

- Advertisement -

தினமும் ஒரே விதமான சட்னி அரைத்து போரடித்து விட்டதா? அடிக்கடி வித்தியாசமான சட்னியும், விதவிதமான சட்னியும் செய்து கொடுத்தால் வீட்டில் உங்களுக்கு பாராட்டு மழை தானே! எவ்வளவு சட்னி வகைகள் இருந்தாலும் இந்த தயிர் சட்னி மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். தயிர் கொண்டு சட்னி எப்படி செய்வது? என்று ஆச்சரியப்படத் தேவையில்லை. இந்த முறையில் நீங்கள் தயிர் சேர்த்து காரசாரமான கார சட்னி செய்து கொடுத்துப் பாருங்கள். மீண்டும் மீண்டும் வேண்டும் என்று கேட்பார்கள். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

curd

‘தயிர் கார சட்னி’ செய்ய தேவையான பொருட்கள்:
தயிர் – 3/4 கப், சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், மல்லி தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை – சிறிதளவு, நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, தண்ணீர் மற்றும் உப்பு தேவையான அளவிற்கு.

- Advertisement -

‘தயிர் கார சட்னி’ செய்முறை விளக்கம்:
முதலில் கெட்டியான தயிரை நன்கு பீட் செய்து கட்டிகளில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சட்னியை 4 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம், கெட்டுப் போகாது எனவே 3 லிருந்து 4 டேபிள்ஸ்பூன் வரை தாராளமாக எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

kara-chutney2

எண்ணெய் காய்ந்து சூடானதும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் லேசாக வதங்கியதும் அதில் பூண்டு பேஸ்டை சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டை உரலில் இடித்தும் சேர்க்கலாம். பூண்டு பச்சை வாசம் போனதும் மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்தால் நிறம் அட்டகாசமாக காட்சி தரும். ஆனால் காரம் ஒன்றும் அவ்வளவாக இருக்காது.

- Advertisement -

பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். மசாலாக்களின் பச்சை வாசம் போனதும் அரை டம்ளர் அளவிற்கு கொஞ்சமாக தண்ணீரை சேர்த்து கொதிக்க விடுங்கள். பின்னர் நன்கு கரைத்து வைத்துள்ள தயிரை சேர்த்து விடாமல் கிண்டிக் கொண்டே இருங்கள். அப்போது தான் தயிர் திரி திரியாக போகாமல் ஒன்று போல நைசாக திரண்டு வரும். தயிர் கெட்டியாகி சட்னி போல திக்காக வரும் பொழுது அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை தூவி இறக்க வேண்டியது தான்.

curd-chutney1

அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப சுலபமா ஆரோக்கியம் மிகுந்த இந்த தயிர் சட்னி உடலுக்கு நன்மைகளை செய்யும் வகையில் இருக்கும். மேலும் ஃப்ரிட்ஜில் வைத்து 4 நாட்கள் வரை சாப்பிடலாம் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும் இந்த தயிர் கார சட்னியை நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -