இனி தயிர் உரைய காத்திருக்க வேண்டாம் பத்தே நிமிஷத்தில் பாலை தயிராக மாற்ற ஒரு சூப்பர் ட்ரிக்ஸ் இருக்கு. இது போல ஒரு ஐடியா இருக்குன்னு இதுவரைக்கும் தெரியாம போச்சே.

curd prepare
- Advertisement -

அந்த காலம் முதல் இன்றைய காலம் வரை ஒரு சில பொருட்களை கடைகளில் அதற்கான தரத்துடன் கிடைத்தாலும் கூட வீட்டில் செய்வதை தான் அனைவரும் விரும்புவார்கள். அதில் ஒன்று தான் பாலை உறை ஊற்றி தயிராக மாற்றுவது. இதை என்ன தான் கடைகளில் கெட்டியான தயிராக கிடைத்தாலும் கூட வீட்டில் பால் காய்ச்சி உறை ஊற்றி தயிராக்கிய பின் சாப்பிடுவதில் இருக்கும் ருசி கிடைப்பதில்லை. அதில் ஒரு திருப்தியும் இருக்கத் தான் செய்யும். அப்படி செய்யப்படும் இந்த தயிரானதை ரொம்பவும் சுலபமாக பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது என்பதை தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் பாலை உறை ஊற்றுவதாக இருந்தால் இரவு படுக்கும் பொழுது ஊற்றி வைத்து மறுநாள் காலையில் தான் நமக்கு கெட்டியான தயிர் கிடைக்கும். ஒரு வேளை நாம் அன்றைய சமையலுக்கு உரை ஊற்றி வைக்க மறந்து விட்டால் கடையில் தான் வாங்க வேண்டும் . அப்படியல்லாமல் 10 நிமிடத்தில் சுலபமாக பாலை உறைய வைக்க சூப்பர் ஐடியா இருக்கு.

- Advertisement -

அதுக்கு முதலில் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து நீங்கள் எந்த பாத்திரத்தில் உறை உற்ற வேண்டுமோ அந்த பாத்திரத்தில் சுற்றிலும் கொஞ்சமாக உரைமாறு தடவி விட்ட பிறகு காய்ச்சி வச்ச பாலை இதில் ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றும் போது பால் ஓரளவிற்கு வெதுவெதுப்பான சூட்டுடன் இருக்க வேண்டும் .அப்போது தான் பால் சீக்கிரம் தயாராகும்.

அடுத்து இந்த கிண்ணத்தில் பாலை ஊற்றிய பிறகு மீதம் இருக்கும் கொஞ்சம் உரை மோரையும் இதில் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு அடுப்பில் குக்கர் வைத்து அதில் நீங்கள் ஊற்றி வைத்திருக்கும் உரை ஊற்றி இருக்கும் பால் பாத்திரத்தை வையுங்கள். பாத்திரம் பாதி அளவு முழுவதும் வரை தண்ணீர் ஊற்றிய பிறகு குக்கரை இறுக்கமாக மூடி விடுங்கள். இப்போது குக்கருக்கு விசில் போடக் கூடாது.

- Advertisement -

ஒரு பத்து நிமிடம் வரை குக்கரில் இருக்கும் தண்ணீர் நன்றாக கொதிக்கட்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு குக்கரை எடுத்து சூடு ஆறிய பிறகு மூடியை திறந்து உள்ளிருக்கும் பால் பாத்திரத்தை எடுத்துப் பாருங்கள். நீங்கள் பத்து நிமிடத்திற்கு முன்பு ஊற்றிய பால் இப்போது நல்ல கெட்டியான தயாராக மாறி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஒரு ரூபாய் ஷாம்பு இருந்தா பல வருடங்களாக பயன்படுத்தாமல் பாழடைந்த பூஜை பாத்திரங்களை கூட பத்து நிமிஷத்தில் பல பளப்பளவென்று ஜொலிக்க வைக்கலாம். இதுவரை யாரும் சொல்லாத ஒரு புது ஐடியா.
பாலை தயிராக மாற்ற இனி அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த முறையில் நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க. ஒரு வேளை காலையில் சமைக்கும் போது ஞாபகம் வந்தால் கூட சமையல் வேலை முடிப்பதற்குள்ளாகவே உங்களுக்கு தயிர் தயாராகி விடும். இந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்

- Advertisement -