சூப்பரான கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை அரவை புளி குழம்பு எப்படி செய்வது?

curry-cothamalli-gravy

நம்முடைய உடலுக்கு ஆரோக்கியமான ஒரு குழம்பைதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கருவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து வைக்கக் கூடிய இந்த அரவை குழம்பு, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தருவது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த குழம்பை விருப்பமாக சாப்பிடும் அளவிற்கு, இதன் ரூசி சூப்பரா இருக்கும். வித்தியாசமான இந்த கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை புளி குழம்பு, சுலபமா சுவையா எப்படி வைப்பது தெரிந்து கொள்ளலாமா?

curruvepialai-kuzhambu

Step 1:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அளவு ஊற்றி, பின்வரும் பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்க வேண்டும். மிளகு – 1ஸ்பூன், சீரகம் – 1ஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 5 பல்(தோல் உரித்தது), பச்சை மிளகாய்-2 (தேவைப்படுபவர்கள் வரமிளகாய் வைத்துக்கொள்ளலாம். காரத்திற்கு தகுந்தவாறு, மிளகாயின் அளவையும் சேர்த்து வைத்து கொள்ளலாம்), கொத்தமல்லித் தழை – அரை கைப்பிடி, கறிவேப்பிலை – அரை கைப்பிடி, இவைகளை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நிமிடத்தில் இருந்து, இரண்டு நிமிடம் வரை சிவக்கும் அளவிற்கு வறுக்க வேண்டும். இறுதியாக 1/2 கப் அளவு தேங்காய் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும்.

வதக்கிய இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸி ஜாரில் சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு எழுமிச்சம் பழம் அளவு புளியை எடுத்து தண்ணீரில் போட்டு, கரைத்த புளிக்கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (இப்போது நம் கைகளில் குழம்பு செய்வதற்கு தேவையான புளிக் கரைசல், மசாலா பேஸ்ட் தயார்.)

curry-leaves

Step 2:
அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து, 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதில் வெந்தயம் – 1/2 ஸ்பூன், சிறிய வெங்காயம் – 10 பல் போட்டு, நன்றாக வதக்கவேண்டும். அடுத்ததாக பழுத்த 1 தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி போட்டு வதக்க வேண்டும். தக்காளி வதங்கியவுடன், மிக்ஸியில் தயாராக  அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்டை, கடாயில் ஊற்றி விட வேண்டும்.

- Advertisement -

மிக்சி ஜாரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கழுவி கடாயில் சேர்த்து விடுங்கள். இறுதியாக 1 ஸ்பூன் அளவு மல்லித்தூளை குழம்போடு சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, புளி கரைசலை ஊற்றி, நன்றாக கலக்கிவிட வேண்டும். இந்த இடத்திலேயே குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

curry-leaves1

இந்த குழம்பை, மூடி போட்டு, மிதமான தீயில் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இருக்கினீர்கள் என்றால், சூப்பரான சுவையான குழம்பு ரெடி. சூடான சாப்பாட்டில், இந்த குழம்பை ஊற்றிப் பரிமாறுங்கள். இதன் வாசமும் சுவையும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். உங்க வீட்ல வடிச்ச சாப்பாடு கட்டாயம் பத்தவே பத்தாது பாருங்க! அந்த அளவுக்கு சூப்பர் குழம்பு இது. ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு புடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
‘மீல் மேக்கர்’ பிடிக்காதவர்கள் கூட எனக்கும் வேண்டுமென கேட்கும் அளவிற்கு இப்படி கிரேவி செய்து கொடுங்கள்! அப்புறம் தட்டுல ஒரு பருக்கை கூட மிஞ்சாது.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.