‘மீல் மேக்கர்’ பிடிக்காதவர்கள் கூட எனக்கும் வேண்டுமென கேட்கும் அளவிற்கு இப்படி கிரேவி செய்து கொடுங்கள்! அப்புறம் தட்டுல ஒரு பருக்கை கூட மிஞ்சாது.

meal-maker-gravy4
- Advertisement -

மீல் மேக்கர் எல்லோருக்கும் பிடித்த டிஷ் இல்லை. சிலருக்கு மிகவும் பிடிக்கும் என்றால், ஒரு சிலருக்கு அறவே பிடிக்காது என்பார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா? மீல் மேக்கர் செய்யும் பொழுது அதை முறையாக செய்ய வேண்டும். இல்லை என்றால் அது மசாலாக்களை உறிஞ்சாமல் அப்படியே தனியாக இருக்கும். அதில் சில ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அதை மட்டும் தெரிந்து கொண்டால் போதும்! இது மீல்மேக்கரா? இல்லை சிக்கனா? என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்கும். இந்த சுவையான மீல் மேக்கர் கிரேவியை எப்படி செய்வது என்று இனி பார்ப்போம்.

meal-maker

மீன் மேக்கர் செய்யும் பொழுது நிறைய பேர் செய்யும் தவறு என்னவென்றால், அதை ஒழுங்காக பிழிந்து எடுப்பது கிடையாது. 100 கிராம் மீல்மேக்கரை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வேக விடுங்கள். ஒரு சில நிமிடங்களிலேயே மீல் மேக்கர் வெந்துவிடும்.
பிறகு அதை ஆறிய தண்ணீர் ஊற்றி நன்கு வடிகட்ட வேண்டும். உங்களால் எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு மீல்மேக்கரை பிய்த்து விடாமல் பிழிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதை தனியே பாத்திரத்தில் வைத்து அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். மீல்மேக்கரின் ரகசியமே இதுதாங்க! நாம் இதில் தயிர் சேர்ப்பதால் மீல் மேக்கர் நன்றாக ஸ்பாஞ்ச் போல் மெத்தென்று ஆகிவிடும். இதனால் அதன் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும். சில பேர் செய்யத் தெரியாமல் செய்து விட்டு மசாலா கலவை அதனுடன் ஊறவில்லை என்று வருத்தப்படுவார்கள். நீங்கள் தயிர் இவ்வாறு சேர்த்துக் கொண்டால் நீங்கள் எந்த மசாலா கலவை செய்தாலும் மீல் மேக்கரில் நன்கு ஊறி சூப்பராக வரும்.

meal-maker-gravy

மீல் மேக்கர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் – 100g, எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 2.

- Advertisement -

பொடி வகைகள்:
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மல்லித் தூள் – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன், சீராக தூள் – 1/2 டீஸ்பூன்.

meal-maker-gravy1

அரைக்க வேண்டியவை:
இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 8 பல், தக்காளி – 3, காய்ந்த மிளகாய் – 3.

- Advertisement -

மீல் மேக்கர் கிரேவி செய்முறை விளக்கம்:
ஒரு வாணலியை எடுத்து அடுப்பை பற்ற வையுங்கள். எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை நன்கு வறுத்து எடுக்கவும். எண்ணெய் வடித்து வெங்காயத்தை தனியே எடுத்து வைத்து ஆற விடுங்கள். வெங்காயம் ஆறிய பின் அதை கொரகொரவென மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து லேசாக வறுக்கவும். இப்போது அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து எடுத்து இதில் சேர்க்க வேண்டும். இந்த கலவை நன்கு கொதித்து திக்காக ஆகியதும் நிறம் அடர்த்தியாக மாறி வரும். அந்த சமயத்தில் அரைத்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

meal-maker-gravy2

அதன் பின் தயிரில் ஊற வைத்த மீல்மேக்கரை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடி வகைகளை போட்டு கிண்டி விடவும். ஒரு ஐந்து நிமிடம் வரை இந்த கலவையுடன் மீல் மேக்கர் கலந்து விடும்படி செய்யுங்கள். நீங்கள் இதில் தயிர் சேர்த்து உள்ளதால் கலவை நன்கு மீல் மேக்கரில் ஊறிவிடும். அதன் பின் அதிகமில்லாமல் ஒரு கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். தண்ணீர் வற்றி கிரேவி போல் ஆனதும் அடுப்பை அணைத்து பரிமாற தயார் ஆகி விடலாம். அவ்வளவு தாங்க ரொம்ப ரொம்ப ஈஸியான முறையில் சுவையான மீல் மேக்கர் கிரேவி இப்போது தயாராகி இருக்கும்.

meal-maker-gravy3

மீல் மேக்கர் பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்து கொடுத்தால் எனக்கும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்பதில் எந்த ஆச்சர்யமும் நாம் பட தேவை இல்லை. வீட்டில் எந்த காய்கறியும் இல்லை என்றால் சட்டென இந்த கிரேவியை செய்து விடலாம். சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு மிக அருமையான சைட் டிஷ்ஷாக இருக்கும். உங்கள் வீட்டில் நீங்களும் செய்து எல்லோரையும் அசத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
பார்த்தாலே நாவில் சுவை ஊறும் ருசி மிகுந்த ‘தேங்காய் பர்பி’ 15 நிமிடத்தில் எப்படி செய்யலாம்?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -