கருவேப்பிலை நிறைய இருந்தா உடனே இப்படி ஒரு சட்னியை செஞ்சு பாருங்க இட்லி, தோசைக்கு தொட்டுக்க அருமையாக இருக்குமே!

karuveppilai-chutney
- Advertisement -

ஆரோக்கியமான இந்த கருவேப்பிலை பல வகைகளில் புறக்கணிக்கப்படுகிறது. நாம் சமையல் செய்யும் பொழுதே கறிவேப்பிலையை அரைத்து சேர்த்தால் அதனுடைய சத்து நமக்கு எப்படியாவது முழுமையாக கிடைத்துவிடும். எனவே கூடுமானவரை கருவேப்பிலையை சட்னி, துவையல் என்று அரைத்து கொடுப்பது நல்லது. அந்த வகையில் இந்த முறையில் நீங்கள் கருவேப்பிலை சட்னி வச்சு பாருங்க இட்லி, தோசைக்கு தொட்டுக்க செமையாக இருக்கும். டேஸ்டியான கருவேப்பிலை சட்னி எளிதாக செய்வது எப்படி? என்பதை தான் இந்த பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கறிவேப்பிலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 15, பெரிய தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 3, பச்சை கருவேப்பிலை – இரண்டு கைப்பிடி, தேங்காய் துருவல் – கால் கப், உப்பு – தேவையான அளவு, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன்.

- Advertisement -

கறிவேப்பிலை சட்னி செய்முறை விளக்கம்
கருவேப்பிலை சட்னி செய்வதற்கு முதலில் பச்சையாக பிரஷ்ஷாக இருக்கும் கருவேப்பிலை இலைகளை உருவி இரண்டு கைப்பிடி அளவிற்கு வருமாறு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் இல்லை என்றால் அதற்கு பதிலாக ரெண்டு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் உளுந்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும் அதனுடன் நீங்கள் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி வரும் பொழுது, ஒரு பழுத்த பெரிய தக்காளி பழத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். இவை மசிய வதங்கி வரும் பொழுது பச்சை மிளகாய்களை உங்கள் காரத்திற்கு ஏற்ப காம்புகளை நீக்கி சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

ஓரளவுக்கு இவை சுருள வதங்கி வரும் பொழுது நீங்கள் ஃபிரெஷாக எடுத்து வைத்துள்ள கருவேப்பிலை இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் கருவேப்பிலைகள் நன்கு வதங்கிய பின்பு சிறு நெல்லிக்காய் அளவுக்கு புளி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் துருவிய தேங்காய் கால் கப் அளவிற்கு சேர்த்து ஒரு முறை நன்கு வதக்கி விட்டு அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஆற வைத்த பொருட்களை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
சுட சுட இட்லிக்கு மேல் இந்த ‘கார நீர் சட்னி’ வார்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவை உச்சந்தலைவரை ஏறும். 10 இட்லி சாப்பிட்டாலும் பத்தாதுன்னு சொல்வீங்க.

ஒரு சிறு தாளிப்பு இப்பொழுது கொடுத்துக் கொள்ளலாம். தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து சட்னியுடன் சேர்த்து கலந்து விடுங்கள். அவ்வளவுதாங்க இட்லி, தோசை போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட அவ்வளவு டேஸ்ட்டியாக மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கும் இந்த கருவேப்பிலை சட்னி ரெசிபி நிச்சயம் உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -