7 நாட்களில் வழுக்கை விழுந்த இடத்தில், முடியை வளரச் செய்ய முடியும். கஷ்டப்பட வேண்டாம்! கவலைப்பட வேண்டாம். ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை இருக்கா உங்க வீட்டில்?

hair3

சிறுவயதிலேயே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி இந்த முடி உதிர்வு பிரச்சினை ரொம்பவும் அதிகமாகவே உள்ளது. காரணம் வேலையில் இருக்க கூடிய மன அழுத்தம், உடல் சூடு, தேவையில்லாத பிரச்சினைகளில் வரும் குழப்பங்கள். நிம்மதியான வாழ்க்கை சூழல் இன்று நமக்குக் கிடையாது. குறிப்பாக இளைஞர்கள் ஓடி ஓடி பணம் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த சூழ்நிலையிலும் நம்முடைய முடியை பாதுகாக்க என்ன செய்வது? அழகும் ஒரு பக்கம் முக்கியம்தானே. முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, முடியை வளரச் செய்ய மிக மிக சுலபமான முறையில் ஒரு வழியைத்தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

hair4

நேரடியாக பதிவுக்கு சென்றுவிடுவோம். ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை எடுத்து, நன்றாக தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் அந்த ஒரு கைப்பிடியளவு கறி வேப்பிலையைப் போட்டு, 1 சிறிய டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து விடுங்கள். ஒரு வடிகட்டியில் இந்தச் சாறை மட்டும் வடிகட்டி, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அல்லது சிறிய சாதாரண பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தண்ணீரை உங்களுடைய தலையில் வேர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்ய வேண்டும். இரவு இந்த மசாஜை செய்து விட்டு அப்படியே விட்டு விட்டு, மறுநாள் காலை பொழுது விடிந்ததும் தலைக்கு குளித்து கொள்ளலாம். அதிகப்படியான ஈரத்துடன் அப்படியே உறங்க செல்லாதீர்கள்.

hair5

உறங்கச் செல்வதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே இந்த ஸ்ப்ரேவை உங்களுடைய தலைக்கு மசாஜ் செய்து கொடுத்து விடுங்கள். உங்கள் தலையில் தடவிய அந்த ஈரம் தூங்க செல்வதற்கு முன்பே காய்ந்து விட வேண்டும்.

- Advertisement -

தினமும் இப்படி ஏழு நாட்கள் செய்யலாம். தவறில்லை, உங்களுக்கு தினமும் தலைக்கு குளித்தால் தலை பாரம் ஏற்படும், சளி தொந்தரவு ஏற்படும் எனும் பட்சத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் செய்து பாருங்கள். நிச்சயமாக இரண்டே வாரத்தில் உங்களுடைய தலைமுடி உதிர்வு நிற்பதில் வித்தியாசம் தெரியும். அடுத்த இரண்டு வாரங்களில் முடி வளர்வதை உணர்வீர்கள்.

முடிந்தால் கொஞ்சம் கறிவேப்பிலையை பொடியாக செய்து சாதத்தோடு கலந்து தினந்தோறும் சாப்பிட்டு வர வேண்டும். அப்போது இரண்டு மடங்கு பலனை அதிகமாக இந்த ரெமிடி உங்களுக்கு கட்டாயம் கொடுக்கும்.

hair-2

மன அழுத்தம், சோர்வு, கவலை பட பிரச்சனை எது இருந்தாலும் இரவு கட்டாயம் 7 மணி நேரமாவது ஒரு மனிதனுக்கு நிம்மதியான தூக்கம் இருக்க வேண்டும். தூக்கம் சரியில்லை, மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் முடி உதிர்வு குறையாது. மேல் சொன்ன குறிப்பே தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் தாராளமாக, ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.