கடகடன்னு, கருகருன்னு முடி வளர்ச்சியை தரும் கருவேப்பிலை ஹேர் பேக். இந்த ஹேர் பேக் போட்டால் ஊரே உங்க முடியை பார்த்து கண்ணு வைக்கும் பாத்துக்கோங்க.

hair10
- Advertisement -

ஊரே உங்கள் முடியைப் பார்த்து கண்ணு வைக்கும் அளவுக்கு உங்களுடைய முடி கருகருவென கடகடவென அடர்த்தியாக வளர வேண்டும் என்றால் இந்த ஹேர் பேக் ட்ரை பண்ணி பார்க்கலாம். கறிவேப்பிலையில் முடி வளர்வதற்கு எவ்வளவு சத்து இருக்கிறது என்பது நமக்கே தெரியும். ஊட்டச்சத்து நிறைந்த இந்த கருவேப்பிலையை ஹேர் பேக் போடுவதுடன் விட்டுவிடாமல், கொஞ்சம் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு, சாப்பாட்டிலும் போட்டு பிசைந்து சாப்பிடுங்கள். முடி வளர்ச்சி இன்னும் வேகமாக இரட்டிப்பாக அதிகரிக்கும். சரி இப்போ பேக் எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

முதலில் கருவேப்பிலைகளை நன்றாக காய வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து தேவையான அளவு பொடியை எடுத்து ஹேர் பேக்கிற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்பின்பு திக்கான தேங்காய்ப்பால் தேவை. இரண்டு கைப்பிடி அளவு தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்து தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய பௌவுல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 2 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை பொடி, தேவையான அளவு தேங்காய் பாலை விட்டு முதலில் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் தண்ணீராக கரைக்க வேண்டாம். கொஞ்சம் திக்கான பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக அலோ வேரா ஜெல். உங்களுக்கு இயற்கையாக அலோ வெற ஜெல் கிடைத்தால் அதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் கடைகளில் விற்கும் அலோ வேரா ஜெல்லைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

தேங்காய் பாலுடன் கலந்து வைத்திருக்கும் கருவேப்பிலை பேக்குடன் 2 டேபிள்ஸ்பூன் அலோ வேரா ஜெல் போட்டு நன்றாக கலந்து கொள்ள கொழகொழவென ஒரு ஹேர் பேக் உங்களுக்கு கிடைத்திருக்கும். இந்த ஹேர் பேக்கை தான் தலைக்கு பயன்படுத்த போகின்றோம். (கருவேப்பிலை பொடி, தேங்காய்ப்பால், அலோ வேரா ஜெல் இந்த மூன்று பொருட்களும் சேர்ந்ததுதான் ஹேர்பேக்.)

- Advertisement -

எப்போதும் போல தான், தலையில் நீங்கள் வைக்கும் தேங்காய் எண்ணெயை நன்றாக வைத்து அதன் பின்பு சிக்கு எடுத்து விட்டு இந்த ஹேர் பேக்கை நன்றாக ஸ்கேல்ப்பில் போட்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்பு முடியின் எல்லா இடங்களிலும் மேலிருந்து கீழ் பக்கம் வரை இந்த பேக்கை அப்ளை செய்து, கொண்டை கட்டிக்கொள்ளுங்கள்.

20 லிருந்து 30 நிமிடம் இந்த பேக் தலையில் நன்றாக ஊறியதும், ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு நன்றாக அலசி விட வேண்டும். வாரத்தில் இரண்டு நாள் இந்த பேக் ட்ரை பண்ணலாம். எனக்கு எந்த பேக் போட்டும் தலைமுடி வளர்ப்பதில் வித்தியாசம் தெரியவில்லை என்பவர்கள் இந்த பேக்கை ட்ரை பண்ணா நிச்சயமாக கருகருவென முடி அடர்த்தியாக வளர தொடங்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -