காஞ்சி வீணா போன கருவேப்பிலையை தூக்கி போடுவீங்களா? இது தெரிஞ்சா இனி தூக்கி போட மாட்டாங்க இப்படித்தான் செய்வீங்க!

curry-leaves-powder1
- Advertisement -

காய்கறிகள் வாங்கும் பொழுது இலவசமாக கிடைக்கக் கூடிய இந்த கருவேப்பிலை உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மைகளை செய்யும் என்று தெரியுமா? சுலபமாக இலவசமாக கிடைக்கும் என்பதால் அதனை நாம் அலட்சியப்படுத்தி விடுகிறோம். மேலும் சாப்பிடும் பொழுது இடையிடையே வருவதால் அது நமக்கு தொந்தரவாகவும் நினைக்கிறோம். கறிவேப்பிலையை வைத்து இதெல்லாம் செய்ய முடியுமா? என்று தெரிந்தால் இனி கறிவேப்பிலையை காஞ்சி போச்சு என்று தூக்கி போட மாட்டாங்க. சரி காஞ்சி போன கறிவேப்பிலையை வைத்து என்ன செய்யப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்.

நம் தாய்மார்கள் மற்றும் பாட்டிமார்கள் எல்லாம் காய்ந்து போன கருவேப்பிலையை ஒரு துணிப்பையில் போட்டு வைத்திருப்பார்கள். குழம்பிற்கு பயன்படுத்த வீட்டில் மிளகாய் தூள் அரைக்க செல்லும் பொழுது இந்த கருவேப்பிலைகளை உருவி சேர்த்து அரைத்து கொள்வார்கள். கருவேப்பிலையின் சத்து வீணாகாமல் நமக்கு ஏதாவது ஒரு வகையில் கிடைக்கும். இப்படி எதிலெல்லாம் கறிவேப்பிலையை சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

காய்ந்து போன கறிவேப்பிலை உடைந்து போகும் அளவுக்கு நன்கு காய்ந்து போய் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஒரு நாள் முழுவதும் பாதுகாப்பான இடத்தில் மொட்டை மாடியில் வெயிலில் நன்கு காய வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் வெறும் வாணலியில் 2 நிமிடம் வதக்கி எடுத்தால் காய்ந்து விடும். இந்த கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

karuveppilai

இதனை ஒரு ஏர் டைட் கண்டைனர் பாக்ஸில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நமக்கு எப்போதெல்லாம் தேவையோ? அப்போதெல்லாம் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். முதலாவதாக கறிவேப்பிலை பொடியை தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் இளநரை பிரச்சனை, முடி உதிர்வது போன்ற பிரச்சனைகள் நீங்கி கருகருவென அடர்த்தியாக இயற்கையாகவே எந்த ரசாயனக் கலவையும் இல்லாமல் முடி நன்கு வளரும்.

- Advertisement -

கறிவேப்பிலை பொடியை ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் நீங்கி உடல் எடை கணிசமாக குறையும். இது குடிப்பதற்கு கசப்பாக இருக்காது எனவே தாராளமாக அப்படியே குடித்து விடலாம் இல்லை என்றால் வடிகட்டியும் குடிக்கலாம். இட்லி பொடி, ரசப் பொடி போன்ற பொடி வகைகளை அரைக்கும் பொழுது கருவேப்பிலை பொடியையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் கறிவேப்பிலையின் சத்து கிடைத்து உடல் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் சுவையும் அசத்தலாக இருக்கும்.

curry-leaves-powder

புளியோதரை, தேங்காய் சாதம், மாங்காய் சாதம், லெமன் சாதம் போன்ற கலவை சாத வகைகள் செய்யும் பொழுது ஒரு டீஸ்பூன் அளவிற்கு இந்த கறிவேப்பிலை பொடியை சேர்த்து கிளறினால் அட்டகாசமான சுவையுடன், மணமும் அற்புதமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அசைவ உணவுகளுடன் கடைசியாக கறிவேப்பிலை பொடியையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கினால் வீடே மணக்கும், சுவை தூக்கலாக இருக்கும். மேற்கண்ட இந்த முறைகளில் கருவேப்பிலையை வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -