இன்ஸ்டன்ட் இட்லி மாவு அரைக்கும் முறை

instant idly batter recipe
- Advertisement -

இன்றைய அவசர காலக்கட்டத்தில் எல்லோரும் இருக்கக்கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆகையால் நம்முடைய வேலைகளை எந்த அளவிற்கு சுலபமாகவும் சீக்கிரமாகவும் செய்ய முடியும் என்று தான் யோசிக்க வேண்டும். அதில் முதலாவதாக எடுத்துக் கொள்வது என்றால் நம்முடைய உணவு வேலை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இத்தனை வேகமாக ஓடவும் உழைக்கவும் ஆரோக்கியம் மிகவும்.

அதற்கு அடிப்படையான தேவை என்பது நல்ல உணவு. அந்த உணவை நாம் கடைகளில் வாங்கி உண்ணாமல் வீட்டிலே அதுவும் சுலபமாக செய்து சாப்பிட்ட வேண்டும். அதற்கு ஒரு அருமையான வழி தான் இந்த இட்லி தோசை மாவு தயாரிப்பது. இப்போதெல்லாம் கடைகளில் நினைத்தவுடன் வாங்க முடியும் ஆனால் அது அத்தனை ஆரோக்கியமானதா என்றால் கேள்வி குறிதான்.

- Advertisement -

இந்த முறையில் மாவு அரைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் இல்லத்தரசி முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க அந்த மாவை எப்படி அரைப்பது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி -5 கப்,
உளுத்தம் பருப்பு – 1 கப்,
ஜவ்வரிசி – 1/4 கப்.

- Advertisement -

செய்முறை

இந்த முறையில் மாவரைத்து வைத்துக் கொள்ள முடிந்த வரையில் இட்லி அரிசி பயன்படுத்துங்கள். முதலில் ஒரு பாத்திரத்தில் நான்கு டம்ளர் இட்லி அரிசியை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு மெல்லிய காட்டன் துணியில் இந்த அரிசியை பரப்பி நன்றாக ஆற விட வேண்டும்.

இந்த அரிசி காய்வதற்கு உள்ளாக நாம் உளுந்தை தயார் செய்து விடுவோம். இதற்கு உளுந்து, ஜவ்வரிசி இரண்டையும் ஒருமுறை தண்ணீர் ஊற்றி அலசிய பிறகு அதையும் இது போல காய வைத்துக் கொள்ளுங்கள். உளுந்து, ஜவ்வரிசி நன்றாக காய்ந்த பிறகு அடுப்பில் கனமான கடாய் வைத்து சூடானவுடன் இவற்றை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.

- Advertisement -

வறுக்கும் போது இதன் நிறம் மாறக் கூடாது கவனமாக வறுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வறுக்க ஆரம்பித்த சில மணி நேரத்தில் உளுந்தின் வாசம் நன்றாக வர ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்திற்குள்ளாக நீங்கள் முதலில் காய வைத்த அரிசி நன்றாக காய்ந்திருக்கும்.

அந்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை பதத்தை விட இன்னும் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக உளுந்தையும் ஜவ்வரிசியையும் போட்டு நல்ல பைன் பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த ஜவ்வரிசி உளுந்து பவுடரை ஒரு ஜல்லியில் சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கூட கொரகொரப்பு இல்லாமல் நைசாக கிடைத்து விடும்.

இப்போது அரிசி மாவு உளுந்து மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்து விடுங்கள். உங்களுக்கு இரவு இட்லி தோசை தேவைப்பட்டால் காலையில் வேலைக்கு செல்லும் போது இதை ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு சேர்த்து உப்பு போட்டு கரைத்து வைத்து விட்டு செல்லுங்கள். மாலை வரும் போது மாவு தயாராக இருக்கும். அதே போல் காலை தேவை எனில் இரவு உறங்கும் பொழுது இதை செய்து விடுங்கள் போதும்.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான முருங்கைக்கீரை பூண்டு குழம்பு செய்முறை

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இது போல அரைத்து வைத்துக் கொண்டால், இனி வாரம் வாரம் இட்லி தோசைக்கு மாவு அரைக்க என ஒரு நாளை நாம் செலவழிக்க தேவையில்லை. அதே நேரத்தில் வேலைக்கு சென்று வரும் பொழுது இரவு என்ன செய்வது என்ற கவலை இல்லாமல் வரலாம். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -