30 நாட்கள் இந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் போதும். முடி உதிர்வு குறையும். வழுக்கையாக இருக்கும் தலையில் கூட முடியை வளர வைக்கும் சுலபமான சூப்பரான ஹேர் ஆயில்.

hair3
- Advertisement -

முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதா என்று நிறைய பேர் இன்றளவும் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முதலில் கவலைப்படுவதை நிறுத்துங்கள். முடி உதிர்வது தானாக நின்றுவிடும். அதிகமாக மனக்கவலை, மன அழுத்தம், உடல் சோர்வு இருந்தாலும் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். சரி உங்களுடைய முடி உதிராமல் பாதுகாப்பாக வளர ஒரு ஹேர் பேக், ஒரு ஹேர் ஆயில் 2 ரெமிடியை இன்னைக்கு நாம இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

hair4

மிக மிக சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இதை நாமே நம் கையால் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியை அதிகமாக வளர செய்ய தேவையான சத்து கருவேப்பிலையில் உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. அந்த கறிவேப்பிலையை வைத்துதான் பின்வரும் இரண்டு குறிப்புகளும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

முதலில் கருவேப்பிலை எண்ணெய் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்வோமா? முதலில் கருவேப்பிலையை காம்புகள் இல்லாமல் உருவி தண்ணீரில் போட்டு கழுவி ஈரம் இல்லாமல் உலர வைத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை பச்சையாக இருந்தாலும் பரவாயில்லை. காய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கருவேப்பிலையில் தண்ணீர் மட்டும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

coconut-oil

தயாராக இருக்கும் இந்த கருவேப்பிலையிலிருந்து 2 கப் அளவு கருவேப்பிலைகளை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். 2 ஸ்பூன் வெந்தயத்தையும் இந்த கருவேப்பிலைகளோடு போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலைக்கு 300ml அளவு தேங்காய் எண்ணெய் சரியான அளவாக இருக்கும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை வெந்தய விழுதை எண்ணெயில் சேர்த்து அதன் பின்பு அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் இதை காய்ச்சவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்து பச்சை நிறத்திற்கு வரும்வரை எண்ணெயை சூடு செய்யுங்கள். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எண்ணெயை நன்றாக ஆறவைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் தினம்தோறும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

oil bath

மயிர்கால்களில் படும்படி 30 நாட்கள் இந்த எண்ணெய்யை தலைமுடியில் தேய்த்து வர நிச்சயமாக முடி உதிர்வில் வித்தியாசம் தெரியும். அடுத்தபடியாக கருவேப்பிலையை வைத்து ஒரு ஹேர் பேக். ஒரு மிக்ஸி ஜாரில் 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 1 ஸ்பூன் வெந்தயம், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு இந்த பொருட்களை சேர்த்து மைய விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

hair-growth

இந்த விழுதோடு புளித்த தயிர் 4 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து தலை முடியின் வேர் பகுதியில் இருந்து நுனி வரை இந்த ஹேர் பேக்கை அப்ளை செய்துவிட்டு இருபதிலிருந்து முப்பது நிமிடங்கள் விட்டுவிட்டு மைல்டான ஹெர்பல் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விட வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தலாம். தலைமுடி வலுவடையும். தலைமுடி நெருக்கமாக அடர்த்தியாக வளரும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாமல் டைப் பண்ணி பாருங்க. முப்பதே நாட்களில் நல்ல வித்தியாசத்தை உணரலாம்.

- Advertisement -