வீட்டில் பாத்ரூம் மற்றும் டாய்லெட் எப்பொழுதும் துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் செய்ய வேண்டிய 1 விஷயம் என்ன? இது தெரிஞ்சா இனி உங்க டாய்லெட் 30 நாளும் பளிச்சென இருக்குமே!

shampoo-toilet-napthelin-balls
- Advertisement -

வீட்டில் பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நோய்க் கிருமிகளின் மொத்த இருப்பிடமாக இருக்கக்கூடிய இந்த கழிவறை மற்றும் குளியலறையை தினமும் சுத்தம் செய்வது என்பது முடியாத காரியம். இப்போது வீட்டில் இருக்கும் உப்பு தண்ணீரினால் அதிக அளவு உப்பு கறையும், பாசியும் படிந்து சுத்தம் செய்வதை கடினம் ஆக்கிவிட்டது.

வாரம் ஒரு முறையாவது நீங்கள் சுத்தம் செய்யாவிட்டால் அதன் பிறகு அதிகம் சிரமப்பட வேண்டி இருக்கும். எனவே நீங்கள் தினமும் இது போல ஒரு முறை குளிக்கும் பொழுதே செய்துவிட்டு வந்தால், 30 நாளும் நல்ல ஒரு நறுமணமும், சுத்தமான பாத்ரூமும் கிடைக்கும். நாம் நம்முடைய மற்ற அறைகளை காட்டிலும், இந்த அறைகளை கண்டிப்பாக அடிக்கடி பராமரிக்க வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் இருக்க முடியும்.

- Advertisement -

அன் க்ளீன் டாய்லெட்டில் நுழைந்தாலே இன்ஃபெக்ஷன்ஸ் ஏற்படும் அபாயம் உண்டு எனவே நீங்கள் தினமும் குளிக்கும் பொழுது ஒரு ரூபாய் ஷாம்பூ ஒன்றை எடுத்து அரை பக்கெட் அளவிற்கு தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். பின்னர் இந்த தண்ணீரை ஒரு முறை நுரை வர கலக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கில் எடுத்து எல்லா இடங்களிலும் ஊற்றி ஒரு முறை பிரஸ் அல்லது துடைப்பத்தை வைத்து நன்கு தேய்த்து விடுங்கள்.

அரை பக்கெட் அளவிற்கு தண்ணீர் சேர்ப்பதால் அதிகம் நுரைக்காது. அதே போல பாத்ரூம் நல்ல வாசனையாகவும், சுத்தமாகவும் இருக்கும். குளியலறை மட்டும் அல்லாமல் கழிவறையையும் இதே போல எல்லா இடங்களிலும் ஊற்றி ஒரு முறை தேய்த்து விட்டால் போதும், எப்பொழுதும் உங்களுடைய பாத்ரூம் பளிச்சிடும். அதன் பிறகு நீங்கள் வாரம் ஒரு முறை எப்போதும் போல கழுவிக் கொள்ளலாம். இப்படி செய்யும் பொழுது ஷாம்புவுடன் கம்ஃப்போர்ட் அல்லது நீங்கள் துணிகளுக்கு பயன்படுத்தும் வாசனை திரவியங்களையும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பாத்ரூம் முழுவதும் கரப்பான் பூச்சி தொல்லை, பல்லி, தவளை போன்றவை தொந்தரவு செய்கிறதா? அப்படினா, நீங்க இதையும் ட்ரை பண்ணலாம். பீரோவில் துணிகளுக்கு இடையில் போட்டு வைக்கும் பாச்சா உருண்டை எனப்படும் நாப்தலின் பால்ஸ் சிலவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த நாப்தலின் பந்துகளை பாத்ரூம்களில் எங்காவது மூலைக்கு மூலை போட்டு வைக்கலாம். கழிவறையில் இருக்கும் தண்ணீர் நிரம்பும் டேங்கில் மேற்பூரத்தில் ஓரிடத்தில் நனையாத படி வைத்து விட்டால், ஒவ்வொரு முறை ஃபிளஷ் செய்யும் பொழுதும் நல்ல ஒரு நறுமணம் வீச துவங்கும்.

அது மட்டும் அல்லாமல் உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு பழைய மாஸ் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பகுதியில் மட்டும் வெட்டி இரண்டாக பிரித்தால் பை போல நமக்கு கிடைக்கும். இந்த பைக்குள் ஓரிரு நாப்தலின் பால்ஸ்களை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு முடிச்சு போட்டு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். இன்னொரு புறம் இருக்கும் பிடியை பாத்ரூமில் எங்காவது தொங்க விட்டுவிட்டால் செலவே இல்லாத பிரஷ்னர் ரெடி! இதை பாத்ரூம்களில் வைத்து விட்டால் போதும், நீண்ட நாட்கள் வரை பாத்ரூம் நறுமணமாக இருக்கும். மேலும் பூச்சிகளை அண்ட விடாது. கரப்பான் பூச்சி தொல்லை சுத்தமாக இருக்காது. இந்த வாசனைக்கு பல்லிகள், சிறு தவளைகள் கூட ஓடிவிடும்.

- Advertisement -