உங்கள் வாழ்க்கையில், நீங்கள் நினைத்தால் வாழும்போதே சொர்க்கத்தை பார்க்க முடியும்? தூங்கும் போது உங்கள் தலையணைக்கடியில் இந்த பொருளை வைத்து தூங்கினால்!

sleep

மனிதப் பிறவியாக பிறந்த எல்லோருக்குமே இறந்த பின்பு தான் சொர்க்கத்தை பார்க்க முடியும். ஆனால், நீங்கள் வாழும் போதே சொர்க்கத்தை பார்க்கலாமே! ‘ஆழ்ந்த உறக்கமே இறப்பிற்கு ஒத்திகை.’ வாழ்நாளில் எவர் ஒருவருக்கு தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்கின்றதோ அவர்கள் தினசரி இரவில் சொர்க்கத்தில் இருக்கின்றார்கள் என்று தான் அர்த்தம். நிம்மதியான தூக்கம் எவருக்கு இல்லையோ, நிச்சயமாக அவர்கள் பகல் பொழுதில் நரகத்தில் இருப்பதாகத் தான் அர்த்தம். ஆழ்ந்த தூக்கம் இருந்தால் தான் வாழ்வின் ஆரோக்கியமும் நல்ல சிந்தனையும் சுறுசுறுப்பும் நிறைந்திருக்கும். நல்ல தூக்கமே ஒருவருக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்க முடியும்.

night-sleep

நம்முடைய இரவு தூக்கம் கெட்டுப் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் அந்த காரணங்களை எல்லாம் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, இரவு நன்றாக தூங்க பழகிக்கொள்ளுங்கள். அப்போதுதான் பிரச்சினைகளை எதிர் கொள்ளக்கூடிய தெளிவு உங்களுக்கு கிடைக்கும்.

சரி, உங்களுக்கு இரவில் நன்றாக தூக்கம் வரவில்லையா? இதற்கு மனக்குழப்பம் தான் காரணம் என்றாலும், குடும்ப பிரச்சனை சண்டை, கடன் ரீதியான தொல்லை, தான் காரணம் என்றால் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் என்றாவது ஒரு நாள் கட்டாயம் தீர தான் போகின்றது, என்ற எண்ணத்தை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொண்டு, ‘ஓம்’ எனும் மந்திரத்தை உச்சரித்து 10 நிமிடங்கள் தியானம் செய்து  ‘இதுவும் கடந்து போகும்’ என்ற வார்த்தையை மூன்று முறை சொல்லி விட்டு உறங்கச் செல்லுங்கள். நிச்சயமாக தூக்கம் வந்துவிடும்.

meditation

சிலருக்கு கெட்ட கனவுகளின் தொந்தரவுகள் வரும். கண்ணுக்கு தெரியாத கெட்ட ஆற்றலின் மூலம் கெட்ட சக்தியின் மூலம் சிலருக்கு தூக்கம் கெடுவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? இந்த இரண்டு பொருட்களை தலைவனுக்கு அடியில் வைத்து தூங்கலாம்.

- Advertisement -

சிறியதுண்டு படிகாரம், சிறிய துண்டு வசம்பு இந்த இரண்டு பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சதுர கருப்பு நிற துணியில் இந்த பொருட்களை வைத்து, முடிச்சு போட்டு தலையணைக்கு அடியில் வைத்து படுத்து தூங்கினால் போதும். கெட்ட கனவு தொல்லை பண்ணாது. கெட்ட சக்தியின் ஆதிக்கம் உங்களை சுற்றி இருக்காது. நிம்மதியான தூக்கம் நிச்சயம் உங்களது கண்களை தழுவும் என்பதிலும் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

padikaram

வாழும்போதே நீங்கள் சொர்க்கத்தை காண வேண்டுமென்றால், அது உங்களை மறந்து நீங்கள் தூங்க கூடிய அந்த நேரத்தில்தான். கவலைகள் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் தான், மனிதன் தினம் தினம் சொர்க்கத்தை அடைகின்றான். தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதன் தினம் தினம் நரக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பது நிதர்சனமான உண்மை. நீங்கள் சொர்க்கத்தை காண வேண்டுமென்றால் இந்த பரிகாரத்தை பின்பற்றி பார்க்கலாமே!

இதையும் படிக்கலாமே
உடுப்பி ஹோட்டல் ஸ்டைல்ல ஒரு வேர்கடலை சட்னி காரசாரமா வாசனையா எப்படி செய்யறது பாக்கலாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.