முகத்துக்கு போடும் பவுடரை வைத்து வீட்டில் இத்தனை வேலைகளை செய்யலாமா? பவுடரை வைத்து பக்காவா பல டிப்ஸ் இதோ உங்களுக்காக.

powder1
- Advertisement -

நாம் இதுவரைக்கும் பவுடரைக் வைத்து முகத்தை அழகுப்படுத்த மட்டும் தான் முடியும் என நினைத்து இருந்தோம். ஆனால் இந்த ஒரு பவுடர் டப்பாவை வைத்து வீட்டில் இத்தனை சின்ன சின்ன விஷயங்களை ஈசியாக சரி செய்து விடலாம் என்றால், நீங்கள் நம்ப மாட்டீர்கள். ரூம் ஸ்ப்ரே வாங்க வேண்டாம், கவரிங் நகை பாலிஸ் போட வேண்டாம், இது மட்டும் இல்லங்க இன்னும் நிறைய இருக்கு, அப்படி இந்த பவுடரை வைத்து என்ன தான் சரி செய்து விடப் போகிறீர்கள் என்று கேட்கிறீர்களா, வாங்க இந்த பதிவுக்குள் சென்று தெரிந்து கொள்ளலாம்.

நாம் கவரிங் நகைகளை போட்டு கொண்டு வெளியில் சென்று வந்தவுடன், அதை கழட்டி அப்படியே வைத்து விடுவோம். இதனால் அதில் படிந்திருக்கும் வியர்வையின் ஈரம் நகைகளை சீக்கிரமே கறுக்க செய்து விடும். இனி இது போன்ற சமயங்களில் அதை கழற்றி வைக்கும் டப்பாவில் சிறிது பவுடரை கொட்டி வைத்து விடுங்கள். நகையின் மீதும் சிறிது பவுடரை தேய்த்து வைத்து விடுங்கள். இது நகையில் உள்ள ஈரங்களையும் இழுத்து விடும், அது மட்டும் இன்றி நகை சீக்கிரம் கறுத்தும் போகாது.

- Advertisement -

நம் வீடுகளில் பயன்படுத்தும் கண்ணாடிகளில் எப்போதும் ஒருவித எண்ணெய் பிசுக்கு இருக்கும். அதை என்ன தான் துடைத்தாலும், சரி வர போகாது. அப்படி உள்ள பிசுக்குகளை போக்க ஒரு காட்டன் துணியில் கொஞ்சம் பவுடரை கொட்டி, கண்ணாடியில் நன்றாக தேய்த்து விடுங்கள். பிறகு வேறு ஒரு காட்டன் துணி எடுத்து துடைத்தால் போதும் கண்ணாடி பளிச்சென்று ஆகிவிடும்.

அதேபோல் நாம் துணிகளுக்கு இடையே வைக்கும் ரசாயன பொருட்களுக்கு பதிலாக, இந்த பவுடரை வைக்கலாம். ஒரு காட்டன் துணியில் சற்று அதிகமாகவே இந்த பவுடரை கொட்டி, நன்றாக மடித்து துணிகளுக்கு இடையே வைத்து விடுங்கள் போதும். பிறகு எப்போது உங்கள் பீரோவை திறந்தாலும் வாசம் வீட்டையே தூக்கி விடும். துணிகளும் நல்ல நறுமணத்துடன் இருக்கும். இதே போல் வீட்டின் மற்ற இடங்களிலும் வைக்கலாம். ரூம் ஸ்ப்ரே செலவு மிச்சம்.

- Advertisement -

பெரும்பாலும் தீப்பெட்டிகள் வாங்கும் போது இருப்பதைப் போல, கடைசி வரை இருக்காது. அதிலும் மழை குளிர் காலங்களில் தீப்பெட்டி எப்படி வைத்தாலும் நமத்து போய்விடும். அதற்கு தீப்பெட்டி டப்பாவில் கொஞ்சம் பவுடரை கொட்டி விடுங்கள். மேலும் தீப்பெட்டியின் தீப்பற்றும் இரண்டு புறமும் கொஞ்சம் பவுடரை தேய்த்து வைத்து விடுங்கள். எப்போதுமே தீப்பெட்டி நமத்து போகாமல் இருக்கும்.

நம் குழந்தைகளுடன் கடற்கரைக்கு செல்வது, அங்கு விளையாடுவது சுற்றிப் பார்ப்பது, என்று அனைத்துமே நமக்கு சந்தோஷத்தை தந்தாலும், குழந்தைகள் சிறுது நேரம் கடலில் குளித்துவிட்டு வந்த பிறகு, ஈரத்தில் மணல் ஒட்டிக்கொண்டு போகாமல் இருக்கும். அப்படியே இருந்தால் சில குழந்தைகளுக்கு அரிப்பு, அலர்ஜி போன்றவைகள் கூட வந்துவிடும். இதை சரி செய்ய, இப்படி தண்ணீரில் விளையாடி விட்டு வந்தவுடன், முதலில் டவல் வைத்து ஈரம் போக துடைத்து விட்டு, பிறகு பவுடரை போட்டு துடைத்தால், உடம்பில் ஒட்டி இருக்கும் மணல்கள் ஈசியாக வந்துவிடும். இனி பீச்சுக்கு செல்லும்போது பவுடர் டப்பா எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

இப்போதெல்லாம் நாம் வெளியே செல்லும்போது எதை எடுக்க மறக்கிறோமோ, இல்லையோ போனையும், ஹெட் போனையும் எடுத்து செல்ல மறப்பதில்லை. ஆனால் இந்த ஹெட் போனை பயன்படுத்தும் போது அதில் விழுந்து விடும் சிக்கலை எடுத்து நாம் உபயோகப்படுத்துவதற்குள், போக வேண்டிய இடமே வந்துவிடும். சில நேரங்களில் இது அத்தனை எரிச்சலையும் ஏற்படும். அதற்கு சுலபமான வழி, எப்போதும் உங்கள் ஹெட் போனை மீது பவுடராய் தடவி வையுங்கள். அதனால் இந்த ஹெட் போனில் மேல் இருக்கும் பிசுபிசுப்பு வராது. சிக்கலையும் சீக்கிரமாகவே எடுத்து விடலாம்.

- Advertisement -