இந்த மந்திரத்தை உச்சரித்தால் வருமானம் பெருகும்! உங்களுடைய சொல் பேச்சை மற்றவர்கள் கேட்கவும் இந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்கலாம் தெரியுமா?

thatஒருவர் சிறப்பாக சம்பாதித்து கொண்டிருக்கும் பொழுது அவர்களுடைய மதிப்பும், மரியாதையும் அந்த வீட்டிலும், சமுதாயத்திலும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் அதுவே குறையும் பொழுது நேர் மாறாகவே நடக்கும். நாம் செய்யும் தொழிலை வைத்து, நம்முடைய நாணயத்தை வைத்து தான் மற்றவர்கள் நம்மீது மரியாதை செலுத்துகிறார்கள். நம் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள். இந்த சக்தி வாய்ந்த தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை முறையாக உச்சரித்து வந்தால் நம்முடைய வருமானம் மேலும் பெருகும். மதிப்பும், மரியாதையும் உயர்ந்து நம்முடைய சொல் பேச்சை மற்றவர்கள் கேட்கும் படியான சூழ்நிலையை உருவாக்கித் தரும். அது என்ன மந்திரம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

dhakshinamoothi

தட்சிணாமூர்த்தி மூலமந்திரம் சக்தி வாய்ந்தது ஆகும். இதனை அவருடைய சன்னிதியின் முன்பு தம்பதியராக நின்று உச்சரிக்கும் பொழுது அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து விடுவதாக ஐதீகம் உள்ளது. கணவன் மனைவி பிரிவு, சண்டை, சச்சரவுகள் போன்றவற்றை தவிர்க்க தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நலம் ஆகும்.

நன்றாக இருக்கும் குடும்பத்தில் திடீரென குழப்பங்கள் ஏற்படும் பொழுது தேவையில்லாத சண்டைகளும், அதனால் வரும் மன உளைச்சல்களும் தீர்வதற்கு தட்சிணாமூர்த்தி சந்நிதியில் வியாழன் கிழமை அல்லது பவுர்ணமி நாட்களில் சென்று சந்நிதியின் முன்பாக தம்பதியராக நின்று கீழ்வரும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். 9 முறை இந்த மந்திரத்தை உச்சரித்தால் அதற்குரிய பலன்கள் மிகவும் நன்மைகளை கொடுக்கக்கூடியவை.

guru-bagavan

தட்சிணாமூர்த்தி மூலமந்திரம்:
ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே!
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹா!

- Advertisement -

வருமானம் வருவதில் தடைகள் இருக்கும் பொழுதும் பிரச்சனைகள் இருக்கும் பொழுதும் தட்சிணாமூர்த்தியின் இந்த மூல மந்திரத்தை அவருடைய சந்நிதியில் சென்று மும்முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி 9 பவுர்ணமிகளில் செய்து வர வருமானத்தில் லாபம் அதிகரிக்கத் துவங்கும். தடைப்பட்ட ஒப்பந்தங்கள், கை விடப்பட்ட தொழில்கள், நலிந்த வியாபாரம் மீண்டும் விருத்தி பெறும் என்பது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

thatchinamoorthy

முகப்பொலிவு ஏற்படவும், மற்றவர்களுடன் விவாதங்களில் உங்களுடைய கை ஓங்கி இருக்கவும், காரிய வெற்றி ஏற்படவும் உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்கள் செவி சாய்க்கவும் இந்த மந்திரத்தை தட்சிணாமூர்த்தி சந்நிதியில் வியாழன் கிழமைகளில் உச்சரிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வருமான உயர்வு போன்ற விஷயங்களில் சாதகமான பலன்களை பெற தொடர்ந்து ஒன்பது பவுர்ணமிகளில் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் சென்று விளக்கேற்றி இவருடைய இந்த மூல மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும். இதன் மூலம் உத்தியோகத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதாக ஐதீகம் உள்ளது.

sivan

சாட்சாத் சிவபெருமானின் ஸ்வரூபமாக விளங்கும் தட்சிணாமூர்த்தியை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தொழுவது என்பது அளப்பரிய பலன்களை நமக்கு அள்ளிக் கொடுக்கும். காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டு இந்த மூல மந்திரத்தை தொடர்ந்து 21 முறை தினமும் உச்சரித்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் அத்தனை துன்பங்களும் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடைய பேச்சைக் கேட்டு நடக்கவும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து அவருக்குரிய இந்த மந்திரத்தை பாராயணம் செய்யலாம். குருபகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவது போல தட்சிணாமூர்த்திக்கு வெண்ணிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, சகல செல்வங்களையும் நமக்கு அள்ளிக் கொடுக்கும்.