பொடுகு இருந்த இடமே தெரியாமல் நிரந்தரமாக அழிந்துபோகும். இந்த ஹேர் பேக்கை ஒரே ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. திரும்பவும் பொடுகு வந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை.

hair-pack
- Advertisement -

நம்முடைய முடி உதிர்வதற்கு முதல் காரணம் நம்முடைய தலைமுடியில் இருக்கக்கூடிய பொடுகு பிரச்சனை தான். நம்முடைய மண்டை ஓட்டில் உண்டாகக்கூடிய தொற்று காரணமாகத்தான் இப்படிப்பட்ட பிரச்சினைகள் நமக்கு வருகின்றது. தலைமுடியில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை படிபடியாக குறைத்தாலே போதும். முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும். தலைமுடி அடர்த்தியாக இருப்பவர்களுக்கு பொடுகுத் தொல்லை இருந்தால், நிச்சயமாக தலைமுடி உதிரத்தான் செய்யும். பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வைப் பெற சுலபமான ஒரு ஹேர் பேக்கை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

இந்த ஹேர் பேக்கை ஒரு முறை முயற்சி செய்யும் போது, உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். தலையில் இருக்கும் பொடுகு வெளியேறியதை கண்கூடாக காணலாம். வாரத்தில் 1 நாள் அல்லது 2 நாள் இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வர நிரந்தரமாக பொடுகு தொல்லைக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும். முடி அடர்த்தியாகவும் வளர்வதற்கு தேவையான வேலையை இது செய்யும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள்‌. அதில் கொஞ்சம் புளித்த தயிர் – 1 கப் அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும். துளசி இலைகள் – 15, லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன், அலோ வேரா ஜெல் – 1/2 கப், இந்த பொருட்களை எல்லாம் போட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இயற்கையாக செடியிலிருந்து கற்றாழையை வெட்டி எடுத்து அதனுள்ளே இருக்கும் ஜெல்லை பயன்படுத்த வேண்டும். (உங்களுக்கு முடி நிறைய இருந்தாலும் அல்லது முடி கொஞ்சமாக இருந்தாலும், மேலே சொன்ன பொருட்களை அதற்கு ஏற்றது போல போட்டுக் கொள்ளுங்கள்.)

இதை அப்படியே ஒரு வடிகட்டியில் மூலம் வடிகட்டி கொண்டாலும் சரி தான். அப்படி இல்லை என்றால் வெள்ளை துணியை வைத்து வடிகட்டி கொண்டாலும் சரிதான். நமக்கு தேவையான ஹேர் பேக் கொஞ்சம் கொழகொழப்பாக கிடைத்திருக்கும். எந்த ஹேர் பேக்கை தலையில் போடுவதற்கு முன்பு, நீங்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, முடியில் இருக்கும் சிக்கை சுத்தமாக எடுத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு உங்களுடைய முடியை ஒவ்வொரு பாகங்களாக பிரித்து, மண்டையோட்டில் படும்படி இந்த ஹேர் பேக்கை முதலில் அப்ளை செய்து கொள்ளுங்கள். குறிப்பாக தலைக்குப் பின்பக்கம், கழுத்துக்கு மேலே அந்த குழியில் தான் நிறைய பொடுகு இருக்கும். அந்த இடத்தில் இந்த கலவையை நன்றாக அப்ளை செய்து விடுங்கள். அதன் பின்பு மீதம் இருக்கும் ஹேர் பேக்கை கீழே உள்ள முடியில் அப்ளை செய்து கொண்டால் முடி ஷைனிங்காக பார்ப்பதற்கு சில்கி லுக் கொடுக்கும். இந்த ஹேர் பேக்கை தலையில் போட்டுவிட்டு 30 நிமிடங்கள் வரை அப்படியே ஊற விட்டு விடவேண்டும். அதன் பின்பு மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை நன்றாக அலசி விடுங்கள். உங்களுக்கே வித்தியாசம் நிச்சயம் தெரியும்.

இந்த பேக்கில் சேர்த்து இருக்கக்கூடிய பொருட்கள் அனைத்துமே குளிர்ச்சியை தரக்கூடிய பொருட்கள் என்பதால் குளிர்காலத்தில் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தும் போது கொஞ்சம் கவனமாக பயன்படுத்த வேண்டும். உங்களுடைய உடம்பு குளிர்ச்சி தன்மை இருந்தால் இதை தலையில் பயன்படுத்தினால் ஏதாவது காய்ச்சல், சளி, இருமல் வருமா என்பதையும் செக் பண்ணிக்கோங்க.

இந்த ஹேர் பேக்கை கோடைகாலத்தில் பயன்படுத்துவதன் மூலம் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. 1/2 மணி நேரத்திற்கு மேலே 1 மணி நேரம் கூட இந்த ஹேர் பேக்கை கோடைகாலத்தில் தலையில் ஊற வைக்கலாம் தவறு இல்லை. நிச்சயமா நல்ல ரிசல்ட் கிடைக்கும். மீண்டும் மீண்டும் பொடுகு வராமல் தடுக்கக்கூடிய பேக் இது. உங்களுக்கு பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால் நீங்க ட்ரை பண்ணி பாருங்க. பக்கவிளைவுகள் இருக்காது.

- Advertisement -