பொடுகு தொல்லைக்கு நிரந்தரமாக ஒரு முடிவு கட்டும் 1 துண்டு பட்டை. நீண்ட நாள் பொடுகு பிரச்சனையை விரட்டியடிக்க இதைவிட ஈஸி டிப்ஸ் வேற இல்லைங்க.

podugu
- Advertisement -

சில பேர் anti-dandruff ஷாம்பு போட்டு தலைக்கு குளிப்பார்கள். தலையில் இருக்கும் பொடுகு தற்காலிகமாக உதிர்ந்துவிடும். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் பொடுகு வர தொடங்கும். இப்படியே இந்த பொடுகு பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட முடியாமல் ஏதாவது பொருட்களை பயன்படுத்தி வருவார்கள். ஆனால் பொடுகு போன பாடாக இருக்காது. பொடுகு பிரச்சனைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வைத் தரக்கூடிய ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய பட்டை போதும். பொடுகு தொல்லைக்கு நிரந்தரமாக ஒரு முடிவு கட்டிவிடலாம். சாதாரண பட்டை பயன்படுத்த வேண்டாம். சுருள் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். ரொம்பவும் மெல்லிசாக இருக்கும் இந்த சுருள் பட்டை. சாதாரண பட்டையை குறிப்புக்கு பயன்படுத்தினால், தலையில் லேசாக எரிச்சல் வரும்.

- Advertisement -

ஒரு மீடியம் சைஸில் இருக்கும் சுருள் பட்டை துண்டை உடைத்து தண்ணீரில் போட்டு, நன்றாக ஊறவைத்துக் கொள்ளுங்கள். 3 லிருந்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊறினால், தண்ணீரின் நிறம் மாறி இருக்கும். இந்த தண்ணீர் மட்டும்தான் நமக்கு தேவை. சுருள் பட்டை தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த பட்டை தேவைப்படாது.

ஒரு சிறிய கப்பில் நீங்கள் தலைக்கு குளிப்பதற்காக பயன்படுத்தப்படும் எந்த ஷாம்புவாக இருந்தாலும் அதில் தேவையான அளவு சாம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஷாம்புடன் இந்த பட்டை தண்ணீரை ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஷாம்புவில் கலந்த இந்த பட்டை தண்ணீரை தலைக்கு ஊற்றி நன்றாக தலையை தேய்த்து சுத்தம் செய்துவிட்டு அதன் பின்பு, நல்ல தண்ணீரை ஊற்றி எப்போதும் போல அலசி விட்டால் பொடுகுத் தொல்லை படிப்படியாக குறையத் தொடங்கும்.

- Advertisement -

குறிப்பாக பொடுகுத் தொல்லையானது மீண்டும் வராமல் இருக்கும். எப்போது வேண்டுமென்றாலும் இந்த டிப்ஸை நீங்கள் ட்ரை பண்ணிப் பார்க்கலாம். ஹேர் பேக் போட்ட பின்பும் தலைமுடியை இப்படி, இந்த பட்டை தண்ணீரை ஊற்றி அலசினாலும் தவறு கிடையாது. வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் நீங்கள் தலைக்கு குளிப்பதாக இருந்தாலும் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக பொடுகுத் தொல்லையில் வித்தியாசம் தெரியும்.

இந்த பட்டையை முன்கூட்டியே உங்களால் தண்ணீரில் ஊறவைக்க முடியவில்லை அல்லது மறந்து விட்டீர்கள் என்றால் கொஞ்சம் தண்ணீரில் இந்தப் பட்டையை சிறிய துண்டுகளாக உடைத்து போட்டு நன்றாக சூடு செய்யுங்கள். பட்டையில் இருக்கும் அனைத்து சாறும் அந்த தண்ணீரில் இறங்கி விடும். கொதித்த தண்ணீர் நன்றாக ஆறிய பின்பு அதை நீங்கள் டிப்ஸுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -