கழுத்தில் இருக்கும் கருமை நிறம் போக இந்த 1 பொருள் போதுமே. கஷ்டப்படாமல் கருப்பு நிறத்தை குறைத்து விடலாம்.

neck
- Advertisement -

கழுத்தில் கருப்பு நிறம் அதிகமாக வருவதற்கு செயின் அலர்ஜி காரணமாக இருக்கலாம். அல்லது ஒரு சில பேருக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தாலும் இந்த கழுத்தில் கருமை நிறம் அதிகமாக இருக்கும். கருமை நிறத்தை போக்குவதற்கு எத்தனையோ வழிகள் அழகு குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதில் மிக மிக சுலபமான இயற்கையான ஒரு குறிப்பை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். செலவு குறைவான இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் 3 அல்லது 4 நாட்களிலேயே உங்களுடைய கழுத்தில் இருக்கும் கருப்பு நிறம் பாதி அளவு குறைந்து இருப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

இந்த கருப்பு நிறத்தை போக்குவதற்கு முதலில் நாம் ஒரு ஸ்கிரப்பரை தயார் செய்ய வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் அரிசி மாவு, 1 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, 1/2 ஸ்பூன் சர்க்கரை, போட்டு கொஞ்சமாக ரோஸ் வாட்டர் விட்டு இந்த எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து  கருப்பு உள்ள கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்து கழுவி விட வேண்டும். இரண்டு நிமிடம் வரை வட்ட வடிவில் ஸ்க்ரப் செய்து கழுவி விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு இந்த கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பகுதியில் 1 பேக் போட வேண்டும். இதற்கு சுத்தமான கிழங்கு மஞ்சள் நமக்கு தேவை. இந்த கிழங்கு மஞ்சளை உரசுவதற்கு அரிசி வடித்த கஞ்சி தேவைப்படும். கிழங்கு மஞ்சளை அப்படியே மஞ்சள் இழைக்கும் கல்லில் உரசினாலும் மஞ்சள் வரும். இருந்தாலும் அந்த குண்டு மஞ்சளை சிறிது நேரம் வெந்நீரில் போட்டு எடுத்தால் உரசுவதற்கு சுலபமாக இருக்கும்.

கிழங்கு மஞ்சளை ஒரு சொரசொரப்பான கல்லில் உரச வேண்டும். கொஞ்சமாக அரிசி கஞ்சியை விட்டு இந்த மஞ்சளை உரசுங்கள். அரிசி கஞ்சியும் மஞ்சளும் சேர்ந்த ஒரு பேக் நமக்கு கிடைத்திருக்கும். இந்த பேக்கை கழுத்தை சுற்றி கருப்பு நிறம் இருக்கக்கூடிய இடத்தில் அப்ளை செய்து விட்டு, 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். நன்றாக காய்ந்து விடும்.

- Advertisement -

அதன்பின்பு ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து, அந்த மஞ்சளை நன்றாக துடைத்து எடுத்தால் கருமை நிறம் ஓரளவுக்கு குறைந்து இருப்பதை உங்களால் பார்க்க முடியும். தொடர்ந்து மூன்றிலிருந்து நான்கு நாட்கள் மேலே சொன்ன குறிப்பை பின்பற்றி வரும்போது கருமை நிறம் படிப்படியாக குறைய தொடங்கும். ட்ரை பண்ணி பாருங்க. இதில் அரிசி வடித்த கஞ்சியை ஸ்கிப் பண்ணாமல் சேர்த்துக்கோங்க. இது கழுத்து சருமத்தில் இருக்கும் கருமை நிறத்தை நீக்குவதற்கு மிக மிக அவசியமாக சேர்க்கப்பட வேண்டிய ஒரு பொருள்.

பின்குறிப்பு: எவ்வளவோ இயற்கையான குறிப்புகளை பின்பற்றி பார்த்தும் கழுத்தில் இருக்கும் கருமை நிறம் அடர்த்தியாகவே உள்ளது. சிறிதளவு கூட குறையவில்லை என்றால் உடனடியாக நீங்கள் ஒரு நல்ல தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. தோல் பிரச்சனையின் காரணமாக கூட இப்படிப்பட்ட சரும பிரச்சனைகள் நிறைய பேருக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -