வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு முறை இந்த பேக்கை போட்டால் போதும். கழுத்தில் இருக்கும் கருப்பு நிறம், பேக்கை துடைத்து எடுக்கும் போது கையோடு வந்துவிடும்.

neck
- Advertisement -

நிறைய பேருக்கு முகம் அழகாக இருந்தாலும் கழுத்தில் கருப்பு நிறம் அதிகமாக இருக்கும். சில பேருக்கு கழுத்தின் முன்பக்கம் கருப்பு இருக்கும். சில பேருக்கு செயின் போடக்கூடிய அந்த இடம் மட்டும் கருப்பாக இருக்கும். சில பேருக்கு பின் கழுத்துப் பகுதி மிகவும் கருப்பாக இருக்கும். எப்படி இருந்தாலும் சரி, கழுத்தில் இருக்கும் கருப்பு நிறத்தை நீக்குவதற்கு ஒரு சுலபமான தீர்வை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பேக்கை ஒருமுறை போட்டு துடைத்து எடுக்கும் போதே கழுத்தில் இருக்கும் கருப்பு நிறம் நீங்குவதை கண்கூடாக பார்க்கலாம்.

முதலில் ஒரு காட்டன் துணியில் பாலை தொட்டு கருப்பாக இருக்கக்கூடிய கழுத்துப்பகுதியை இரண்டிலிருந்து மூன்று முறை துடைத்து ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பாலில் கழுத்தில் இருக்கும் கருமை நிறம் அப்படியே ஊறட்டும்.

- Advertisement -

அதன் பின் முன்பு இரண்டாக வெட்டிய தக்காளி பழத்தில் சர்க்கரையைத் தொட்டு கழுத்து முழுவதும் ஸ்கிரப் செய்ய வேண்டும். பாலில் கருப்பு நிறம் நன்றாக ஊறி உள்ளது. இப்போது சர்க்கரையும் தக்காளி பழச்சாறு சேர்ந்து ஸ்கரப் செய்யும் போது தேவையற்ற டெட் ஸ்கின் தேவையற்ற கருப்பு நிறம் அனைத்தும் நம் தோலை விட்டு நீங்க தொடங்கும். ஜென்டிலாக ஸ்க்ரப் செய்தால் போதும்.

ஒரு நிமிடம் ஸ்கரப் செய்து அப்படியே ரெஸ்ட் விட்டுவிடுங்கள். மூன்று, நான்கு நிமிடம் கழித்து மீண்டும் ஸ்கிரப் செய்ய வேண்டும். மீண்டும் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு ஐந்து நிமிடம் கழித்து கழுத்தில் இருக்கும் சர்க்கரை தக்காளி பழச்சாறையும் சுத்தமாக துடைத்து விடலாம். ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது வெள்ளை காட்டன் துணியை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து துடைத்து எடுத்து பாருங்கள். கழுத்தில் இருக்கும் கருப்பு நிறம் நீங்கள் துடைக்கும் துணியில் நன்றாக தெரியும்.

- Advertisement -

அடுத்து ஒரு பேக் போட வேண்டும். ஒரு சிறிய பௌலில் அரிசி மாவு – 2 ஸ்பூன், ஆவாரம் பூ பொடி – 1/2 ஸ்பூன், கிளிசரின் – 4 லிருந்து 5 சொட்டு, தேவையான அளவு ரோஸ் வாட்டர், ஊற்றி இதை பேக்காக கலந்து இந்த பேக்கை கழுத்தை சுற்றி போட்டு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு, அதன் பின்பு லேசாக ஸ்கரப் செய்து துடைத்து எடுக்கும்போது இன்னும் கொஞ்சம் கருப்பு நிறம் நீங்கும்.

கழுத்தில் இருக்கும் கருப்பு நிறம் நன்றாக குறைந்து இருப்பதை உணர முடியும். வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள், மூன்று நாட்கள் இப்படி மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி வர கழுத்தில் இருக்கும் கருவளையம் ஒரு சில நாட்களில் காணாமலேயே போய்விடும். இந்த பேக்கை முகத்தில் போட வேண்டாம். சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. கழுத்து தவிர, உங்களுடைய உடம்பில் அக்குள் பகுதி, தொடைப் பகுதிகளில் கருப்பு இருந்தாலும் மேல் சொன்ன டிப்ஸை அந்த இடத்திலும் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

உங்களுடைய கழுத்துக்கு கவரிங் செயின் ஒத்துவராது என்றால் நிரந்தரமாக அந்த செயினை கழுத்தில் போட வேண்டாம். தேவைப்படும்போது வெளியில் செல்லும்போது மட்டும் கவரிங் செயினை பயன்படுத்துங்கள். மற்ற சமயத்தில் வீட்டில் இருக்கும்போது செயினை கழட்டி வைத்து விடுங்கள். அப்போதுதான் பேக் போடும் போது நல்ல ரிசல்ட் தெரியும்.

- Advertisement -