டிசம்பர் 31 கஷ்டம் தீர இப்படி குளிங்க

komiyam
- Advertisement -

நமக்கு தமிழ் வருட பிறப்பு என்றால் அது சித்திரை ஒன்று தான். இருந்தாலும் இன்று, இந்த ஆங்கில வருட பிறப்பை தான் பெரும்பாலும் விமர்சையாக கொண்டாடி வருகின்றோம். இதன் அடிப்படையில் நம்முடைய கஷ்டங்கள் தீர, இந்த வருடத்தின் கடைசி நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் நம்முடைய கஷ்டங்கள் கடந்து போகட்டும். வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு நல்ல வருடமாக பிறக்கட்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் வைத்து இந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.

- Advertisement -

டிசம்பர் 31 செய்ய வேண்டிய பரிகாரம்

பெரும்பாலும் புது வருடம் துவங்கும் போது, அதாவது டிசம்பர் 31 ஞாயிற்றுக்கிழமை இரவு, 12 மணி வரை நம்மில் பல பேர் கண் விழித்துக் கொண்டுதான் புத்தாண்டை வரவேற்போம். அதன் பிறகு நம்முடைய நண்பர்கள் சொந்த பந்தத்திற்கு புத்தாண்டு வாழ்த்து கூறிவிட்டு, உறங்கச் செல்வோம் அல்லவா.

இப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு மேல், தூங்க செல்வதற்கு முன்பு ஒரு முறை இப்படி குளித்து விடுங்கள். விடிந்தால் திங்கட்கிழமை. உங்களை பிடித்த தரித்திரம் எல்லாம் இந்த வருடத்தோடு முடிந்து போகட்டும் என்று, வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சமாக கோமியம், கொஞ்சமாக கல் உப்பு, கொஞ்சமாக மஞ்சள் பொடி, கொஞ்சம் பன்னீர், இந்த பொருட்களை எல்லாம் போட்டு இந்த தண்ணீரில் தலைக்கு குளித்துவிட்டு அதன் பிறகு தூங்கச் செல்லுங்கள்.

- Advertisement -

இந்த குளிக்கின்ற தண்ணீரில் கலக்க தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளவும். குலதெய்வத்தை வேண்டி இந்த நீரை தலையில் ஊற்றும் போது, வாழ்க்கையில் என்னை பின்தொடரும் கஷ்டங்கள் எல்லாம், இந்த வருடத்தோடு கடந்து போகட்டும், என்று சொல்லி தலைக்கு குளித்துவிட்டு பிறகு நீங்கள் வழக்கம் போல தூங்கச் செல்லலாம்.

ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. இந்த முறையில், இந்த வருட இறுதியில் குளிக்கும்போது நம்மை பிடித்த பீடை தரித்திரம் எல்லாம் இந்த குளியலோடு போய்விடும் என்ற ஒரு நம்பிக்கை உங்கள் மனதில் எழ வேண்டும். அடுத்து பிறக்கக்கூடிய புத்தாண்டில் நாமும் புதியதாக பிறந்தவர்கள் போல சந்தோஷமாக இந்த நாளை கொண்டாடுவோம்.

- Advertisement -

ஒருவேளை உங்களால் டிசம்பர் 31ஆம் தேதி நடு இரவில் இந்த குளியலை மேற்கொள்ள முடியவில்லை என்பவர்கள், புது வருடம் பிறந்ததும், அதாவது ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை வேலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த குளியலை மேற்கொள்ளலாம் தவறு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பண வரவிற்கு புத்தாண்டு அன்று பார்க்க வேண்டியது

இந்த வருடத்தில் உங்களுக்கு இருந்த கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் கடந்து போகட்டும். புது வருடத்தில் புது நண்பர்கள், புது உறவுகள், புது வரவுகள், என்று புது சந்தோஷம் கிடைக்க இறைவனை வேண்டி இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -