உங்கள் வீட்டில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் ? அதற்கான காரணம் தெரியுமா ?

vilakku
- Advertisement -

“பஞ்ச பூதங்களையும் இறைவனின் அம்சமாக பாவித்து வணங்குவது நம் “ஹிந்து” மதத்தின் தனித்துவமான அம்சமாகும். அந்த பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கோவிலைக் கட்டி அவற்றை இறைவனாக வணங்கும் முறை சைவத் தமிழர்களுக்கே உரிய தனிச் சிறப்பாகும். அப்படியான பல சிறப்புக்கள் வாய்ந்த நம் மதத்தின் ஆலய வழிபாடு முறைகளில் ஒன்று தான் “தீபமேற்றுவது”. அதோடு நம்மில் பலர் வீட்டிலும் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.

Amman deepam

பஞ்ச பூதங்களில் சக்தி வாய்ந்த ஒரு பூதம் “நெருப்பு”. மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவைக் கூட மாசடைகிறது. ஆனால் நெருப்பினை எதனாலும் மாசுபடுத்த முடியாது, மாறாக அந்த மாசுகளையே தனக்கான ஆகுதியாகக் கொள்ளும் தன்மைக் கொண்டது நெருப்பு. அந்த வகையில் நாம் நம் வீட்டிலும், கோவிலிலும் ஏற்றும் விளக்கில் எரியும் நெருப்பானது நமது மனமாசுக்களையும், நம்மைச் சுற்றியிருக்கும் தீய சக்திகளையும் அழித்து, நம்மை இறைவனை நோக்கிச் செலுத்தவல்லது. தீப வழிபாட்டின் ஆற்றலானது மிகவும் வலிமை வாய்ந்தது.

- Advertisement -

தீப வழிபாட்டில் மண் விளக்கு அல்லது அகல் விளக்கு என்பது நவகிரகங்களிலில் “உறுதித்தன்மைக்கு” காரகனாகிய “சூரியனையும்”, மனித உடலையும் குறிக்கிறது. எந்த ஒரு விஷயத்திற்கும் அடித்தளம் நன்றாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும் என்று இது உணர்த்துகிறது.

அத்தீபத்தில் ஊற்றப்படும் எண்ணெய் அல்லது நெய் நவக்கிரகங்களில் “மனோகாரகனாகிய” சந்திரனையும், மனிதனின் ரத்தம் மற்றும் அவனது மனதைக் குறிக்கிறது. எவ்வொறு காரியத்தில் ஈடுபடும் போதும் ஒரு மனிதனின் மனநிலை சீராக இருக்க வேண்டும் என்று இது உணர்த்துகிறது.

- Advertisement -

Deepam

அத்தீபத்திற்கான திரி நவகிரகங்களிலில் “அறிவுக்காரகனாகிய” புதனையும், மனிதனின் அறிவுத்திறனையும் குறிக்கிறது. எக்காரியத்திலும் அதன் நன்மைத், தீமைகளறிந்து அதன் விளைவுகளை பற்றி சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று இது குறிக்கிறது.

அந்நெருப்பின் வெம்மை நவகிரகங்களில் “போர்குணத்திற்கு” அதிபதியாகிய “செவ்வாய்யையும்”, தீமையானவற்றை எப்போதும் எதிர்த்து மனிதன் செயலாற்ற வேண்டும் என்ற தத்துவத்தையும் உரைக்கிறது.

- Advertisement -

deepam

அந்த தீப ஜோதியின் மஞ்சளான நிறம் நவகிரகங்களில் “குருபகவானையும்”, உலகின் எப்படிப்பட்ட சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டாலும், தன் நிலை மாறாமல் பிறருக்கு எப்போதும் ஒளியாகவும், அவர்கள் வாழ்வின் இருளைப்போக்கும் தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

அத்தீபம் எரியும்போது கிழே ஏற்படும் கருமையான நிழல், என்னதான் நாம் பிறருக்கு ஒளியாக இருந்தாலும், நமக்கும் விதியின் படி சில பாதிப்புகள் ஏற்படலாம் என்பதையும், இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை என்ற தத்துவத்தை கூறுகிறது. இந்நிழல் நவகிரகங்களில் ராகுவைக் குறிக்கிறது.

deepam

அத்திரி எரிய, எரிய அதன் அளவு குறைந்து கொண்டே வருவது ‘ஆன்மிகம் என்ற ஜோதியில் நாம் கலந்து விட்டால், நம் ஆசைகள் பற்றுகள் எல்லாம் குறைந்துகொண்டே வரும் என்று கூறுகிறது. இது நவகிரகங்களில் “இன்ப விருப்பங்களுக்கு” அதிபதியான “சுக்கிர பகவானைக்” குறிக்கிறது.

அவ்விளக்கினால் ஏற்படும் பிரகாசமான வெளிச்சம் வாழ்க்கையின் அனுபவங்களால் நாம் பக்குவமடைந்து, நமக்கு ஏற்படும் ஞானத்தால் பிறரின் வாழ்வில் வெளிச்சம் தர முடியும் என்று வலியுறுத்துகிறது. நவகிரகங்களில் இது “ஞானகாரகனான” “கேது” பகவானைக் குறிக்கிறது.

deepam

தீபம் நன்கு எரிந்து அணைந்த பின்பு இறுதியாக மிஞ்சி இருக்கும் கருகிப் போன திரி “உலகில் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுண்டு என்ற இயற்கையின் சமநீதி தத்துவத்தை” கூறுகிறது. நவகிரகங்களில் இது “ஆயுள் காரகனாகிய” சனிபகவானை குறிக்கிறது. மேலும் ஒவ்வொரு முறை நாம் தீபம் ஏற்றி வழிபடுவதால் மேற்கண்ட நவகிரகங்களின் பாதிப்புகள் குறைந்து, அந்நவகிரகங்களின் அனுக்கிரகமும் நமக்கு கிட்டும்.

இதையும் படிக்கலாமே:
எந்த ராசிக்கு சுக்கிரனால் என்ன பலன் தெரியுமா ?

English Overview:
Here we described about the benefits of deepam. In Tamil it is called as Deepam etrum palangal or Vilakku etrum palangal. There is big relationship between lightning the lamp and getting God grace.

- Advertisement -