உங்கள் வீட்டில் தீபம் ஏற்றும் போது இம்மந்திரம் கூறினால் செல்வம் பெருகும்

om

பஞ்சபூதங்களில் நெருப்பு நமக்கு வெப்பத்தை தருவதாகவும், நாம் சாப்பிட உணவை சமைப்பதற்கும், இருளில் நமக்கு ஒளியாகவும் என பல வகையில் நமக்கு நன்மைகள் புரிகிறது. எனவே தான் அந்த நெருப்பை விளக்கு கொண்டு வீட்டில் எப்போதும் ஒளிர செய்தனர் நமது முன்னோர்கள். விளக்கு ஏற்றுவது வீட்டிற்கு தெய்வ கடாட்சத்தை கொண்டு வரும் என்பது ஐதிகம். அத்தகைய விளக்குகள் அல்லது தீபம் ஏற்றும் வேளையில் நாம் கூற வேண்டிய எளிய மந்திரம் இதோ.

kamatchi vilakku

தீபம் ஏற்றுவதற்கான மந்திரம்

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே

mavilaku

வீட்டிற்கு மங்களங்களை தரும் திருவிளக்கு தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய மந்திரம் இது. காலை மற்றும் மாலை வேளையில் காமாட்சி விளக்கில் தீபம் ஏற்றும் போது இம்மந்திரத்தை மூன்று முறை அல்லது ஒன்பது முறை துதித்து, தீபம் ஏற்றி வருவதால் வீட்டில் இருக்கின்ற எதிர்மறையான சக்திகள் முற்றிலும் நீங்கும். சுபிட்சங்கள் பெருகும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல் நலம் சிறந்து, மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். செல்வ வளம் பெருக தொடங்கும்.

kamatchi vilakku

- Advertisement -

நமது பாரம்பரிய மதத்தில் எந்த ஒரு நற்காரியம் தொடங்கும் முன்பு தீபம் ஏற்றுவது பன்னெடுங் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். ஒளியுள்ள இடத்த்தை எத்தகைய தீய சக்திகளும் அண்டுவதில்லை. மேலும் அந்த ஒளி மனிதர்கள் அனைவருக்கும் இறைவனைப் பற்றிய ஞானத்தை தருவதாக உள்ளது. அத்தகைய தீபம் ஏற்றும் வேளையில் இம்மந்திரத்தை துதிப்பது மிகவும் சிறந்தது.

இதையும் படிக்கலாமே:
கிரக தோஷம் நீங்கி அதிக செல்வம் சேர

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Deepam etrum manthiram in Tamil. It is also called as Vilakku manthiram in Tamil or Deepam mantra in Tamil or Vilakku etra slokam in Tamil or Thiruvilakku slokam in Tamil.