உங்கள் கிரக தோஷம் நீங்க, அதிக செல்வம் சேர இம்மந்திரம் துதியுங்கள்

guru
- Advertisement -

இறை நம்பிக்கை உள்ளவர்கள்,கடவுள் மறுப்பாளர்கள் என்கிற இரு பிரிவினர் உட்பட உலகில் அனைத்து மக்களும் நவ கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்டு தான் இருக்கின்றனர் என்பதே உண்மை. ஒருவர் பிறக்கின்ற போதே அவரது ஜாதகத்தில் மற்ற எந்த கிரகங்கள் பாதகமாக இருந்தாலும், முழுமையான சுப கிரகம் எனப்படும் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும். அப்படியான குரு பகவானை வழிபட்டு பல நன்மைகளை பெறுவதற்கான “குரு பகவான் ஸ்தோத்திரம்” இதோ.

guru

குரு பகவான் ஸ்தோத்திரம்

தேவர்களும் முனிவர்களும் சேவிக்கும் சுரகுருவை
மேவுசுடர்ப் பொன் போன்று மிகவும் ஒளிர்பவனை

- Advertisement -

மூவுலகும் வணங்குகின்ற மூர்த்தியினை, ஈஸ்வரனை
யாவுமிக அறிந்தவனை யான் வணங்கிப் போற்றுகிறேன்

குருபகவானுக்குரிய இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது. வியாழக்கிழமைகளில் காலை எழுந்து குளித்து, முடித்துவிட்டு குருபகவானுக்கு மஞ்சள் நிறப்பூக்கள் சமர்ப்பித்து, தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை உரு ஜெபித்தல் வேண்டும். அதே வியாழக்கிழமையில் குரு பகவானுக்குரிய குரு ஹோரை நேரத்திலும் உங்களால் முடிந்த அளவிற்கு இந்த ஸ்தோத்திரம் பாராயணம் செய்யலாம். இந்த ஸ்தோத்திரம் உங்களது ஜாதகத்தில் குரு கிரக தோஷங்களை போக்குகிறது. திருமணம் தாமதமாகும் ஆண், பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேரு உண்டாகும். துரதிஷ்டங்கள் நீங்கி நன்மையான பலன்கள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படுவது நின்று செல்வ சேர்க்கை உண்டாகும்.

- Advertisement -

guru bagwan

தேவர்கள், முனிவர்கள், எல்லோராலும் வணங்கப் பெறுபவனும், ஒளிவீசும் பொன்னைப் போல் காந்தி உடையவனும், மூன்று உலகங்களும் போற்றிப் பணியும் வடிவுடையவனும், எல்லாம் அறிந்தவனும் ஈசன் எனப் புகழப்படுபவனும் தேவர்களின் குருவும் ஆன வியாழ பகவானை நான் வணங்குகிறேன் என்பதே இந்த குரு பகவான் ஸ்தோத்திரத்தின் பொருளாகும். பொன்னன் எனப் பெயர் கொண்டவரும், முழுமையான சுப கிரகமாக விளங்கும் குரு பகவானின் இந்த ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதால் வாழ்வில் சுபிட்சங்கள் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
விரும்பியதை அடைய மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Guru bhagavan stotram in Tamil. It is also called as Guru bhagavan mantra in Tamil or Guru bhagavan slokam in Tamil or Guru bhagavan thuthi in Tamil or Viyala bhagavan manthiram in Tamil.

- Advertisement -