பூஜை அறையில் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளும், அதற்கான தீர்வும். இந்த தவறுகளை திருத்திக் கொண்டாலே போதும் நம்முடைய வீடு சுபிட்சம் அடையும்.

sivan-deepam
- Advertisement -

நம்முடைய வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றும்போது தெரிந்தே யாரும் தவறுகளை செய்வது கிடையாது. தெரியாமல், அறியாமல் செய்யக்கூடிய தவறுகளுக்கான திருத்தங்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்புகள் உங்கள் மனதிற்கு நிறைவு தருவதாக இருந்தால் மட்டும், உங்களுடைய வீட்டில், பின் சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றலாம். இதோடு சேர்த்து உங்களுடைய தினசரி நாள் அதிர்ஷ்டமானதாக மாறுவதற்கு காலையில் எழும்போது என்ன மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்? இரவு தூங்கும் போது எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் இறுதியில் தெரிந்து கொள்ளுங்கள்.

pooja-room

முதலில் நம்முடைய எல்லோரது வீட்டிலும் பூஜை பாத்திரங்களை துலக்கி விட்டு, அதை நன்றாக துடைத்து விட்டு, முதலில் மஞ்சள் குங்கும பொட்டு தான் வைப்போம் அல்லவா? அப்படி தீபத்தில் எண்ணெயோ நெய்யோ விடாமல், விளக்கிற்கு பொட்டு வைப்பதை விட, பூஜை அறையில் அந்த தீபத்தை அழகாக அமர்த்தி விட்டு, அதில் நிறைவாக எண்ணெய் விட்டு, அதன்பின்பு மஞ்சள் குங்கும பொட்டு வைப்பது நம்முடைய வீட்டிற்கு நிறைவான செல்வ வளத்தை தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி பொட்டு வைக்கும் போது விளக்கின் கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கமாக பொட்டை வைத்துக் கொண்டு சென்றால், வாழ்வில் ஏறு முகமான பாதை அமையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எப்போதுமே விளக்குக்கு பக்கத்தில் பூ இல்லாமல் இருக்கக்கூடாது. விளக்குக்கு பக்கத்தில், பூ வைத்து தீபம் ஏற்றுவது, நம்முடைய வீட்டிற்கு மிகவும் நல்லது.

- Advertisement -

இதைப்போல் தான் தினமும், ஏற்றிய விளக்கு திரியிலேயே, தீபம் ஏற்றலாமா? கூடாதா? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உள்ளது. நம்மில் பல பேர் வீட்டில் நம்முடைய முன்னோர்கள், நம்முடைய பாட்டிமார்கள், முந்தைய நாள் ஏற்றிய திரியில், நன்றாக திரித்து விட்டு அதில் இருக்கும் பழைய கருப்பு வண்ணங்களை எடுத்து விட்டு, அதிலேயே தீபம் ஏற்றுவார்கள். அந்த திரியானது சரியாக எரியவில்லை எனும் பட்சத்தில், மூன்று நாட்களுக்கு ஒருமுறை அந்த திரையை மாற்றிக் கொள்ளலாம்.

pooja-items

இல்லை, உங்களுக்கு தினம்தோறும் திரையை மாற்றும் பழக்கம் இருந்தாலும் அந்தத் திரியை தினம்தோறும் மாற்றுவதிலும் தவறொன்றும் கிடையாது. மாற்றிய இந்த பழைய திரிகளை என்ன செய்வது? சில பேர் வீடுகளில் தோட்டப் பகுதி இருக்கும். அந்த இடத்தில் கால் படாத இடங்களில் போட்டுவிடுவார்கள். சில பேருக்கு குப்பையில் தான் போட வேண்டிய சூழ்நிலை இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் அந்த திரிகளை ஒரு பேப்பரில் வைத்து, மடித்து குப்பையில் போட்டாலும் தவறு கிடையாது. அப்படி இல்லை என்றால் அந்த திரிகலை, ஒரு சிறிய கிண்ணத்தில் சேகரித்து வைத்துக் கொண்டு, உங்களுடைய வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் போது கூட இந்த திரியை துபத்தோடு சேர்த்து போடலாம், என்றும் சொல்லப்பட்டுள்ளது. தவறொன்றும் கிடையாது.

- Advertisement -

அடுத்தபடியாக சில பேர் வீடுகளில் தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டே இருக்கும். அதாவது காலையில் ஏற்றிய தீபமானது இரவு நேரம் வரை சில வீடுகளில் எரியும். சில பேர் வீடுகளில் 24 மணி நேரமும் தீபம் எரியும். இப்படி நீண்ட நேரம் தீபம் ஏற்றுவது தவறு இல்லை. இப்படி நீண்ட நேரம் தீபம் எரிந்து கொண்டிருந்தால், அந்த விளக்கிற்கு நிவேதனமாக பானகம் வைப்பது நன்மை தரும். பானகம் என்றால் ஒரு டம்ளர் அளவு சுத்தமான தண்ணீரில் வெல்லத்தை கரைத்து, கொஞ்சம் சுக்குத் தூள் போட்டு, அதில் எலுமிச்சை பழச்சாறு விட்டு, 2 ஏலக்காய் போட்டு இறைவனுக்கு நிவேதனமாக படைப்பார்கள் அல்லவா? இது மேலும் சிறப்பைத்தரும்.

paanagam

நம்மில் நிறைய பேர் கோவிலுக்கு சென்றால் தட்சிணாமூர்த்திக்கும் துர்க்கை அம்மனுக்கு தீபம் போடுவது வழக்கமாக வைத்திருப்போம். தட்சிணாமூர்த்தி கோவில்களில், தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். நீங்கள் தட்சிணாமூர்த்திக்கு தீபமேற்றுவதாக இருந்தால், தீப ஒளிச்சுடர் தட்சிணாமூர்த்தியை பார்த்தவாறு இருக்க வேண்டும். அதாவது தீபம் வடக்கு நோக்கி ஏற்றப்பட வேண்டும்.

- Advertisement -

guru-bhagavan

துர்கை அம்மன், வடக்கு நோக்கி அமர்ந்து இருப்பார்கள். ஆகவே, நீங்கள் ஏற்றக்கூடிய தீபச்சுடர் ஒளியானது நம்மைப் பார்த்து இருக்க வேண்டும். அதாவது தீபச்சுடர் உங்களை பார்க்க வேண்டும். கோவில்களில் நீங்கள் இனி தீபமேற்றினால் இந்த முறையை பின்பற்றி கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

durgai amman

சரி, இரவு நாம் தூங்கச் செல்வதற்கு முன்பாக ஒருநிமிடம் அன்றைய தினம், சிறப்பான தினமாக சென்றதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். ‘இன்றைய நாளை சிறப்பாக்கி தந்த எம்பெருமானே, நாளை விடியப் போகும் நாளும் எனக்கு நன்றாகவே அமைய வேண்டும்.’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, ‘ஓம் ஈஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு தூங்கச் செல்லுங்கள்.

sivan

காலை பொழுது விடிந்ததும், இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், என்ற வேண்டுதலை வைத்து ‘ஓம் கேசவாய நமஹ’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். தினந்தோறும் இந்த மந்திரத்தை உச்சரித்து, உங்களது நாளைத் தொடங்கிப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கான நாள், நன்றாகவே தொடங்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இதையும் படிக்கலாமே
இந்த 1 மந்திரத்தை இப்படி உச்சரித்தால் ஏழேலு ஜென்மத்தில் செய்த பாவங்கள் எல்லாம் நொடியில் தீருமாம் தெரியுமா? உங்கள் வாழ்விலும் அதிசயங்கள் நடக்க இந்த மந்திரத்தை தினமும் சொல்லுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -