தீபாவளி லேகியம் செய்முறை, பயன்கள்

divwali

தீபாவளி என்றாலே பட்டாசு பலகாரத்தோடு சேர்ந்து மிகழ்ச்சியும் பொங்கும். பொதுவாக இந்த நாளில் பலரும் தங்களுது இல்லத்தில் பலவகையான பலகாரங்களை செய்து உண்ணுவது வழக்கம். ஆனால் தீபாவளி முடிந்த அடுத்த நாள் நாம் உண்ட எண்ணெய் பலகாரங்களால் சில உடல் உபாதைகளும் ஏற்படுவதுண்டு. இந்த உபாதைகளில் இருந்து விடுபட உதவுவதே தீபாவளி லேகியம்.

legiyam

சிலரால் வேலை பளு காரணமாக லேகியத்தை செய்யமுடியாமல் போகலாம். கவலையை விடுங்கள் அதற்கு பதிலாக “ஓமம், சுக்கு, வெல்லம்” ஆகிய மூன்றையும் நன்கு பொடியாக்கி அதில் வெள்ளம் கலந்து உருண்டை செய்து சாப்பிடலாம். மாலை நாம் அருந்தும் காபிக்கு பதிலாக சுக்கு, மிளகு, தனியா, ஏலக்காய் சேர்த்து சுக்கு காபியை அருந்துவது சிறந்தது. இது போன்ற சிறிய செயல்களால் நமக்கு தீபாவளி லேகியத்தை சாப்பிட்டதற்கான பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
சகல செல்வங்களையும் பெற உதவும் சுலோகம்

இப்போதெல்லாம் தீபாவளி லேகியம் பல கடைகளிலே கூட விற்கப்படுகிறது. கடையில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலே தான் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மிளகு,சீரகம்,தனியா,ஓமம்,கண்டதிப்பிலி,சுக்கு,ஏலக்காய், வெல்லம், நெய் ஆகியவை கொண்டு இந்த லேகியத்தை செய்யலாம்.