உங்களிடம் வீட்டில் பணம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டுமா? தீபாவளி தினத்தன்று இவற்றை செய்யுங்கள் போதும்.

diwali
- Advertisement -

பணம் தான் எல்லாம் என்று மனிதர்கள் அனைவரும் நினைக்கின்ற ஒரு உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அத்தகைய உலகில் மிகப்பெரும் கோடீஸ்வரன் எனும் அளவிற்கு நாம் செல்வம் சேர்க்கவில்லை என்றாலும், நம் அன்றாட வாழ்வை கடன் இல்லாமல் வாழ்வதற்கு பணத்தை சேர்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அப்படி பணத் தேவைகளுக்காக கஷ்டப்படுகின்ற மனிதர்களின் மீது கருணை காட்டும் தெய்வமாக திருமாலின் இதயத்தில் வாசம் செய்கின்ற “லட்சுமி தேவி” இருக்கிறாள். அந்த லட்சுமி தேவியின் முழுமையான அருளைப் பெறுவதற்குரிய ஒரு சிறந்த பண்டிகை தினமாக தீபாவளித் திருநாள் திகழ்கிறது. இந்த தீபாவளித் திருநாளில் நாம் என்ன செய்தால் பணம் எனப்படும் லட்சுமி நமது இல்லங்களிலேயே வாசம் செய்வாள் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

valampuri sangu

தீபாவளி தினத்தன்று லட்சுமி பூஜை செய்கின்ற சமயத்தில் தூய்மையான வெண்ணிற சங்கு கொண்டு சங்க நாதம் எழுப்பியும் மற்றும் சிவபெருமானின் இசைக் கருவியான உடுக்கையும் அடித்தும் லட்சுமி மற்றும் பெருமாளுக்குரிய மந்திரங்களை துதித்து பூஜை செய்வதால் அந்த வருடம் முழுவதும் நமக்கு செல்வச் செழிப்பை மிக்கதாக அமையும். சங்கு மற்றும் உடுக்கை கொண்டு பூஜை செய்வது நம் தென்னிந்திய மரபில் அதிகம் இல்லை. மேலும் தென்னிந்தியாவில் சங்கு ஒலி எழுப்புவதும் உடுக்கை அடிப்பதும் இறப்புத் மற்றும் மாந்திரீகம் தொடர்பான சடங்குகளில் பயன்படுத்தபடும் ஒரு ஒரு விடயமாகக் பார்க்கப்படுகிறன்து. ஆனால் வட இந்திய பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக தீபாவளி தினத்தில் பலரும் இத்தகைய சிறப்பு வாய்ந்த பூஜையை செய்து லட்சுமி தேவியை வழிபட்டு, செல்வ செழிப்பான வாழ்க்கையை பெற்று மகிழ்கின்றனர்.

- Advertisement -

செல்வ தேவதையான லட்சுமி தேவி “தாமரை மலர்” மீது வாசம் செய்வதாக ஐதீகம். அப்படிப்பட்ட லட்சுமி தேவிக்கு நைவேத்தியமாக வைக்க கூடிய பொருட்களில் மிக சிறப்பானதாக தாமரை மலர் கருதப்படுகின்றது. எனவே தீபாவளி தினத்தன்று லட்சுமி பூஜை செய்யும் பொழுது புத்தம் புதிய செந்தாமரை மலர் ஒன்றினை லட்சுமி தேவிக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்வதால் லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் அந்த குடும்பத்திற்கு முழுதாக கிடைக்கின்றது. தாமரை மலர் கிடைக்காத நபர்கள் தாமரைமணிகளால் செய்யப்பட்ட மாலையை கொண்டு லட்சுமி தேவியின் மந்திரங்களை 108 முறை ஜெபம் செய்து வழிபடுவதால், லட்சுமி தேவி எப்படி திருமாலின் இதயத்தில் வீற்றிருந்து உலக மக்களின் கஷ்டங்களை போக்குகிறாளோ, அதே போன்று நமது வறுமை நிலையையும் போக்கி சுக, போகங்கள் உயர்வான வாழ்வை நமக்கு அருள்வாள்.

owl-lakshmi

காரிருள் சூழ்ந்து இருக்கும் இரவு நேரங்களிலும் பார்க்கும் திறன் கொண்ட ஒரே பறவை இனமாக ஆந்தை பறவை திகழ்கிறது. பொதுவாக நம் நாட்டின் சில பகுதிகளில் ஆந்தை துரதிர்ஷ்டம் கொண்ட பறவையாக பார்க்கப்படுகின்றது. ஆனால் அதே ஆந்தை பறவையை வட இந்திய மக்கள் லட்சுமி தேவியின் அன்பிற்குரிய வாகன பறவையாக கருதுகிறார்கள். ஆந்தையின் பார்வை தங்கள் மீது படுகின்ற போது தங்களுக்கு செய்யப்பட்டிருக்கின்ற செய்வினை, ஏவல் போன்றவை நீங்குவதோடு, லட்சுமி தேவியின் அருளை தங்களுக்கு பெற்றுத்தரச் செய்வதாக நம்புகிறார்கள். எனவே தான் தீபாவளி தினத்தில் இயற்கையாக உதிர்ந்த ஆந்தை மற்றும் மயில் பறவைகளின் இறகுகளை ஒன்றாக சேர்த்து, ஒரு சிவப்பு நிற நூல் கொண்டு சேர்த்துக் கட்டி, தங்கள் வீடுகளின் பிரதான வாயிலுக்கு மீதாக கட்டி தொங்க விடுகின்றனர். இந்த பரிகாரத்தை செய்வதால் தங்களுக்கு சிறந்த ஞானத்தையும், நோய்கள் அணுகாத ஆரோக்கிய நிலையும், மிகுதியான செல்வமும், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும் என அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.

பொதுவாக தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின் போது தான் நாம் கரும்பு வாங்கி வந்து, அதை இறைவனுக்கு படைத்தது, பிறகு அக்கரும்பினை நாம் சுவைப்போம். ஆனால் வட இந்தியாவில் தீபாவளி தினத்தில் வேருடன் கூடிய புத்தம் புதிய இனிப்பான கரும்பினை காலையில் வாங்கி கொண்டு வந்து லட்சுமி பூஜை செய்யும் பொழுது சேர்த்து வழிபடுவார்கள். அஷ்ட லட்சுமிகளில் நாம் உண்ணும் உணவிற்கு அதிபதியாக விளக்குகின்ற தானிய லட்சுமி எனும் தேவிய தனது இரண்டு கைகளில் ஒன்றில் உணவு தானியங்கள் மற்றொரு கையில் கரும்பினை கொண்டிருப்பதாக புராணங்களில் சித்தரிக்கப்படுகின்றது. எனவே தான் தீபாவளி தினத்தில் வேருடன் கூடிய கரும்பு கொண்டு லட்சுமி வழிபாடு செய்பவர்களின் வீட்டில் பஞ்சம், வறுமை போன்றவை ஒழிந்து என்றென்றும் செல்வங்களும் தானியங்களும் நிரம்பி வழியும் என்பது இந்த வழிபாடு செய்யும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

- Advertisement -