நாளை 4/11/2021 தீபாவளி அன்று தங்கம் வாங்குவது நல்லதா? கெட்டதா? தங்கம் வாங்க சிறந்த நேரம் எது?

gold-silver-diwali
- Advertisement -

தீபாவளி அன்று தங்கம் வாங்குவது நல்லதா? இல்லையா? என்கிற கேள்வி பலருடைய மனதிலும் எழுந்திருக்கிறது. இந்த நாளில் சுப லக்னங்களில், நல்ல நட்சத்திரங்களில், நல்ல நேரத்தில் தங்க நகைகள் வாங்க அதிர்ஷ்டம் பெருகும் என்கிறது ஜோதிடம். மேலும் தீபாவளி நாளில் தங்கம் வாங்குவது தீய சக்திகளை அழிக்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே தீபாவளி நாளில் தங்கம் வாங்குவது நல்லதா? கெட்டதா? எந்த நேரத்தில் வாங்க வேண்டும்? தங்கம் வாங்குவதற்கான சிறந்த நேரம் எது? என்பது போன்ற வினாக்களுக்கான விடையை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

gold3

தீபாவளி அன்று புதிதாக தங்கம் வாங்குவது பாரம்பரிய பழக்க வழக்கமாக இருந்து வருகிறது. நல்ல நாள், விசேஷங்களில் தங்கம் வாங்குவது மென்மேலும் தங்கத்தை பெருக்க செய்யும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. தங்கத்தின் மீதான ஈர்ப்பை அதிகமாக்கும் இந்த பண்டிகை கால பாரம்பரிய தங்க நகை வாங்கும் கலாச்சாரம் இன்று பெருமளவில் பெருகி வருகிறது வரவேற்கத்தக்க ஒன்று தான். தீயவைகளை விலக்கி ஒளியைக் கொடுக்கும் இந்த தீபாவளி நாளில் தங்கம் வாங்குவது நல்லது தான்.

- Advertisement -

பொதுவாக குளிகை நேரத்தில் தங்கம் வாங்குவது சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பது நம்பிக்கை. குளிகை நேரத்தில் நீங்கள் எதை வாங்கினாலும் அது பன்மடங்காகப் பெருகும் என்பது தான் சாஸ்திர நியதி. எனவே இந்த தீபாவளி நாளில் குளிகை நேரமாக இருக்கும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலான காலகட்டத்தில் தங்கம் வாங்க மென்மேலும் பெருகுவதாக ஐதீகம் உண்டு. தீபாவளி நாளில் தங்கத்தை முதலீடு செய்தால் எதிர்கால சேமிப்பு திட்டமாக இருக்கும் என்பதால் தாராளமாக உங்களால் முடிந்த தங்க நகைகளை வாங்கலாம்.

silver

தங்கம் மட்டுமல்லாது வெள்ளி நகைகளுக்கு கூட தீபாவளி நன்னாள் சிறந்த நாளாக கருதப்படுகிறது. எனவே தங்கம் வாங்க முடியாதவர்கள் கவலைப்பட தேவையில்லை, புது கொலுசு மாற்றுவது, புதிதாக குழந்தை பிறந்தவர்களுக்கு வெள்ளியிலான பொருட்களை வாங்குவது, மனதிற்கு பிடித்தவர்களுக்கு வெள்ளி மோதிரம் வாங்கி பரிசளிப்பது, ராசிக்குரிய வெள்ளி சின்னத்தை வாங்கி அணிவது, சுக்கிர பகவானுக்கு அதிபதியாக விளங்கும் இந்த வெள்ளியை வியாழன் கிழமை அன்று வாங்குவது மிகவும் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகிறது. எனவே தங்கம் வாங்கவில்லை என்றாலும் வெள்ளி நகை வாங்குவது சிறப்பு!

- Advertisement -

சுப லக்னங்களில் வியாழன் கிழமை அன்று சுவாதி, புனர்பூசம், திருவோணம், சதயம், அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை அனுஷம், ஹஸ்தம், ரேவதி, அஸ்வினி, பூசம், அபிஜித் ஆகிய நட்சத்திரங்களில் தங்க நகை வாங்குவது தங்கத்தை அடகு போகாமல் செய்து பாதுகாக்கும். அடிக்கடி தங்க நகை அடகு போகிறது என்பவர்கள் ரேவதி நட்சத்திரம் கூடிய, துலாம் லக்னத்தில் நாளை தீபாவளி அன்று தங்கம் வாங்கி பாருங்கள், வாங்கிய தங்கம் அடகு போகாமல் எப்போதும் உங்களிடம் நிலைத்து நிற்கும்.

gold-pot

தங்கம் வாங்கினால் வாங்கிய தங்கம் எப்பொழுதும் வீட்டில் தங்க வேண்டும். அடிக்கடி அடகு போவதை தவிர்க்க சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் வரக்கூடிய சப்தமி, துவாதசி, திதிகள் வரும் பொழுது விசாகம், உத்திரம், பூரட்டாதி, கார்த்திகை, உத்திராடம், புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் ஒன்று சேரும் நேரத்தில் தங்க நகை வாங்குவது நல்ல பலன்களை கொடுக்கும். திதி, நட்சத்திரம், லக்னம் இம்மூன்றும் மேற்கூறியவற்றில் ஒன்றிணையும் நேரத்தில் தங்கம் வாங்க, அடகு போகாமல் தங்க நகை எப்பொழுதும் நிலைத்து நிற்கும். வைரம், வைடூரியம் போன்ற பொருட்கள் வாங்க ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய லக்னங்களில் மிருகசீரிஷம், ரேவதி, சித்திரை, அனுஷம் நட்சத்திரங்கள் ஒன்றிணையும் நாட்களில் வாங்குவது அதிர்ஷ்டத்தை பெருகச் செய்யும்.

- Advertisement -