நாளை தீபாவளி திருநாள். நம்முடைய பாரம்பரிய முறைப்படி தீபாவளி பண்டிகையை எப்படி கொண்டாடுவது? பூஜைக்கான நல்ல நேரம் என்ன? தீபாவளி தினத்தில் நாம் செய்யவே கூடாத 1 விஷயம். அது என்ன?

diwali
- Advertisement -

நாளை தீபாவளி திருநாள். இந்த தீபாவளி திருநாள் அன்று நம் பாரம்பரிய முறைப்படி நம் வீட்டில் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பதைப் பற்றியும், கங்கா ஸ்நானம் செய்ய வேண்டிய நேரம், வீட்டில் பூஜை செய்ய வேண்டிய நேரம், கேதார கௌரி நோன்பு பற்றிய தாத்பரியம் இவைகளைப் பற்றியும், தீபாவளியோடு அம்மாவாசை சேர்ந்து வருகின்றது அல்லவா, தீபாவளி தினத்தில் முன்னோர்களுடைய வழிபாட்டை எப்படி செய்வது என்பதை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. குறிப்பாக இந்த தீபாவளி தினத்தில் நாம் செய்யவே கூடாத ஒரு தவறு எது. இந்தப் பதிவின் இறுதியில் உங்களுக்காக.

bathing

கங்கா ஸ்நானம்:
முதலில் தீபாவளி என்றாலே காலையில் நாம் செய்ய வேண்டிய விஷயம் கங்கா ஸ்நானம். தீபாவளி அன்று அதிகாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும். பாவங்களுக்கு விமோசனம் தரும் கங்காதேவி, தீபாவளி தினத்தன்று நம் எல்லோரது வீட்டிலும் இருக்கக்கூடிய வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் வாசம் செய்கின்றாள் என்பது ஐதீகம். நாளைய தினம் தீபாவளி தினத்தன்று எல்லோரும் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் வைத்து நீராடி கொள்ளவேண்டும். இது முதல் விஷயம்.

- Advertisement -

அமாவாசை தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா என்ற சந்தேகம் எல்லோரிடத்திலும் இருக்கும். தீபாவளி தினத்தோடு சேர்ந்து வரும் அமாவாசை என்பதால் இந்த நாளில் எந்த தோஷமும் கிடையாது. அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

amavasai

பூஜை செய்யும் நேரம்:
முடிந்தவரை நாளை காலை 5.30 க்கு முன்பாகவே உங்களுடைய வீட்டில் பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்த பின்பு பூஜை அறையை அலங்கரித்து வைத்து, பூஜை அறையில் குறைந்தது ஐந்து தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். அதிகபட்சம் உங்களுடைய விருப்பம் எத்தனை தீபங்கள் வேண்டுமென்றாலும் ஒற்றைப்படையில் ஏற்றிக் கொள்ளலாம். காரணம் தீப ஒளியில் கொண்டாடுவதுதான் தீபாவளி.

- Advertisement -

தீபங்களை ஏற்றி வைத்து விட்டு சுவாமிக்கு முன்பு வாழை இலையை விரித்து தீபாவளிக்கு நீங்கள் செய்த இனிப்பு பலகாரங்கள் அத்தனையையும் அந்த இலையில் வைத்து, புத்தாடைகளை வைத்து, புது துணிகளை வைத்து குல தெய்வத்தையும் உங்கள் வீட்டில் வாழ்ந்த முன்னோர்களையும் நினைத்து வழிபாடு செய்யவேண்டும். நிறைய பேருக்கு தீபாவளி பண்டிகையின் போது முன்னோர்களின் வழிபாட்டை எப்படி செய்வது என்பதில் சந்தேகம் இருக்கின்றது. காலை தீபாவளி பண்டிகையை கொண்டாடும் போது சேர்த்து முன்னோர்களையும் நினைத்து வழிபாடு செய்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வது மிக மிக நல்லது.

tharpanam

இந்த அமாவாசை தினத்தில் அவரவர் வீட்டு வழக்கப்படி தர்ப்பணம் கொடுக்கும் விஷயத்தையும் மறந்துவிடக் கூடாது என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டும். பூஜையறையில் பூஜையை நிறைவு செய்துவிட்டு நீங்கள் இறைவனுக்காக படைத்த பலகாரங்களை எல்லாம் முதலில் காகத்துக்கு வைத்துவிட்டு, அதன் பின்பு நீங்கள் சாப்பிட வேண்டும்.

- Advertisement -

amman

கேதார கௌரி நோன்பு:
சில வீடுகளில் நோன்பு இருக்கும் பழக்கம் இருக்கும். சில வீடுகளில் நோன்பு இருக்கக்கூடிய வழக்கம் இருக்காது. நோன்பு என்பது அவரவர் வீட்டு வழக்கப்படி பாரம்பரியமாக பின்பற்றி வரக்கூடிய ஒரு விஷயம். அவரவர் வீட்டு வழக்கப்படி நோன்பை கடைப்பிடிக்க வேண்டும். இந்த நோன்பின் தாத்பரியம் என்ன என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம்.

Arthanareswarar

இந்த தீபாவளி தினத்தன்று, அதாவது ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படும் இந்த கௌரி விரதம் சிவ பெருமானை நினைத்து இருக்கக்கூடிய விதமாக சொல்லப்பட்டுள்ளது. சக்தி தேவியை தான் இந்த இடத்தில் கௌரி என்ற நாமத்தை கொண்டு நாம் அழைக்கின்றோம். சிவபெருமானுடன் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தவம் இருந்து விரதம் மேற்கொண்டு, ‘சிவனில் பாதி பார்வதி தேவி’ என்ற வரப்பினை பெற்ற நாள் தான் இந்த ஐப்பசி மாத அமாவாசை நாள்.

Arthanareswarar

ஆக கணவனும் மனைவியும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நாளைய தினம் கேதார கௌரி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. பிரிந்திருக்கும் கணவன் மனைவி இந்த விரதத்தை மேற்கொண்டால் அவர்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. சிலபேர் இந்த தினத்தில் தங்கள் வீட்டில் கன்னி தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்வார்கள். சீப்பு கண்ணாடி காதோலை கருமணி போன்ற பொருட்களை வைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

mangalyam1

உங்கள் வீட்டில் நோன்பு இருக்கக்கூடிய வழக்கம் இல்லை என்றால் புதிதாக நோன்பு எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் வீட்டில் பெரியவர்களின் அனுமதியைப் பெற்று நோன்பு எடுக்கலாம் அது அவரவர் விருப்பம்.

gupera-poojai

லட்சுமி குபேர பூஜை:
குபேரருக்கு பண கஷ்டம் வந்தபோது லட்சுமி தேவியின் கைகளால் வரத்தினை வாங்கிய நாள் இந்த ஐப்பசி மாத அமாவாசை தினம். இந்த நாளில் நாம் லட்சுமி தேவியை வணங்கினால் நமக்கும் குபேர சம்பத்து கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தீபாவளி தினத்தன்று மாலை 6 மணிக்கு வீட்டில் லட்சுமி குபேர பூஜையை செய்யலாம்.

mahalakshmi1

மிக மிக சுலபமாக இந்த லட்சுமி குபேர பூஜையை வீட்டில் எப்படி செய்வது. லட்சுமி தேவியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் வீட்டில் குபேர தீபம் இருந்தால், குபேரருக்கு முன்பு குபேர தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, குபேரனுக்கு முன்பாக ஒரு தாம்பூலத்தட்டில் சில்லரை காசுகளை பரப்பி வைத்து உங்களால் முடிந்த பாலினால் செய்யப்பட்ட இனிப்பு நிவேதியத்தினை லட்சுமி தாயாருக்கு வைத்து மனதார உங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும். மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற்று விடலாம்.

mahalakshmi

பத்து நிமிடங்கள் மனதார அமர்ந்து மகாலக்ஷ்மியை நாளை மாலை 6 மணிக்கு வழிபாடு செய்யுங்கள். அந்த லட்சுமிதேவி மனப்பூர்வமாக உங்களுக்கு ஆசீர்வாதத்தை தந்து விடுவாள். பெரும்பாலும் இந்த லட்சுமி குபேர பூஜை வடமாநிலத்தவர்கள் விசேஷமாகக் கொண்டாடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

money4

குறிப்பாக இந்த தீபாவளி என்று கிடையாது. எந்த தீபாவளி அன்று அமாவாசை திதி சேர்ந்து வந்தாலும் அந்த தினத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது. இந்த தீபாவளி, நாளைக் கொண்டாடக் கூடிய தீபாவளியும் அமாவாசை திதியும் சேர்ந்து வருகின்றது. உங்கள் வீட்டில் நோன்பு எடுக்கும் பழக்கம் இருந்தாலும் சரி, பழக்கமில்லை என்றாலும் சரி, உங்கள் வீட்டில் நாளை அசைவம் சமைக்கக் கூடாது. நாளைய தினம் அசைவம் சாப்பிடுவது, வீட்டிற்கு பாவத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.

Diwali wishes in Tamil
Diwali wishes in Tamil

இறுதியாக தீபாவளி என்றால் பட்டாசு இல்லாமலா? மாலை நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடித்து இந்த தீபாவளி பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுங்கள். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

- Advertisement -