தீபாவளி விரதம் இருக்கும் முறையும் அதன் அளப்பரிய பலனும்

Diwali Nonbu

தீபாவளி திருநாளில் அமாவாசை அன்று நாம் எல்லோராலும் கடைபிடிக்கப்படும் விரதத்தை தான் கேதார கௌரி நோன்பு என்கின்றோம். இந்த கேதார கௌரி விரதம் புரட்டாசி மாதம் சுக்லபட்ஷ தசமி திதி அன்று தொடங்கப்படுகிறது. இந்த விரதத்தை 21 நாட்கள் கடைபிடிக்க வேண்டும். இந்த விரதம் பெண்களுக்கானது.

Diwali viratham

எல்லா பெண்களினாலும் இந்த விரதத்தை 21 நாட்கள் கடைப்பிடிக்க முடியாது. மாதவிலக்கு மற்றும் உடல்நலக்குறைவு உள்ள பெண்கள் இந்த விரதத்தை ஏழு நாள், ஒன்பது நாள் அல்லது மூன்று நாள் இப்படியாக கடைப்பிடிக்கலாம். மாதவிலக்கு நின்றவர்கள், உடல் ஆரோக்கியமாக உள்ள பெண்கள் இந்த விரதத்தை 21 நாட்கள் மேற்கொள்ள முடியும்.

இவை எதுவுமே முடியாமல் போனாலும் சரி கடைசி நாளான அமாவாசை திதியன்று, ஒருநாள் மட்டுமாவது பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்வது நல்லது. கணவனின் ஆயுள் நீடிக்கவும், வீட்டில் சகல செல்வங்களும், ஐஸ்வர்யங்களும் பெருகவும் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவரை வேண்டி இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

Vilakku

அடுத்ததாக இந்த விரதத்திற்கு கேதார கௌவுரி என்று பெயர் ஏன் வந்தது என்பதை பற்றி காண்போம்.

- Advertisement -

இமயமலையில் கேதாரம் என்ற இடத்தில் சிவன் சுயம்புவாக தோன்றியதாகவும், அந்த லிங்கத்தின் முன்பு பார்வதி தேவி தவம் மேற்கொண்டதனால், இதற்கு கேதார கௌரி என்று பெயர் வந்ததாக கூறுவர்.(பார்வதிதேவிக்கு மற்றொரு பெயர் கௌரி).

பார்வதி தேவி எதற்காக இந்த தவத்தினை மேற்கொண்டார் என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறிய கதை பற்றிய தொகுப்பை இப்பொழுது காண்போம்.

கைலாய மலையில் பிருங்கி முனிவர் அவர்கள் சிவனை தரிசிக்க சென்றபோது, சிவனுடன் பார்வதியும் அமர்ந்து இருந்தார்கள். ஆனால், முனிவரோ பார்வதியை விட்டுவிட்டு சிவனை மட்டும் வணங்கி வழிபட்டார். இதனைக் கண்டு கோபம் கொண்ட பார்வதி_” சிவனைப் பார்த்து ‘உங்கள் பக்கத்தில் நானும் தானே அமர்ந்துள்ளேன்! இந்த முனிவர் ஏன் தேவியான என்னை தவிர்த்து உங்களை மட்டும் வணங்கிச் சென்றார்.'” என்று கோபத்துடன் கேட்டுவிட்டு கைலாயத்திலிருந்து கௌதம முனிவர் ஆசிரமத்திற்கு சென்று விட்டார்.

munivar

ஆசிரமத்திற்கு சென்ற பார்வதி தேவி கௌதம முனிவரிடம் கைலாயத்தில் நடந்ததை கூறினார்கள். என்னவென்றால்! “சிவனுக்கு இணையான சக்தி என்னிடம் இல்லை, ஆதலால் தானே பிருங்கு முனிவர் என்னை விட்டுவிட்டு சிவனை மட்டும் வழிபட்டு சென்று விட்டார்.” நானும் சிவனின் பாதி ஆகவேண்டுமென்று தேவி அவர்கள் தன் கோபத்தை வெளி காட்டினார்கள்.

இதனைக்கேட்ட கௌதம முனிவர் புராணங்களையும், சாஸ்திரங்களையும் அலசி ஆராய்ந்து “கேதாரேஸ்வர” விரதத்தைப் பற்றி அம்பிகைக்கு கூறினார். கௌதம முனிவர் கூறியபடி அம்பிகையும் 21 நாட்கள் விரதம் இருந்து, சிவனை பூஜித்து, சிவனின் ஒரு பக்கமான , இடதுபக்கத்தில் பார்வதிதேவி அமர்ந்து அர்த்தநாரீஸ்வரராக மாறி சிவனின் பாதி ஆனார். அது மட்டுமல்லாமல் இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கப்பெற வேண்டும் என்று பார்வதி தேவி சிவனிடம் வரம் பெற்றுக் கொண்டார்.

siva lingam

இந்த நோன்பை நாம் எப்படி கடைப்பிடிப்பது?

21 இழைகளால் ஆன கயிற்றினை, 21 முடிச்சுகளை இட்டு அந்த கயிற்றை சிவலிங்கத்தின் முன்போ, அல்லது கலசத்தின் முன்போ வைத்து வழிபடவேண்டும். இதை தான் நோன்பு கயிறு என்பர். 21 நாட்கள் விரதத்தைக் கடைபிடிப்பவர்கள் சிவனுக்கு தினசரி பிரசாதங்கள் எதாவது ஆனாலும் சரி (அப்பம், சர்க்கரைப் பொங்கல், பழங்கள்) இதனை இறைவனுக்குப் படைத்து வில்வ இலைகள் அல்லது பூக்களினால் பூஜை செய்து வரவேண்டும். தினசரி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். கடைசி நாளான அமாவாசை அன்று 21 முடிச்சிட்ட கயிற்றை நாம் கையில் கட்டிக் கொள்ளலாம். நம் விரதத்தையும் அமாவாசை அன்று தான் முடிக்க வேண்டும். நம்பிக்கையுடன் நாம் செய்யும் பூஜைக்கு பலன் நிச்சயம் உண்டு.