நீங்கள் பொன் ஆபரணங்கள், புதிய சொத்துகள் வாங்க இதை செய்யுங்கள்

lakshmi

நம் அனைவரையும் கருவில் சுமந்து, பெற்றெடுத்து, வளர்த்து ஆளாக்கிய தாய் தான் நமது முதல் தெய்வம். அதை போலவே உலகில் உள்ள அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கும் இறையாற்றலை பெண் தெய்வமாக வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அந்த பெண் தெய்வங்கள் நமக்கு வேண்டிய வரங்களை அளிக்க செய்யும் ஒரு வழிபாட்டு முறை தான் விரதம் இருக்கும் முறை. அந்த வகையில் தேவி விரதம் மேற்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Goddess Lakshmi

இந்த தேவி விரதத்தை சித்திரை மாதத்தில் வருகிற வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் மேற்கொள்ளவேண்டும். தேவி விரதம் மேற்கொள்ளும் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, ஆகாரம் ஏதும் அருந்தாமல் உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கும் லட்சுமி தேவி படத்திற்கு வாசமுள்ள பூக்கள் சாற்றி, இரண்டு குத்துவிளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி வைக்க வேண்டும்.

பின்பு சுத்தமான சர்க்கரை மற்றும் இனிப்புகளை நிவேதனம் வைத்து பூஜையறையிலேயே அமர்ந்து லட்சுமி தேவி மற்றும் சுக்கிரன் பகவானுக்குரிய மந்திரங்களை, துதிகளை 108 எண்ணிக்கை வரை உரு ஜெபிக்க வேண்டும். பிறகு அன்றைய தினம் முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். சாப்பிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

mahalakshmi

பின்பு மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கும், லட்சுமி தேவிக்கும் துளசி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்பு வீட்டிற்கு திரும்பியதும் பூஜையறையில் அலங்கலரிக்கப்பட்டிருக்கும் லட்சுமி தேவியை வழிபட்டு, நைவேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரை, இனிப்புகளை பிரசதாமாக சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

- Advertisement -

mahalakshmi

சித்திரை மாதத்தில் இந்த தேவி விரதத்தை மேற்கொள்வதால் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் உடல், மனநலம் சிறப்பாக இருக்கும். உங்களின் தொழில், வியாபாரங்கள் சிறப்படைந்து மிகுந்த லாபங்கள் ஏற்படும். கணவன் மனைவி இணைபிரியாமல் வாழ்வார்கள். கடன்கள் அனைத்தையும் விரைவில் கட்டி முடிக்கும் அமைப்பு ஏற்படும். பொன் ஆபரணங்கள், அசையா சொத்துகள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தை தரித்திர நிலை பீடிக்காமல் காக்கும்.

இதையும் படிக்கலாமே:
பண முடை நீங்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Devi vratham in Tamil. It is also called as Lakshmi devi valipadu in Tamil or Devi pooja in Tamil or Kadan theera in Tamil or vratham palangal in Tamil.