இந்த 1 பொருளை தானமாகக் கொடுத்தால் போதுமே! வாழ்க்கையில் செய்த அத்தனை பாவத்திற்கும் விமோசனம் கிடைத்து, மோட்சத்தை அடைந்து விடலாம்.

temple-magic
- Advertisement -

பாவம் செய்தால் அதற்கு பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று நினைத்து யாருமே பாவத்தை செய்யக்கூடாது. அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்திற்குத் தான் பாவவிமோசனம் கொடுக்கப்படும். தவிர, தெரிந்தே  அறிந்தே செய்த பாவங்களுக்கு என்றைக்குமே மன்னிப்பு கிடையாது. அதற்கான தண்டனையை நாம் அனுபவித்து தான் ஆகவேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் செய்த கர்ம வினைகளுக்கு பலன்களை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தால், அதை தீர்ப்பதற்கு ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரத்தை செய்யலாம், எந்த பொருட்களை வாங்கி அடுத்தவர்களுக்கு தானமாகக் கொடுக்கலாம் என்பதைப் பற்றிய சில குறிப்புகளை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

temple

மனிதப்பிறவியை எடுத்து இருக்கின்றோம். நிச்சயமாக ஏதோ ஒரு பாவம் செய்திருக்கின்றோம். இதிலிருந்தே தெரிகிறது அல்லவா? கர்மவினைகளை கரைப்பதற்காக இருக்கக்கூடிய அவதாரம் தான் மனிதப்பிறவி. இதிலிருந்து எப்படி மோட்சத்தை அடைவது? உங்களால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்துகொண்டே இருக்க வேண்டும். உங்களால் இயலாத போதும் அடுத்தவர்களுக்கு செய்யக்கூடிய உதவி உங்களையும் உங்களுக்கு அடுத்து வரக்கூடிய பரம்பரையையும் காக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

- Advertisement -

அது பொதுவானது. அடுத்தபடியாக கோவில்களில் இருக்கும் தீபங்கள் அணையாமல் எறிய நல்லெண்ணெய் வாங்கி தானம் கொடுக்க வேண்டும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அடுத்தபடியாக கோவில்களில் இறைவன் சன்னிதானத்தில், இறைவன் சந்நிதானத்திர்க்கு நேர் எதிராக பெரிய அளவில் கண்ணாடிகள் வைக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட கண்ணாடிகளை கோவில்களுக்கு தானமாக கொடுப்பது மிகவும் நன்மை தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

god

நீங்கள் வாங்கிக் கொடுத்த கண்ணாடியில் தினம் தினம் இறைவனின் பிம்பம் விழும் போது, நம்முடைய பாவங்கள் குறையும். இதேபோல் கோவிலுக்கு சென்று அங்கு வரக்கூடிய சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ பழத்தோடு சேர்த்து சிறிய கண்ணாடியை தானமாக கொடுக்கலாம். இதுவும் நன்மையை கொடுக்கும்.

- Advertisement -

அந்த காலத்தில் பெரிய பெரிய அரசர்கள் புண்ணியத்தைத் தேடிக் கொள்வதற்காக நமக்கு உயர்ந்த கோபுரங்கள் கொண்ட கோவில்களை கட்டி கொடுத்துள்ளார்கள். இன்றளவும் அந்த கோபுரங்கள் சாட்சியாக உயர்ந்து நிற்கின்றது. அவர்களின் பெயரும் புகழும் அந்த கோபுரத்திற்கு பின்னால் மறைந்து, உயர்ந்து உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அவர்களுடைய நலனுக்காகவும் அவர்களுடைய நாட்டு மக்களின் நன்மைக்காகவும், அவர்கள் செய்த புண்ணிய காரியங்களில் வரிசையில், கோவில்கள் கட்டியதும், கோவில்களுக்கு அருகில் குளங்கள் வெட்டியதும் முதலிடத்தைப் பிடிக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

temple

முடிந்த அளவு இயலாதவர்களுக்கு உதவி செய்வதோடு, சேர்த்து உங்களுடைய ஊர்களில் இருக்கும் பழமை வாய்ந்த கோவில்களை புதுப்பிப்பதற்கு உங்களால் முடிந்த முயற்சியை, உங்களால் முடிந்த உதவியை செய்து வாருங்கள். உங்கள் வாழ்வின் மோட்சம் கிட்ட இது ஒரு சுலபமான வழியும் கூட என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பூஜையை 21 நாட்கள், இப்படி செய்தால், 21வது நாள் உங்கள் வேண்டுதல் நிறைவேறுவது உறுதி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -