பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பூஜையை 21 நாட்கள், இப்படி செய்தால், 21வது நாள் உங்கள் வேண்டுதல் நிறைவேறுவது உறுதி.

நம்முடைய ஆசைகளை, நம்முடைய வேண்டுதலாக இறைவனிடம் எத்தனையோ வழிபாட்டு முறைகளில் வைத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அதில் சில வேண்டுதல்களை இறைவனும் நிறைவேற்றிக் கொண்டுதான் வருகின்றான். ஆனாலும் ஒரு சில வேண்டுதல்கள் நிறைவேற கொஞ்சம் நேரம் எடுக்கும். உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது நிறைவேறாத வேண்டுதல் இருந்தால், அந்த இறைவனை இந்த முறைப்படி பிரம்ம முகூர்த்த நேரத்தில் இப்படி வழிபாடு செய்து பாருங்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆசி வழங்கி உங்களது வேண்டுதலை நிறைவேற்ற உங்கள் இல்லம் தேடி வருவார்கள் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இந்த வழிபாட்டிற்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு.

முப்பத்து முக்கோடி தேவர்களும் மகாலட்சுமியும் வாசம் செய்யக் கூடிய பசு மாட்டையும் கன்றையும் வைத்துதான் இந்த பூஜையை செய்யப் போகின்றோம். கோமாதா பூஜை கோ பூஜை என்றும் இதை சொல்லலாம். ஆனால் சூரிய உதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அந்த 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் இந்த பூஜையை நீங்கள் உங்களுடைய வீட்டில் நிறைவு செய்திருக்க வேண்டும்.

21 நாட்கள் கொஞ்சம் சிரமம் பார்க்காதீர்கள். உங்களுடைய வீட்டில் இந்த பூஜை செய்ய கோமாதாவின் சிலை அல்லது படம் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த பூஜையை வெள்ளிக்கிழமை அன்று தொடங்குவது சிறப்பானது. காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் உள்ள ஸ்வாமியின் படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, கோமாதாவின் திருஉருவ சிலைக்கு வாசனை மிகுந்த பூக்களைச் சூட்டி விட வேண்டும். உங்கள் வீட்டு வழக்கப்படி உங்கள் வீட்டில் என்ன தீபம் ஏற்றுவீர்களோ, ஒரு தீபம் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றி வைத்துக் கொள்ளலாம். முடிந்தவர்கள் நெய் தீபம் ஏற்றலாம். தீபம் ஏற்றும்போது குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு ஏற்றுங்கள்.

komatha-tm

அதன் பின்பு கட்டாயமாக கோமாதாவுக்கு இரண்டு வாழைப்பழம் அல்லது, வெல்லம் கலந்த பச்சரிசி மாவு உருண்டை அல்லது அகத்திக்கீரை இந்த மூன்று பொருட்களில் ஒன்றை நைவேத்தியமாக வைக்க வேண்டும். மூன்றையும் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மூன்றில் ஏதாவது ஒன்றை வைத்தால் போதும். இந்த பூஜை முடிந்தவுடன், சூரிய உதயத்திற்குப் பின்பு அன்றைய தினமே ஒரு பசு மாட்டிற்கு நைவேத்தியமாக வைத்த அந்தப் பொருளை சாப்பிடக் கொடுத்து விட வேண்டும்.

- Advertisement -

தீபம் ஏற்றி வைத்துவிட்டு கோமாதாவிடம் உங்கள் வேண்டுதலை மனதார சொல்லுங்கள். அதன் பின்பு இந்த மந்திரத்தை ஒருமுறை உச்சரித்தால் போதும். முடிந்தவர்கள் 3 முறை உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை கட்டாயம் உச்சரிக்க வேண்டும். வேண்டுதலை நிறைவேற்றி தரக்கூடிய மந்திரம் இது.

panjakavya-vilakku-komatha

ஓம் சுப காயை வித்மஹே
காமதாத்ரியை ச தீமஹி
தந்தோ தேனு ப்ரசோதயாத்!

saraswathi-komatha-cow

மூன்று வரி மந்திரம் தான். உங்களுடைய எப்பேற்பட்ட வேண்டுதலாக இருந்தாலும், உங்களுடைய முழு முயற்சியும், ஈடுபாடும் உங்களிடம் இருந்தால், அந்த வேண்டுதல், அந்த முயற்சி நிச்சயமாக 21 நாட்களில் நிறைவேறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. பூஜையைச் செய்துவிட்டு வேண்டுதல் நிறைவேற தேவையான முயற்சிகளை எடுக்காமல் தானாக உங்களுடைய வேண்டுதலும் ஆசைகளும் நிறைவேறி விடும் என்று நினைப்பது மிகவும் தவறான ஒன்று.

praying-god

உங்களுடைய குழந்தைகளுக்கு திருமணம் ஆக வேண்டும். கடன் தொல்லை தீர வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். அரசாங்க வேலை கிடைக்க வேண்டும். இப்படி நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கண்ணுக்குத்தெரியாத வாஸ்து தோஷத்தால், வீட்டில் வரக்கூடிய பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு கூட ஒரே நாளில் தீர்வை கொடுக்கும் அதிசக்தி வாய்ந்த பரிகாரம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.