பன்னீர் பட்டர் மசாலாவை தாபா ஸ்டைலில் ஒரு முறை இப்படி செய்து கொடுங்கள்.இதன் சுவையில் உங்கள் குழந்தைகளின் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது

paneer-butter-masala
- Advertisement -

வளர்கின்ற குழந்தைகளுக்கு புரதச்சத்து மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. அது பன்னீர், பட்டர் இது போன்ற உணவுகளில் அதிக அளவு நிறைந்திருக்கிறது. இதனை குழந்தைகள் சாப்பிட அவர்கள உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கிறது. ஆனால் சுவையை மட்டுமே விரும்பும் குழந்தைகளுக்கு இதனை ஹோட்டல்களிலும், தாபாக்களிலும் செய்யக் கூடிய அதே சுவையில் செய்து கொடுத்தால் சலிக்காமல், தட்டாமல் விருப்பமாக சாப்பிடுபவர்கள். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளபடி சரியான பக்குவத்தில், இதே முறையில் செய்தால் தாபாவில் செய்யும் அதே சுவையில் பன்னீர் பட்டர் மசாலாவை நீங்களும் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

butter-vennai

தேவையான பொருட்கள்:
பன்னீர் – 250 கிராம்,பட்டர் – 5 ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன், தனி மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், தனியாத்தூள் – 3 ஸ்பூன், கரம் மசாலா – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரன்றரை ஸ்பூன், பட்டர் – 3 ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், லவங்கம் – 4, ஏலக்காய் – 4, பிரியாணி இலை – 2, பட்டை சிறிய துண்டு 2 துருவிய இஞ்சி துருவிய இஞ்சி – ஒரு ஸ்பூன், துருவிய பூண்டு – ஒரு ஸ்பூன், தயிர் – 2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் பன்னீரை சதுர வடிவில் வெட்டிக் கொண்டு, அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொண்டு, அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா மற்றும் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அனைத்தையும் நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் ஒரு பேனை அடுப்பின் மீது வைத்து, இரண்டு ஸ்பூன் பட்டர் சேர்த்து அதில் கலந்து வைத்துள்ள பன்னீர் அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

panner-paneer

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய், 3 ஸ்பூன் பட்டர் சேர்க்கவேண்டும். இவை நன்றாக காய்ந்ததும் அதில் பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், லவங்கம், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் துருவிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் 2 தக்காளியை மிக்ஸியில் பேச்சு பதத்திற்கு அரைத்து அதனையும் இவற்றுடன் சேர்த்து வதக்கவேண்டும் பிறகு மஞ்சள்தூள் தனியாத்தூள் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்னர் இவற்றுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து ஒரு முறை வதக்கி விட்டு இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும்,

இவற்றிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்த உடன் இவற்றுடன் வறுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து, அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையும் சேர்த்து, நன்றாக கலந்து விட்டு, 2 நிமிடம் மூடி போட்டு வேகவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பட்டர் மசாலா தயாராகிவிட்டது. இதனை இட்லி, தோசை அல்லது சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு பாருங்கள். அசத்தலான சுவையில் இருக்கும்.

- Advertisement -