ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்து விலக வேண்டும் என்றால் அதற்கு அவருக்கு தனமும் தானியமும் நன்றாக கிடைக்க வேண்டும். தனம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக உழைக்க வேண்டும். அப்படி உழைக்கும் பட்சத்தில் அந்த உழைப்பினால் சம்பாதிக்கக்கூடிய பணத்தை வைத்து தனம் பெருக ஆரம்பிக்கும். தனம் பெருகும் பொழுது நம்முடைய வீட்டிற்கு தேவையான தானியங்களையும் நம்மால் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். தனம் தானியம் பெருக வேண்டும் என்பதற்காக பலரும் மகாலட்சுமி தாயை வழிபாடு செய்வார்கள். மகாலட்சுமி தாய்க்கு இழந்த ஐஸ்வரியத்தை திரும்ப கொடுத்தவர் சிவபெருமாள் என்பதால் நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு கூடுதல் சிறப்பு உண்டாகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தன தானியம் பெருக சிவபெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
தனதானியம் பெருக வழிபாடு
ஐஸ்வர்யம் நிறைந்த மகாலட்சுமி தாய்க்கு இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அனைத்து விதமான ஐஸ்வர்யத்தையும் இழந்துவிட்டார்கள் என்றும் அந்த சமயத்தில் வில்வ மரத்துக்கு அடியில் அமர்ந்து சிவபெருமானை நினைத்து தவம் செய்து இழந்த ஐஸ்வர்யத்தை திரும்ப பெற்றார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோன்று குபேரரும் சிவபெருமானை நினைத்து தவமிருந்து தான் குபேர சம்பத்தை பெற்றார் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் ஐஸ்வர்யத்தை தந்த சிவபெருமானை நாமும் வழிபாடு செய்யும் பொழுது நமக்கும் அனைத்து விதமான செல்வ செழிப்பும் உண்டாகும்.
சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு அனைத்து நாட்களும் உகந்த நாட்கள் தான் என்றாலும் உத்திர நட்சத்திரம் மற்றும் பூச நட்சத்திர வரக்கூடிய நாட்கள் மிகவும் சிறப்பு மிகுந்த நாட்களாக கருதப்படுகின்றது. அதிலும் குறிப்பாக தனதானியம் பெருக வேண்டும், விவசாயத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த இரண்டு நட்சத்திரங்களும் அதி அற்புதமான நட்சத்திரங்களாக திகழ்ந்தனர். இந்த நட்சத்திரங்கள் வரக்கூடிய நாட்களில் சிவபெருமானுக்கு கரும்புச் சாறை அபிஷேகத்திற்காக வாங்கி தர வேண்டும்.
இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் நாம் கரும்புச்சாறு கேட்கும் பொழுது அதில் இஞ்சி, எலுமிச்சம் பழம் போன்ற பொருட்களை வைத்து கரும்புச்சாறு தயார் செய்வார்கள். ஆனால் அபிஷேகத்திற்கு இஞ்சி, எலுமிச்சம் பழம் போன்றவற்றை வைத்து கரும்புச்சாறு தயார் செய்யக்கூடாது என்பதால் கரும்பு சாறு தயார் செய்யும் இடத்தில் அபிஷேகத்திற்காக வேண்டும் இஞ்சி, எலுமிச்சம் பழம் வைக்க வேண்டாம் என்று கூறி சுத்தமான கரும்புச்சாறை வாங்கி இந்த நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு எடுத்து சென்று அபிஷேகம் செய்ய சொல்லி தர வேண்டும்.
மேலும் அந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டு அபிஷேகம் நிறைவடைந்த பிறகு சிவபெருமானுக்கு வில்வமாலை, பூமாலை போன்றவற்றை வாங்கி கொடுத்து தங்களின் பெயரில் அர்ச்சனை செய்ய சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வறுமை நிலை முற்றிலும் நீங்கி சிறப்பாக வாழ முடியும். விவசாயம் செய்பவர்களுக்கு அவர்களுடைய விவசாயம் செழிப்பாக நடைபெறும்.
இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப கிடைக்க கோவில் வழிபாடு
வறுமை நிலை முற்றிலும் நீங்கி தனதானியத்துடன் சிறப்பாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையில் சிவபெருமானை வழிபாடு செய்ய விரைவிலேயே தனதானியம் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.